தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து: தலைவர்கள் இரங்கல்| Dinamalar

புதுடில்லி: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவில், தேரின் அலங்கார தட்டி உயரழுத்த மின் பாதையில் உரசியது. இதில் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி: தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் … Read more

மோடியின் கனவுத் திட்டம் விளாடிமிர் புதினின் போரால் தோல்வி..?!

இந்தியாவில் நெட் ஜீரோ அளவீட்டை விரைவில் அடைய வேண்டும் என்பதற்காக எரிபொருள் பயன்பாட்டு விகித்தை மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்தது. ஆனால் இந்தத் திட்டம் உக்ரைன் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற விளாடிமிர் புதின் முடிவின் மூலம் பெரும் தோல்வியை அடைந்தது. மோடி அரசு அழைக்கும் 3 வெளிநாட்டு நிறுவனங்கள்.. எதற்கு தெரியுமா..?! உக்ரைன் போர் உக்ரைன் போருக்கு முன்பு பெட்ரோல், டீசல் விடவும் இயற்கை … Read more

27/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கியது….

டெல்லி:  இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 3,000ஐ நெருங்கி  உள்ளது. நேற்று ஒரே நாளில் 2927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 32 பேர் உயிரிந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டு உள்ளது. அதனப்டி, நேற்று ஒரே நாளல் புதிதாக மேலும்  2,927 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,65,496 ஆக … Read more

மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி- ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லி: தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில் சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகப்பெரிய சோகம். அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மின்சாரம் தாக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தஞ்சாவூர் தேர் விபத்து காரணமாக அதிமுக சார்பில் இன்று நடக்கவிருந்த இஃப்தார் நோன்பு நாளை மாலைக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: தஞ்சாவூர் தேர் விபத்து காரணமாக சென்னையில் அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த இஃப்தார் நோன்பு நாளை மாலைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தஞ்சை காலிமேட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வரும் 30ல் முதல் சூரிய கிரகணம்| Dinamalar

கோல்கட்டா : இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் வரும் 30-ம் தேதி நிகழ்கிறது. இது பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நடப்பதால் நம் நாட்டில் இதை காண முடியாது. இது குறித்து வானியல் நிபுணர் டெபி பிரசாத் துவாரி கூறியதாவது: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 30ம் தேதி நிகழ்கிறது. இது இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி மறுநாள் அதிகாலை 4:08 மணி வரை நீடிக்கிறது.இதேபோல, அடுத்த மாதம் 16ல் முழு சந்திரகிரகணம் … Read more

மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. ஏன்?

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஏற்றம் கண்ட சந்தையானது, இன்று மீண்டும் சரிவினையே கண்டுள்ளது. குறிப்பாக ஆட்டோ, ஐடி, மெட்டல், பார்மா உள்ளிட்ட பல முக்கிய துறைகள் சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் சரிவுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் நாளை இந்திய சந்தையினை பொறுத்தவரையில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் அதன் … Read more

27 வயதில் தொடங்கிய கனவு; டெஸ்லா டு ட்விட்டர் வரை- யாரிந்த எலான் மஸ்க்?!

2017 எலான் மஸ்க் ட்விட்டரில் “எனக்கு ட்விட்டர் பிடித்திருக்கிறது” என ஒரு ட்வீட் பகிர்ந்தார். அதற்கு டேவ் ஸ்மித் “அப்போ நீங்க இத வாங்கணும்” என்று பதில் அனுப்புகிறார். எலான் மஸ்க் கவுண்டமணி ஸ்டைலில் ‘அந்த ரோடு என்ன விலைன்னு கேளு’ என்பது போல “அது என்ன விலை வரும்” என ட்வீட் செய்திருந்தார். அப்போது, 5 வருடங்களுக்குப் பிறகு அவர் உண்மையாகவே ட்விட்டரை வாங்குவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க … Read more

ஷாபாஸ் அகமதை நம்பி ஓடி ரன் அவுட் ஆன தினேஷ் கார்த்திக்! ஏன் இப்படி செஞ்ச என ஆதங்கப்பட்ட வீடியோ

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்கை ரன் அவுட்டாக்கி வெளியேற்றினார் சஹால். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியின் ஒரு கட்டத்தில் ஷாபாஸ் அகமதும், தினேஷ் கார்த்திக்கும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஷபஸ் அடித்த பந்து பீல்டரிடம் சென்றது. அப்போது ஒரு ரன் எடுக்க அவர் ஓடியதை பார்த்த எதிர்முனையில் இருந்த தினேஷ் கார்த்திகும் ஓடினார். pic.twitter.com/NjpTf0s1lk — Peep (@Peep_at_me) April 26, 2022 … Read more