குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல்….
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள் முன்னிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். துணை குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். … Read more