டெல்லியில் பழங்குடியினர் கலைக் கண்காட்சி இன்று தொடங்கியது

புதுடெல்லி: புதுடெல்லியில் ஒடிசா லலித் கலா அகாடமியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் ஐந்து நாள் பழங்குடியினர் கலைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியினரின் செழுமையான அழகியல் உணர்வை மக்களுக்கு வழங்குகிறது. ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மதுசூதன் பதி தொடங்கி வைத்தார். இந்த வெளியீட்டு விழாவில் ஒடிசா லலித் கலா அகாடமியின் தலைவரான பிரபல மணல் கலைஞர் … Read more

Moonlighting முழுக்க முழுக்க சீட்டிங் வேலை.. கொந்தளிக்கும் விப்ரோ ரிஷாத் பிரேம்ஜி..!

கொரோனாவுக்குப் பின்பு வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்ட பல முக்கியமான மாற்றங்களில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது Moonlighting கொள்கை தான். உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் இந்த Moonlighting கான்செப்ட் தற்போது இந்தியாவிலும் சில முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உட்படப் பல சிறு குறு நிறுவனங்கள் Moonlighting கான்செப்ட் தனது நிறுவனத்தில் அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டெக் சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் விப்ரோ தலைவர் Moonlighting கான்செப்ட் குறித்துப் பேசியுள்ளார். விப்ரோ ஊழியர்களின் சம்பளம் … Read more

உக்ரைனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சி…ஐரோப்பிய யூனியன் தலைவர் அறிவிப்பு

உக்ரைன் வீரர்களுக்கு ஐரோப்பிய யூனியன் இராணுவ பயிற்சி. இந்த முன்முயற்சியின் மூலம் உக்ரைன் தேவையான திறன்களை பெறும். உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை உருவாக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் தற்போது 180வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கையில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமான உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்த நாட்டின் ஆயுதப் படைகளின் தலைமை … Read more

மலையாளத்துறை அசோசியேட் பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு தடை கேரள ஐகோர்ட்டு உத்தரவு

பெரும்பாவூர், கண்ணூர் சர்வகலாசாலையில் அசோசியேட் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசின் நியமன உத்தரவுக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. கண்ணூர் சர்வகலாசாலையில் மலையாளத்துறையில் அசோசியேட் பேராசிரியையாக கண்ணூரை சேர்ந்த பிரியா வர்கீஸ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் கூடுதல் செயலர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி ஆவார். இவர் கண்ணுரைச் சேர்ந்தவர். பிரியா வர்கீஸ் நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இந்த தேர்வில் 2-ம் இடம் பிடித்த … Read more

சீனா எடுத்த அதிரடி முடிவு.. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான முடிவா இருக்கே.. சாதகமான விஷயமா?

சீன பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் நிலையில், சீனா அதன் வளர்ச்சியினை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க தொடங்கியுள்ளது. இது பணப்புழக்கத்தினை அதிகரிக்கலாம். இது நிறுவனங்களின் வளர்ச்சியினை கூட்டலாம். வேலைவாய்ப்பினை அதிகரிக்கலாம். மார்ஜின் விகிதங்களை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராகேஷ் ஜூன்ஜூன்வாலா டிரஸ்ட்-ல் இவரா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..! பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தலாம் மொத்தத்தில் பெய்ஜிங்கின் இந்த நடவடிக்கையானது பொருளாதார வளர்ச்சியினை ஊக்கப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக … Read more

பஞ்சாப் முன்னாள் மந்திரி கைது

சண்டிகர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உணவு மற்றும் விநியோகத் துறை மந்திரியாக இருந்தவர் பரத் பூஷன் அஷு. இவரது பதவிக் காலத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், இவரை இன்று மொஹாலியில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஜூன் மாதம், முன்னாள் மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பஞ்சாபில் பகவந்த் மன் தலைமையிலான ஆட்சி … Read more

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் வாடிக்கையாளரா நீங்க.. இனி உங்க EMI அதிகரிக்கலாம்..!

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் அதன் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதமாது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ்-ன் இந்த முடிவானது ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாத வட்டி அதிகரிப்பு நடவடிக்கைக்கு பிறகு வந்துள்ளது. இதனால் இனி எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கும், இனி இணையவிருக்கும் புதிய வாடிக்கையாளார்களும் அதிக வட்டி விகிதத்தினை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். இதன் காரணமாக உங்களது மாத தவணை … Read more

வைரலான இளம்பெண் பிரதமரின் பார்ட்டி வீடியோ: வெளியான போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள்!

இணையத்தில் வைரலான பின்லாந்து பிரதமரின் பார்ட்டி வீடியோ. போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறை முடிவுகள். பின்லாந்து பிரதமர் சன்னா மரின் நண்பர்களுடன் பார்ட்டியில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் கடந்த வாரம் வெளியானதையடுத்து அவர் எடுத்துக் கொண்ட போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறை முடிவுகள் வந்துள்ளது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக சன்னா மரீன்(36) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமரும் ஆவார். பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (36) சமீபத்தில் நண்பர்களுடனான பிரைவேட் … Read more

பத்ரா சால் முறைகேடு வழக்கு: சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் 5-ந் தேதி வரை நீட்டிப்பு

மும்பை, மும்பையில் ‘பத்ரா சால்’ என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கடந்த 1-ந் தேதி அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். முதலில் அமலாக்கத்துறை … Read more

டாடா முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ஓரே நாளில் 7 சதவீதம் சரிவு..!

டாடா குழுமத்தின் முக்கிய ரீடைல் விற்பனை நிறுவனமான டிரெண்ட் லிமிடெட் பங்குகள் திங்களன்று யாரும் எதிர்பார்க்காத வரையில் சுமார் 7 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்றைய வர்த்தகத்தில் டிரெண்ட் பங்குகள் 1,299.55 ரூபாய் என்ற இன்ட்ராடே குறைந்தபட்ச அளவீட்டை எட்டியது. வாரத்தின் முதல் நாள் வர்த்தக முடிவில் டிரெண்ட் பங்குகள் 6 சதவீதம் குறைந்து 1,313.85 ரூபாய் அளவில் முடிந்தது. டிரெண்ட் பங்குகள் மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்தச் … Read more