வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக, தமிழ்நாடு,புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக   சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 07.09.2022 : தமிழ்நாடு, … Read more

ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஓணம் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அத்திப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம் என தெரிவித்துள்ளார்.

நோட்டீசை கிழித்த ஆம் ஆத்மி எம்.பி., குற்றச்சாட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அவதூறு வழக்கு தொடர டில்லி கவர்னர் சக்சேனா அனுப்பிய நோட்டீசை கிழித்தெறிந்த ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், சக்சேனா ஊழல்வாதி, திருடன் என விமர்சித்துள்ளார். டில்லியில், துணை நிலை கவர்னராக சக்சேனா பதவி வகிக்கிறார். கடந்த 2016ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு செய்யப்பட்டபோது, காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷன் தலைவராக இருந்த சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை மாற்றியுள்ளார் … Read more

எல்.ஐ.சியின் புதிய பென்ஷன் பிளஸ் திட்டம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

பென்ஷன் இல்லாமல் பணி செய்யும் ஊழியர்களின் நிதி பாதுகாப்புக்காக புதிய பென்ஷன் பிளஸ் என்ற திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்தவர்கள் தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கும் வகையில் இருக்கும். இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த திட்டத்தின் ஆரம்ப விழாவில் எல்ஐசி மற்றும் செபி நிறுவனங்களின் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறும் 1000 டாலர்.. SpaceX-க்கு போட்டியாக ISRO..! … Read more

“எங்க கிராமங்களும் கொள்ளிடம் வெள்ளத்துல அழிந்து போய்டுமோ..!" – கவலையில் கரையோர கிராம மக்கள்

சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம்போல, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கடந்த 1962-ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் ‘காசித்திட்டு’ என்ற கிராமமே இன்று இல்லாமல், ஆற்றுக்குள் புதைந்துவிட்டது. அப்போது அங்கிருந்து தப்பித்து வெளியேறியவர்கள் கொள்ளிடம் அருகேயுள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு போன்ற கிராமங்களில் இன்றும் வசித்து வருகின்றனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தால் காசித்திட்டு கிராமம்போல் நாதல்படுகை, முதலைமேடுதிட்டு ஆகிய இரண்டு கிராமங்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுமோ என்ற அச்சத்தில் அங்கு … Read more

புதிய அமைச்சரவையை அமைக்கும்படி லிஸ் ட்ரஸ்ஸைக் கேட்டுக்கொண்ட பிரித்தானிய மகாராணியார்: வெளியான புகைப்படங்கள்

கன்சர்வேட்டிவ் கட்சியினரால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் நேற்று மதியம் பிரித்தானிய மகாராணியாரைச் சென்று சந்தித்தார். புதிய அமைச்சரவையை அமைக்கும்படி லிஸ் ட்ரஸ்ஸைக் மகாராணியார் கேட்டுக்கொண்டார். பிரித்தானியாவில் புதிய அரசு பொறுப்பேற்கும்போது, புதிதாக பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்டவர் முதலில் பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார். பிரதமரின் கைகளில் மகாராணியாரும், மகாராணியாரின் கைகளில் பிரதமரும் முத்தமிடுவார்கள். இது பிரித்தானிய மரபு. மகாராணியார் புதிய அமைச்சரவையை அமைக்கும்படி பிரதமரைக் கேட்டுக்கொள்வார். பிரதமரும் அதை ஏற்றுக்கொள்வார். அதன் பின்னரே, பிரதமர் இல்லம் முன்பு … Read more

5வது ஆண்டாக நீட்டிப்பு: டெல்லியில் 2023 ஜனவரி 1 வரை பட்டாசு விற்பனை வெடிக்க தடை!

டெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 5வது ஆண்டாக பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு தடை விதித்துள்ளது. 2023 ஜனவரி 1 வரை பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக, உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க பல்வேறு தடைகளை போட்டுள்ளது. மேலும், பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகமோசமாக உள்ளதால், அங்கு தீபாவளி பண்டிகைக்குகூட பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும், தடை … Read more

காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப். 15-ல் மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்த உள்ளது.  

அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? கனிமொழிதான் சொன்னாங்க.. பாஜக பொளேர்

Tamilnadu oi-Vishnupriya R திருச்செந்தூர்: திராவிட மாடல் ஆட்சி என்றால் லஞ்சம், ஊழல் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தற்காலிக மார்க்கெட் அமைய உள்ள இடத்தையும், புதியதாக மார்க்கெட் கட்டப்படுவதையும் பார்வையிட்ட பிறகு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்வதால், … Read more

போலி நன்கொடை பெற்ற கட்சிகள்: வருமான வரித்துறை ரெய்டு!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: போலியாக நன்கொடை மற்றும் வரி மோசடி தொடர்பாக அரசியல் கட்சிகளை குறிவைத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் சோதனை நடந்த நிலையில், அரசியல் கட்சிகள், உரிய விதிகளை பின்பற்றாமல், நன்கொடையை பெற்றுக்கொண்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. சட்ட விதிகளை பின்பற்றாமல் வருமான வரி விலக்கு கோரிய அரசியல் கட்சிகள் … Read more