வெளிநாட்டினர் விளம்பரங்களில் நடிக்க நைஜீரிய நாட்டு அரசு தடை

அப்யூஜா: நைஜீரிய நாட்டில் வெளிநாட்டினர் மாடல்களாக விளம்பரங்களில் நடிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்க, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு ஊடகங்களில் குரல் பதிவுக்கும் நைஜீரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் உட்பட தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ(90) உடலநலக்குறைவால் உயிரிழந்தது, குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ, கடந்த சனிக்கிழமையன்று இத்தாலியிலுள்ள அவரது வீட்டில் காலமானார். இறுதிச் சடங்குகள் … Read more

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இரண்டு தமிழர்கள் செய்த அசத்தலான சாதனை! குவியும் பாராட்டுகள்

லண்டன் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழர்கள். பிரமோத்குமார், ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் குவியும் பாராட்டு  லண்டனில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தமிழர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி நடக்கிறது. அந்த போட்டி கடந்த மாதம் நடந்தது. போட்டியில் இந்தியா சார்பில் 160 பேர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். லண்டனில் தொடங்கி ஸ்காட்லாந்து தலைநகரான இடின்பராக் வரை … Read more

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த 9ம் வகுப்பு மாணவர்கள்! இது ஜார்கண்ட் களேபரம்…

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் தோல்வி அடைந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் படித்து வந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இநத சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்துக்கு தலைகுனியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநில கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள ஒரு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், … Read more

திருச்சி – கல்லணை இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பேருந்துகள் செல்ல தடை

திருச்சி : திருச்சி உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் திருச்சி – கல்லணை இடையே பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கொள்ளிடத்தில் 1.95 லட்சம் நீர்வரத்து உள்ளதால் உத்தமர்சீலி தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

எல்லை பதற்றத்தை தணிக்க கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

India oi-Mathivanan Maran ஶ்ரீநகர்: எல்லைகளில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருகிறது. … Read more

இந்தியாவில் புதிதாக 7,946 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் மேலும் 7,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,946 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,44,36,339 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 9,828 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,38,45,680 ஆனது. தற்போது 62,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் … Read more

“மாநிலத்தின் சாபக்கேடு நீங்கள்; என் செருப்பளவுக்குக் கூட…!" – பி.டி.ஆர் மீது அண்ணாமலை தாக்கு

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் உட்பட 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் விமான நிலையத்தில் அவரின் கார் மீது செருப்பை வீசினர். அரசியல் வட்டாரங்களில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த நிலையில், … Read more

உடல் முழுவதும் தங்க நகைகள்! அப்படியே புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம்.. புகைப்படங்கள்

தங்க நகைகளுடன் சேர்த்து புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்ணின் சடலம். 6500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என கண்டுபிடிப்பு. ருமேனியாவில் உள்ள கல்லறையில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரும் கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் இதை கண்டுபிடித்துள்ளனர். குறித்த பெண்ணின் உடல் எலும்புகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட போது உடன் இந்த நகைகள் சேர்ந்து புதைக்கப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் கேப்ரியல் மொய்சா கூறியுள்ளார். எலும்புக்கூட்டின் … Read more

ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை! ஜெய்ராம் ரமேஷ்

சென்னை: ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமைக்கான யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி  குமரியில் தொடங்குகிகறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையான, இது சுமார் 3500 கிலோ மீட்டர் தூரமாகும். இதை  150 நாட்களில்  கடக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்கான … Read more