செப்.18: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

போதைப் பொருள் கடத்தல் நபரின் ரூ.1.60 கோடி மதிப்பு சொத்து பறிமுதல்| Dinamalar

பெங்களூரு : மத்திய குற்றப்பிரிவு போதை தடுப்பு பிரிவினர், போதை கடத்தல் நபரிடம் இருந்த 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்தனர்.கர்நாடகாவில் போதைப் பொருள் பயன்படுத்தும் இளம் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, போலீசார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, போதைப் பொருட்களை கடத்தியவர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில், ஜூலையில், பெங்களூரை சேர்ந்த மிருதுஞ்செயா, 45, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, போதைப் பொருளுக்கான ‘எண்ணெய்’ … Read more

நாடு தழுவிய ரத்த தான இயக்கம்; 1 லட்சத்தைக் கடந்த கொடையாளர்கள் எண்ணிக்கை – மன்சுக் மாண்டவியா தகவல்

புதுடெல்லி, டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்றைய தினம் ‘ராக்தான் அம்ரித் மகோத்வ்’ என்ற பெயரில் தேசிய அளவிலான ரத்த தான இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைப் போல ரத்த தான அமிர்தப் பெருவிழாவும் பெரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதி என்றும், நாடு தழுவிய அளவில் நடைபெறும் மெகா தன்னார்வ ரத்த தான இயக்கத்தில் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்ய அனைத்து … Read more

தொடர் திருட்டு; நகைகளுடன் 4 பேர் கைது; இன்றைய கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

தொடர் திருட்டு; நகைகளுடன் 4 பேர் கைது அவிநாசி : அவிநாசி பகுதியில் கடந்த இரு மாத காலத்தில் வீட்டு கதவை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி., பவுல்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உட்பட தனிப்படை போலீசார் விசாரித்தனர்.இதுதொடர்பாக கடந்த 13ம் தேதி மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த மகேந்திரன், பழங்காநத்தம், தண்டக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ், காளவாசல் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (எ) … Read more

கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களை தங்கத் தகடுகளால் மூட பூசாரிகள் எதிர்ப்பு

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் அமைந்திருக்கிறது. இதன் கருவறை உள்பகுதி 4 சுவர்களையும் தங்கத் தகடுகளால் மூட காணிக்கையாக தங்கம் வழங்க மராட்டியத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் முன்வந்தார். அதற்கு மாநில அரசின் அனுமதி பெற்று, பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, கருவறை உள்சுவர்களை தங்கத் தகடுகளால் மூடும் பணி தொடங்கியிருக்கிறது. அதற்கு இக்கோவிலின் பூசாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கத் தகடுகளால் மூடுவதற்கு பெரிய துளையிடும் கருவிகளைக் கொண்டு கருவறைச் … Read more

பெண்ணை கட்டிப்போட்டு 200 கிராம் நகை கொள்ளை| Dinamalar

மைசூரு : நஞ்சன்கூடின், ராமசாமி லே — அவுட்டில், பெண் ஒருவரை கை, கால்களை கட்டிப்போட்ட மர்ம கும்பல், பாலியல் பலாத்காரம் செய்வதாக மிரட்டி, 200 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.மைசூரு, நஞ்சன்கூடின், ராமசாமி லே — அவுட், முதல் பிளாக்கில் வசிக்கும் ஷம்புசாமி, உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி தாட்சாயிணி. நேற்று காலை கணவர், பணிக்கு சென்ற பின், 8:30 மணியளவில், மனைவி தனியாக வீட்டில் இருந்தார். அப்போது கதவு தட்டப்பட்டது. … Read more

பெங்களூரு மல்லேசுவரத்தில் அதிநவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்துவைத்தார்

பெங்களூரு: அதிநவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரி பெங்களூரு மல்லேசுவரம் தொகுதியில் உள்ள பேலஸ் குட்டதஹள்ளியில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரி, நாட்டிலேயே முதல் முறையாக அதிநவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில் நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த ஆஸ்பத்திரியை தொடங்கி வைத்தார். இதுதவிர மல்லேசுவவரம் தொகுதியில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:- மிகுந்த மகிழ்ச்சி பெங்களூரு மல்லேசுவரத்தில் நவீன டிஜிட்டல் ஆஸ்பத்திரியை தொடங்கி … Read more

மை ஷுகர் சர்க்கரை ஆலை அமைச்சர் கோபாலய்யா உறுதி| Dinamalar

மாண்டியா : ”மாண்டியா மாவட்டத்தின், உயிர் நாடியான மை ஷுகர் சர்க்கரை ஆலையை, மீண்டும் திறக்கும் விஷயத்தில், அரசு சொன்னபடி நடந்து கொண்டுள்ளது,” என கலால் துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.மாண்டியாவில், நேற்று அவர் கூறியதாவது:மை ஷுகர் சர்க்கரை ஆலையின் மேம்பாடு தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தகவல் பெறப்பட்டுள்ளது. ஆலையின் முதல் பாய்லர் ஏற்கனவே செயல்பட துவங்கியது. இரண்டாவது பாய்லர், வரும் 19ல் துவங்கப்படும். வரும் 30 முதல், விவசாயிகளிடம் கரும்பு பெற்று, பிழியும் பணிகள் … Read more

பாழுங்கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு| Dinamalar

மாண்டியா : பாண்டவபுராவின், சந்திரே கிராமத்தில் 30 அடி ஆழ கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை, போலீசார், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.மாண்டியா, பாண்டவபுராவின், சந்திரே கிராமத்தில் சாலை அருகில், 30 அடி ஆழமான பாழுங்கிணறு உள்ளது. இதில் தண்ணீர் வற்றியுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் தேவையற்ற கழிவுகள், குப்பை கொட்டுகின்றனர் நேற்று காலை கிணற்றுக்குள், குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்பகுதியில் வசிக்கும் சிலர், இதை கவனித்து, எட்டி பார்த்தனர். குழந்தை கிடப்பது தெரிந்தது. … Read more

மாஜி முதல்வர் எடியூரப்பா மீது வழக்குபதிவு செய்தது லோக் ஆயுக்தா| Dinamalar

பெங்களூரு:ஊழல் வழக்கு தொடர்பாக, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன், மருமகன்கள், பேரன் உட்பட ஒன்பது பேர் மீது, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2008 — 10ல் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் … Read more