“எங்களைக் கொலை செய்ய ப்ளான் பண்ணினார்… நாங்க முந்திக்கிட்டோம்” – 2 சிறார்களின் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி பிரையண்ட்நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பெயின்டரான சரவணகுமார், தாளமுத்துநகரில் வசித்து வந்த நிலையில், அங்குள்ள சிலருடன் அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு குடும்பத்துடன் பிரையண்ட்நகரில் வந்து குடியேறியுள்ளார். கொலை செய்யப்பட்ட சரவணகுமார் இந்த நிலையில், நேற்றுமுந்தினம் இரவு சுமார் 10 மணியளவில் தனது உறவினர் சிவாவை மதுரைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக … Read more

விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு: டெல்லியில் போலீஸ் குவிப்பு

டெல்லி: விவசாயிகள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்லியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உரிய முறையில் அமலாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் விவசாய அமைப்புகள் இன்று போராட்டம் நடத்த உள்ளன. டெல்லி – ஹரியானா எல்லைப் பகுதியான டிக்ரியில் விவசாயிகள் வருகையை தடுக்க காவல் துறையினர் தடுப்புகளை வைத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே 40 மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீச்சு

கோவை: மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் அருகே 40 மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட்டை வீசி சென்றனர். ராஜ்குமார் என்பவர் பராமரித்து வரும் மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியுள்ளனர். மர்ம நபர்கள் ஆசிட் வீசியதில் தோள்கள் கருகி மாடுகள் படுகாயம் அடைந்த நிலையில் மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுரை: 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – பிறந்த குழந்தை இறந்ததன் மூலம் வெளிவந்த குழந்தை திருமணம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியிலுள்ள 28 வயதான உதயக்குமார் என்பவருக்கு14 வயது சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்து வைத்த சம்பவம், அவர்களுக்கு பிறந்த குழந்தை இறந்தது மூலம் வெளியே தெரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை குடும்பத்துக்கு பாரம், செலவு என்று கருதி பெண் குழந்தைகளை கொல்கின்ற கொடூர பழக்கம் இப்பகுதியில் ஒரு காலத்தில் இருந்தது. எனினும் தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு எடுத்த … Read more

இரண்டு லொறிகளுக்கு மத்தியில் நசுங்கிய மினி பஸ்…ஓட்டுநரின் கவனக்குறைவால் நேர்ந்த பரிதாபம்

 ரஷ்யாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கனரக சரக்கு லொறியின் ஓட்டுநர் வேகத்தை குறைக்காததால் விபத்து ஏற்பட்டதாக அறிவிப்பு ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லொறி மோதியதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் உல்யனோவ்ஸ்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லொறி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தற்போது வரை வெளிவந்துள்ள … Read more

இன்று மீண்டும் துவங்குகிறது புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர்

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் துவங்குகிறது. இன்று காலை ஒன்பது மணியளவில் துவங்கும் இந்த கூட்டத்தொடரில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார். வரும் 30-ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத் தொடரில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வடபழனியில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்மாயில் மற்றும் பரத் ஆகியோரை போலீசார் கைது செய்து ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி; வங்கதேசம் எல்லையில் கைது இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி; வங்கதேசம் எல்லையில் கைது புதுச்சேரி : சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை மாகி போலீசார் வங்கதேசம் எல்லையில் கைது செய்தனர்.புதுச்சேரி மாநிலம், மாகியில் பல மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமான பணி புரிகின்றனர். இங்கு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தங்கி, கட்டட பணி செய்தனர். இவர்களுடன் தங்கி இருந்த 17 வயது பெண், 3 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விசாரித்ததில், அப்பெண்ணை … Read more

விருதுநகர்: ஆன்லைன் லோன்; ஆபாச படம்; தொழிலதிபரிடம் மோசடி – கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்ட பணம்?!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ஆன்லைன் கடன் ஆப் மூலமாக 18 லட்சத்து 15 ஆயிரத்து 991 ரூபாயை மர்மகும்பல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த குறித்து போலீஸிடம் பேசினோம், “விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் விரிவாக்கத்திற்காக சிலரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு வேண்டியத்தொகை கிடைக்காததால் ஆன்லைனில் உடனடி கடன் ஆப் மூலமாக … Read more

ரஷ்யா சக்திவாய்ந்த சுகந்திர உலக சக்தி…கொடி தினத்தில் ஜனாதிபதி புடின் அறிவிப்பு

அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யும் கொள்கைகளை மட்டுமே சர்வதேச அரங்கில் ரஷ்யா பின்பற்றும். கொடி தினத்தில் ரஷ்யாவை சக்திவாய்ந்த சுகந்திர உலக சக்தியாக விவரித்தார் ஜனாதிபதி புடின். ரஷ்யா தனது அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யும் கொள்கைகளை மட்டுமே சர்வதேச அரங்கில் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது என்று ஜனாதிபதி புடின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 179 வது நாளாக தொடரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் தென்கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் … Read more