செம்மரம், செர்ரி, அத்தி, பலா… `இப்படியொரு மரம் வளர்ப்பு பண்ணையை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க!'
விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட பலரும், இயற்கை முறையில் நெல் சாகுபடி, கொய்யா சாகுபடி, மலர் சாகுபடி என அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இணைகிறார் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றும் ராஜீவ்காந்தி. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டைக்கு அருகிலுள்ள, காளிகாபுரம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை முறை வாழ்க்கை மற்றும் மரங்களின் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக மர விவசாயமும் அதனுடன் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயமும் செய்து வருவதாக … Read more