பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி: பஞ்சாபில் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாக ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அமோக வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பகவந்த் மான் இருந்து வருகிறார். இந்த ஆட்சியை கவிழ்க்கும் வகையில், பாஜக, ஆம்ஆத்மி  எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க  திட்டமிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.  ஆம் … Read more

ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு

மஸ்கட்: ஓமன் நாட்டின் மஸ்கட் விமான நிலையத்தில் கொச்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. என்ஜின் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி தேவை| Dinamalar

பெங்களூரு : ”நீர்ப்பாசன திட்டங்களை முடிக்க, 1.02 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி தேவைப்படும்,” என நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள், சட்டசபையில் தெரிவித்தார்.கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் நரேந்திரா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் கூறியதாவது:எங்கள் துறைக்கு, 18 முதல், 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. ஆனால் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற, 1.02 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கிடைக்கும் நிதியுதவியை கொண்டு, படிப்படியாக பணிகள் நடத்தப்படுகின்றன. … Read more

இனி தேவையில்லை.. இளவரசர் சார்லஸ்-க்கு சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்.. !

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனான 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராகியுள்ளார். இதற்கிடையில் இளவரசர் சார்லஸுக்கு காலம் காலமாக சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் இருளில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தி கார்டியன் அறிக்கையின் படி, செப்டம்பர் 8 அன்று ராணி எலிசபெத் மறைந்த பிறகு, டஜன் கணக்கான கிளாரன்ஸ் ஹவுஸ் ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக … Read more

வேலூர்: நிழற்குடை கட்டி முடித்தும் பயனில்லை… சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட நெல்வாய், சாத்து மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக புதிதாக பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சாத்து மதுரை பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பதற்கு முன்பு, வேறு இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன. ஆனால் அந்த இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் இல்லை. நிழற்குடைகள் அமைத்த பின்பு பேருந்துகள் அங்கு நிற்கும் என எதிர்பார்த்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், புதிதாக அமைத்த நிழற்குடைகளுக்கு அருகில் பேருந்து … Read more

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்!

இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் திண்டுக்கல்லில் கட்டப்பட்ட மறுவாழ்வு முகாம் காணொளி மூலம் திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மாவட்டம் திண்டுக்கல்லில் இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து, இலங்கை தமிழர்களுக்காக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 17.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. தலா 300 சதுர அடியில் … Read more

மோகனன் பள்ளி மதமாற்றம் விவகாரம்: ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பித்தது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

சென்னை: ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோகனன் பள்ளி மதமாற்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தமிழகஅரசு தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.  85பக்கம் கொண்ட அறிக்கையியில் மதமாற்றம் தொடர் பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சி.எஸ்.ஐ. மோகனன் மகளிர் பள்ளி விடுதியில், தங்கி படித்துவரும் ஏழை மாணாக்கர்களிடம் மதமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டு வருவதாக புகார் … Read more

அக்.2 முதல் காஷ்மீரில் முதல் முறையாக மின்சார ரயில் சேவை

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் முதல் முறையாக மின்சார ரயில் சேவை வரும் காந்தி ஜெயந்தி (அக்.2) அன்று முதல் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. 137 கி.மீ நீளமுள்ள பனிஹால்-பாரமுலடலா வரை இயக்கப்படுகிறது.

கோவா காங்கிரஸ் கூண்டோடு காலி! சக்சஸானது ஆபரேஷன் தாமரை- 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்!

India oi-Mathivanan Maran பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் கட்சி கூண்டோடு காலியாகிவிட்டது. அம்மாநிலத்தில் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டனர். காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் உட்கட்சி மோதல்களால் கோவாவில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல்களால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகதான் ஆதாயம் அடைந்து வருகிறது. அண்மையில் கோவா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கோவா சட்டசபை நிலவரம் 40 இடங்களைக் கொண்ட … Read more

பெண்ணுக்கு கத்தி குத்து வாலிபர் தற்கொலை முயற்சி| Dinamalar

ராம்நகர் : காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.ராம்நகர், சென்னபட்டணாவின், கோட்டை லே — அவுட்டின், வரதராஜ சுவாமி கோவில் அருகில் வசிக்கும் மேகனா, 20 என்ற பெண், மொபைல் போன் ஷோ ரூம் ஒன்றில் பணியாற்றுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே ஷோரூமில் வெங்கடேஷ், 27, பணியாற்றினார். மேகனாவை ஒரு தலையாக காதலித்த வெங்கடேஷ், பல முறை தன் காதலை வெளிப்படுத்தினார். அவர் மறுத்தும் விடாமல் தொந்தரவு … Read more