மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் சந்திப்பு: புகைப்படம்

நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் விவேக் கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். விவேக் மறைந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் அவர் மனைவி அருட்செல்வி இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார். மறைந்த திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்களின் மனைவி திருமதி அருட்செல்வி அவர்கள் … Read more

புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் புவிசார் குறியீடுக்கு விண்ணப்பம்!

சென்னை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் (காய்ந்த மிளகாய்) ஆகிய மூன்று தமிழ்நாட்டைச் சார்ந்த தயாரிப்புகள் புவிசார் குறியீடு (ஜிஐ) பெற விண்ணப்பித்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிசை தொழிலாக சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. சுண்ணாம்பு தயாரிக்க 10 முதல் 15 அடி உயர அளவிலான கன்வாய் அமைக்கப்படுகிறது. இதற்குள் ஓடைக்கல், கரித்துள் ஆகியவற்றை அடக்கி அடியில் தென்ன மட்டை, பனங்கொட்டை, தேங்காய் … Read more

மேஜையை உடைத்த பள்ளி மாணவர்கள் தற்காலிக நீக்கம்

வேலூர்: வேலூர் தொரப்பாடி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் மாலை வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக பள்ளி விடப்பட்டது. ஆனால் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். அதன் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜை, டெஸ்க், பெஞ்சுகளை தரையில் போட்டும், காலால் எட்டி உடைத்தனர். இதைக்கண்ட … Read more

டெல்லி 3 மாடி கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு

டெல்லி: டெல்லியில் 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாதிரி நீதிமன்ற போட்டி: தஞ்சாவூர் கல்லூரி முதலிடம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சட்டக் கல்லுாரியில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் முதலிடம் பிடித்த, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழக அணிக்கு, டி.வி.லட்சுமிநாராயணன் மெமோரியல் விருதாக 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், 39வது தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி கடந்த 22ம் தேதி துவங்கியது. இதில் நாடு முழுதும் இருந்து 35 சட்டக் கல்லுாரி, பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.சுற்றுச்சூழல் … Read more

வரான் பபெட்-ஐ முந்திய கௌதம் அதானி.. உலகின் 5வது பெரிய பணக்காரரானார் அதானி..!

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான கௌதம் அதானியின் வர்த்தக வளர்ச்சிக்கு ஏற்ப அவரது சொத்து மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் கடந்த 6 மாதத்தில் அவ்வப்போது டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தும் வெளியேறி வந்த கௌதம் அதானி கடந்த ஒரு மாதமாக 8 மற்றும் 9வது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் அதானி பவர், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்த காரணத்தால், இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். … Read more

வேலூர்: வகுப்பறைக்குள் மேஜை, நாற்காலிகள் உடைப்பு! – 10 மாணவர்கள் சஸ்பெண்ட்

தமிழகத்தில், சமீப காலமாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆபாசமாகப் பேசுவது, மிரட்டல் விடுப்பது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் ஒழுங்கீனச் செயல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன வேதனையையும் உண்டாக்கியிருக்கிறது. கடந்த வாரம் கூட திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவன் ஒருவன் ஆசிரியரை ஆபாசமாகத் திட்டி அடிக்கப் பாய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, … Read more

உக்ரைனுக்கு பணத்தை வாரி வழங்கிய அமெரிக்கா…புடின் குறிக்கோளில் தோற்றுவிட்டார்: பிளிங்கன் கருத்து!

செய்தி சுருக்கம்:  ”சுதந்திர உக்ரைன்” புடினின் ரஷ்யாவை விட நீண்டநாள் நீடிக்கும்.   ரஷ்யா தோற்கிறது, உக்ரைன் வெற்றி பெறுகிறது பிளிங்கன் கருத்து.   உக்ரைனின் ராணுவ உதவிக்காக 322 மில்லியன் டாலர்கள் அமெரிக்கா வழங்குவதாக உறுதி. உக்ரைனில் போரை தொடங்கியதற்கான நோக்கத்தில் ரஷ்யா தோல்வி அடைந்து விட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்ய போரானது முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கும் சூழ்நிலையில், போர் தொடங்கிய காலத்திற்கு பிறகு … Read more

திருச்சி அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலி.!

திருச்சி: திருச்சி அருகே நடைபெற்ற வாகன விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அருகே உள்ள கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் முனியப்பன் . இவர் தனது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய 5 பேருடன் இன்று அதிகாலை காரில் சீர்காழி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.  கார் திருச்சி-சென்னை தேசிய … Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் … Read more