அஸ்ஸாம்: ஜாமீனில் வெளியாகி சில மணி நேரங்களில் மீண்டும் கைதான குஜராத் எம்.எல்.ஏ!

குஜராத் எம்.எல்.ஏ-வும், இளம் பட்டியலினத் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக, பா.ஜ.க நிர்வாகியொருவர் மேவானி மீது அண்மையில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் அஸ்ஸாம் போலீஸ், கடந்த புதன்கிழமையன்று இரவோடு இரவாக ஜிக்னேஷ் மேவானியைக் கைது செய்தது. பின்னர் இந்த வழக்கில் 3 நாள்கள் அஸ்ஸாம் போலீஸ் காவலில் இருந்த மேவானி, கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தார். குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி … Read more

லண்டன் வீட்டிலிருந்து கேட்ட பெண்ணின் பயங்கர அலறல் சத்தம்: 600,000 பவுண்டுகள் மதிப்புடைய வீட்டில் நிகழ்ந்த பயங்கரம்

லண்டனிலுள்ள 600,000 பவுண்டுகள் மதிப்புடைய வீடு ஒன்றிலிருந்து, சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பெண் ஒருவர் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டதையடுத்து அக்கம்பக்கதவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர். Bermondsey என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்துள்ளனர். அவர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆம், அந்த வீட்டின் படுக்கையறை ஒன்றில், மூன்று பெண்களும் ஒரு ஆணும் கத்திக்குத்துக்காயங்களுடன் … Read more

தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி கட்டாயம்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

டெல்லி: தமிழ்நாட்டில் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு உடற்கல்வி பாடம்கட்டாயம் என  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்தது. பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, மாநில அரசுகள் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில்  பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. … Read more

சட்டசபையில் அமைச்சர்-அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மோதல்-வாக்குவாதம்: ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வெளிநடப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்து சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை பேசும்போது, ‘மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரின் பெயரை குறிப்பிட்டு பேசினார். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படி பெயரை சொல்லி பேசலாம் என்றனர். உடனே சபாநாயகர் குறுக்கிட்டு மறைந்த முதல்வர் பெயரை … Read more

நீலகிரியில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது: தமிழக அரசு தகவல்

நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவட்டுள்ளது.

தீப்பந்தங்களை வீசும் வினோத விழா; | Dinamalar

தட்சிண கன்னடா : கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில் திருவிழாவில், இரண்டு கிராம மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் தீப்பந்தங்களை வீசும் வினோதநிகழ்ச்சி நடந்தது.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து 28 கி.மீ., தொலைவில் உள்ள கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக எளிமையாக நடத்தப்பட்டது.இந்தாண்டு தொற்று பரவல் குறைந்ததால், விமரிசையாக நேற்று முன்தினம் இரவு … Read more

10 லட்சம் பங்குகளை வாங்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. எந்த நிறுவனத்தில் தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 10 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார். மார்ச் காலாண்டு நிலவரப்படி, ஜுன் ஜுன்வாலா தனது போர்ட்போலியோவில் 10 லட்சம் பங்குகள் அல்லது 0.2% பங்குகளை இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் அதிகரித்துள்ளார். இது கடந்த டிசம்பர் 2021 நிலவரப்படி 50 லட்சம் பங்குகள் அல்லது 1.08% பங்குகள் இருந்தது. ஆனால் தற்போது 60 லட்சம் பங்குகள் அல்லது 1.28% … Read more

எலும்பை வலுவாக்கும் காட்டுயானம்; கிராமிய திருவிழாவில் திரண்ட இயற்கை ஆர்வலர்கள்!

பாரம்பரிய அரிசி வகைகள், உணவுப்பொருட்கள், பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாகவும் இயற்கை விவசாயிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் கிராமிய திருவிழா நடைபெற்றது. பாரம்பரிய அரிசி வகைகள், மண்பாண்டங்கள், குளியல் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், பதநீர், அழகுப் பொருட்கள் என விழா கோலாகலமாக இருந்தது. நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் தலைமையில் கலைக்குழு பாடலுடன் ஆடியும் மக்களை சந்தோஷப்படுத்தினர். விழாவிற்கு விதைகளை பாதுகாக்கும் விதைகளுக்காக வேலை செய்யும் … Read more

வானில் பறந்த ரஷ்ய விமானத்தை… அதிரடியாக சுட்டுவிழ்த்திய உக்ரைன் ராணுவம்: வீடியோ ஆதாரம்!

செய்தி சுருக்கம்: உக்ரைனின் கார்கிவ்-வில் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரண்டு ரஷ்ய விமானிகள் பாதுகாப்பாக தப்பினர். உக்ரைனுக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய விமானத்தை உக்ரைனின் ஆயுதப் படை வீரர்கள் வானிலேயே சுட்டுவிழ்த்தியுள்ளனர். உக்ரைனின் தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது ராணுவ படைகளை பின்னகர்த்தி தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நகரங்களான டான்பாஸ் மற்றும் கார்கிவ் அகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. In the #Kharkiv region, the … Read more

விருதுநகரில் மேலும் ஒரு பாலியல் சம்பவம்: திமுக பிரமுகர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

விருதுநகர்: விருதுநகரில் மேலும் ஒரு பாலியல் சம்பவம்  நடைபெற்றுள்ளது. சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்ததாக  திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது குற்றம் சாட்டி, அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் 22வயது தலித் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துவந்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 2 திமுக இளைஞர் அணி … Read more