ஆன்லைன் ரம்மியில் ரூ.35 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞர் – சென்னையில் சோகம்!

சென்னை போரூரில் உள்ள விக்னேஸ்வரா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்திருக்கிறார். கொரோனா பேரிடர் சமயத்தில் பணியை இழந்த பிரபு, அதற்குப் பின்பு பணிக்கு எதுவும் செல்லாது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில், இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவருக்கும், இவரின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி இந்த நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனனி வெளியே சென்றுவிட்டு, மீண்டும் … Read more

மறைந்த நடிகர் விவேக் மனைவி தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வைத்த கோரிக்கை நிறைவேற்றம்!

மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி உயிரிழந்தார். சமீபத்தில் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அப்போது நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் மு.க.ஸ்டாலிடம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் விவேக் வசித்த பகுதிக்கு … Read more

அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் – கனிமொழி எம்.பி.

சென்னை: அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகம் உழைக்கும் மக்களால்தான் சுழல்கிறது: தொழிலாளர்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

திருவான்மியூரில் 2 வாலிபர்கள் கொலை- கொலையாளி போலீசில் சரண்

திருவான்மியூர்: சென்னை திருவான்மியூர் குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது தாய் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று குமாரின் தாய்க்கு 16ம் நாள் காரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பாக நடந்த விருந்தில் இதில் குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். குமாரின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (27), அருண்குமார் (22) ஆகியோர் காரியம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பட்டதாரி வாலிபர்களான இவர்கள் இருவரும் காரிய … Read more

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ 252.34 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ 252.34 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடி; சென்னை மண்டலம் ரூ.52.28 கோடி; திருச்சி மண்டலம் ரூ.49.78 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

இந்தியாவுக்கே யோகா சொந்தம்: ஆர்.எஸ்.எஸ்.,| Dinamalar

சஹரன்பூர் : ”யோகாவுக்கு சில நாடுகள் காப்புரிமை பெற விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கே யோகா சொந்தமானது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: யோகா கலை, இப்போது சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. அதனால் யோகாவுக்கு காப்புரிமை பெற சில நாடுகள் விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கே யோகா சொந்தமானது; அதில் நாம் உறுதியாக இருக்க வேணடும். மற்ற நாடுகளில் உடல் … Read more

`அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து!' – இந்து முறைப்படி கோவை இளைஞரை திருமணம் செய்த ஆப்பிரிக்க பெண்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணியம் – தர்மலட்சுமி. இவர்களது மகன் முத்துமாரியப்பன், டிப்ளமோ மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்துவிட்டு மேற்கு ஆப்பிரிக்கா கேம்ரூனில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வால்மி – முத்து மாரியப்பன் திருமணம் காத்துவாக்குல ரெண்டு காதல்: “கல்யாணத்துக்கு முன்னாடி செமயா ஒரு படம்”- விக்னேஷ் சிவன் பகிரும் ரகசியம் முத்து மாரியப்பனுக்கும், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த வால்மி இனங்கா மொசொக்கே என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு இரண்டு … Read more

FSB தலைவரின் கீழ் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்கும் புடின்: ரஷ்ய அரசியல் வட்டாரங்கள் பரபரப்பு தகவல்!

ரஷ்ய ஜனாதிபதி புடின் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது அவரது ஆட்சி அதிகாரத்தை முன்னாள் FSB தலைவரான நிகோலாய் பட்ருஷேவ் கீழ் அளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாடிபதி புடினின் உடல்நிலை மிகவும் நழிவடைந்து இருப்பதை அவரின் சமீபத்திய வெளிதோற்றங்கள் அம்பலபடுத்தியுள்ளன. இந்தநிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் வயிற்றுப் புற்றுநோய், பார்கின்சன் மற்றும் ‘ஸ்கிசோஃப்ரினிக் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், … Read more

கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் கைது

திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும்,  இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று தெரிவித்த கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் காவல் துறை, முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்திய முஸ்லிம் லீக் தலைவர்பி.கே. பெரோஸ், கேரள காவல்துறை தலைவரிடம் அளித்துள்ள புகாரில், மத கலவரத்தை தூண்டும்பி.சி.ஜார்ஜை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட், … Read more

பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும், 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.  வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது செல்வ சூர்யாவை எதிர்தரப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வ சூர்யா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். கோஷ்டி மோதல் தொடர்பாக 11-ம் வகுப்பு … Read more