ரஷ்ய நிலக்கரி இறக்குமதி நிறுத்தம்…ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா அதிரடி முடிவு

ரஷ்ய நிலக்கரிக்கு முற்றிலுமாக தடை 8 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள வர்த்தகம் பாதிப்பு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்தி உள்ளனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பல்வேறு பொருளாதார நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த வகையில் பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து … Read more

உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 59.19 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.44 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 56.37 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முகப்பேரில் போக்குவரத்து தலைமை பெண் காவலரின் மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: புளியந்தோப்பு போக்குவரத்து தலைமை பெண் காவலர் கலைவாணியின் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்தியாவில் நுழையும் கனடா நாட்டின் கம்பெனி… காபி பிரியர்களுக்கு கொண்டாட்டம்!

காபி என்பது இந்தியர்கள் மிகவும் விரும்பி அருந்தும் ஒரு பானம் என்பதும் காலை எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலான இந்தியர்களுக்கு உள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியர்களின் காபி தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே பல இந்திய காபி தயாரிக்கும் நிறுவனங்களும் ஒரு சில வெளிநாட்டு காபி நிறுவனங்களும் உள்ளன. அந்த வகையில் தற்போது ஒரு கனடா நிறுவனம் இந்திய காபி சந்தையில் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடா காபி நிறுவனம் கனடா … Read more

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து… `சக்திமான்’ முகேஷ் கன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

90’s கிட்ஸ்களின் பேவரைட் தொடர்களில் ஒன்று சக்திமான். அப்போது முதல் இப்போது வரை சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணாவின் நடிப்பின் தாக்கம் எல்லா 90’s கிட்ஸ்களிடமும் இன்னும் இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை. இப்படி மக்களிடம் பிரபலமான சக்திமான் புகழ் நடிகர் முகேஷ் கண்ணா பீஸ்ம் ​​இன்டர்நேஷனல் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் அவ்வப்போது சில கருத்துகளைப் பேசி வீடியோவாக பதிவிடுவது வழக்கம். சக்திமான் அப்படி சமீபத்தில் பேசி வெளியிட்ட வீடியோ சர்ச்சையாகியுள்ளது. அந்த வீடியோவில், … Read more

வங்கி வாசலில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!

தினமும் 5 மணிநேரம் வங்கிக்கு வெளியே பிச்சை எடுக்கும் பெண்மணிக்கு லாட்டரி ஜாக்பாட் கிடைத்தது. ஸ்பெயினின் அலிகாண்டே தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒரு பெண்மணிக்கு இந்த வாரம் $1.3 மில்லியன் லாட்டரி ஜாக்பாட் கிடைத்தது. லா புளோரிடாவின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு வங்கியின் முன் மற்றும் அருகிலுள்ள பல்பொருள் அங்காடியில் பிச்சை எடுப்பதாக கூறப்படும் அப்பெண், கடந்த வியாழக்கிழமை ஒரு புகையிலை கடையில் லொட்டரி டிக்கெட்டை வாங்கினார். நேரத்தை கடத்துவதற்காக அடிக்கடி அந்த புகையிலைக் கடைக்கு வந்து, … Read more

இன்று குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

புதுடெல்லி: குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்க உள்ளார். கடந்த 6-ஆம் தேதி நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்க உள்ளார். 14-வது குடியரசு துணைத் தலைவராக பதவி ஏற்க உள்ள ஜெகதீப் தன்கருக்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார் இந்திய வீரர் ஜிசோ நிதி

பர்மிங்காம்: காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் ஜிசோ நிதி வெண்கலம் வென்றார். லண்டனில் நேற்று முன் தினம் தொடங்கிய காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் தொடர், 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

புதுச்சேரி – கடலூர் ரயில் சேவை திட்டத்திற்கு வாரியம் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி – கடலுார் இடையே ரயில் போக்குவரத்து திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, திட்ட வரைவுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது என கவர்னர் தமிழிசை பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபை பட்ஜெட்கூட்டத் தொடர் உரையில் அவர் பேசியதாவது: புதுச்சேரி – கடலுார் இடையே ரயில் போக்குவரத்து திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, திட்ட வரைவுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. இதில் இறுதிநிலை … Read more

25 ஆண்டுகளாக Parle-G பிஸ்கட் விலை ரூ.5 தான். … எப்படி சாத்தியம்?

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிஸ்கட்டுகள் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என்பதை நான் சொல்லவே தேவையில்லை. அதிலும் குறிப்பாக பல ஆண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள Parle-G பிஸ்கெட் சாப்பிடுவது என்பது ஒரு தனி பிரியம் தான். அந்த வகையில் 25 ஆண்டுகளாக Parle-G நிறுவனம் விலையை ஏற்றாமல் ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் தருவது ஆச்சரியமான ஒன்றாகும். ஆனால் இதில் இருக்கும் ஒரு டெக்னிக்கையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்ன என்பதை … Read more