சென்னை வடபழனியில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்மாயில் மற்றும் பரத் ஆகியோரை போலீசார் கைது செய்து ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி; வங்கதேசம் எல்லையில் கைது இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி; வங்கதேசம் எல்லையில் கைது புதுச்சேரி : சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை மாகி போலீசார் வங்கதேசம் எல்லையில் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம், மாகியில் பல மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான பணி புரிகின்றனர். இங்கு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தங்கி, கட்டட பணி செய்தனர். இவர்களுடன் தங்கி இருந்த 17 வயது பெண், 3 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விசாரித்ததில், அப்பெண்ணை … Read more

விருதுநகர்: ஆன்லைன் லோன்; ஆபாச படம்; தொழிலதிபரிடம் மோசடி – கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்ட பணம்?!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஆன்லைன் கடன் ஆப் மூலமாக 18 லட்சத்து 15 ஆயிரத்து 991 ரூபாயை மர்மகும்பல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த குறித்து போலீஸிடம் பேசினோம், “விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் விரிவாக்கத்திற்காக சிலரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு வேண்டியத்தொகை கிடைக்காததால் ஆன்லைனில் உடனடி கடன் ஆப் மூலமாக … Read more

ரஷ்யா சக்திவாய்ந்த சுகந்திர உலக சக்தி…கொடி தினத்தில் ஜனாதிபதி புடின் அறிவிப்பு

அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யும் கொள்கைகளை மட்டுமே சர்வதேச அரங்கில் ரஷ்யா பின்பற்றும். கொடி தினத்தில் ரஷ்யாவை சக்திவாய்ந்த சுகந்திர உலக சக்தியாக விவரித்தார் ஜனாதிபதி புடின். ரஷ்யா தனது அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யும் கொள்கைகளை மட்டுமே சர்வதேச அரங்கில் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது என்று ஜனாதிபதி புடின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 179 வது நாளாக தொடரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தென்கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் … Read more

சென்னையில் கனமழை – விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக, துபாய், பக்ரைன் மற்றும் லக்னோ விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்ற விமானங்களும் தாமதமாகியது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,471,729 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.71 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,471,729 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 600,803,768 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 575,064,562 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 43,912 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Smartphone-ல் மிக வேகமாக சார்ஜ் ஏறனுமா? இதை செய்யுங்க

ஸ்மார்ட்போன் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. நமது பல அத்தியாவசிய வேலைகளை ஸ்மார்ட்போன் மூலமே செய்து விடுகிறோம். பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தங்களின் ஸ்மார்ட்போனில் சார்ஜ் மெதுவாக ஏறுகிறது என்பது தான். சில ஸ்மார்ட் டிரிக்ஸ் பயன்படுத்தி போனில் சார்ஜ் வேகமாக ஏறுவதை உறுதிப்படுத்த முடியும். USB போர்ட் சார்ஜிங் போன் சார்ஜ் செய்வதற்கு கணினி அல்லது USB போர்ட்டைப் பயன்படுத்தினால், வேகமாக சார்ஜ் ஆகாது. அதாவது கணினியில் USB போர்ட் பயன்படுத்தி உங்கள் … Read more

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு அட்டவணை வெளியீடு

சென்னை: 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் … Read more

ஜெர்மன் அதிபருடன் புகைப்படம் எடுத்த பெண்கள்: திடீரென மேலாடையை கழற்றி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு!

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் முன்பு அரைநிர்வாணமாக நின்ற பெண் போராட்டக்காரர்களால் பரபரப்பு. ரஷ்ய எரிவாயு இறக்குமதிக்கு தடை விதிக்க கோரி கோஷம் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் முன்பு திடீரென தங்களது ஜெர்சியை கழற்றி இரண்டு பெண்கள் அரைநிர்வாணமாக நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உடன் செல்ஃபி புகைப்படம் எடுக்க முற்பட்ட இரண்டு பெண்கள் திடீரென தங்களது மேலாடை ஜெர்சியை கழற்றி அரைநிர்வாணமாக நின்றதோடு மட்டுமில்லாமல் ரஷ்யாவிற்கு … Read more

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஜம்மு, காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று காலை ஊடுருவல் முயற்சி நடந்தது. ஊடுருவும் முயற்சியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கவனித்து விட்ட இந்திய ராணுவ வீரர்கள், அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் அந்த நபர் காயமடைந்து அங்கிருந்து ஓடிவிட்டார். தினத்தந்தி