சென்னை: பெருங்குடி குப்பைக் கிடங்கில் நான்காவது நாளாக எரியும் தீ – தற்போதைய நிலை என்ன?

சென்னை மாநகரத்தில் மட்டும் நாளொன்றுக்கு 5,000 டன்னுக்கும் அதிகமான திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது. சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுக் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும். சென்னை பெருங்குடி பகுதியில் அரசுக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகின்றது. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் கடந்த புதன்கிழமை (27.04.2022) எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. பெருங்குடி குப்பைக் கிடங்கு – தீ விபத்து முதலில் ஒரு இடத்தில் உருவான தீ காற்றின் வேகம் காரணமாக … Read more

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

டெல்லி, பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது. இவர் இரட்டை இலை பெற தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் புரோகக்கராக  சுகேஷ் சந்திரசேகருக்கு நெருக்கமானவர். பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது பெயர் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட போதுதான் நாட்டு மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால், இவர் பல ஆண்டுகளாக இதுபோன்ற இடைத்தரர்கள் … Read more

இனி எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது! ரஷ்யாவுக்கு செய்தி அனுப்பிய ஜேர்மனி

 ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு ஜேர்மனி இனி ரூபிள்களில் பணம் செலுத்தாது என்று ஜேர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்தன. இதன் வினைவாக ரஷ்யாவின் பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. பெருளாதார சரிவை சற்று சமாளிக்க, இனி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் அதற்கு ரூபிளில் பணம் செலுத்த வேண்டும் என ரஷ்யா அறிவித்தது. இதற்கு பல … Read more

இந்தி எதிர்ப்பு போராட்டம்- சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கைது

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை – எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் நாளை (ஏப்.30) ஈடுபடப்போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தேசியக் கல்வி என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை – எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும் … Read more

திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் கழிவறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ. 7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை  முடக்கியது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாயை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு  பரிசாக கொடுத்ததாக  குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை … Read more

`வாட் வரியை குறைக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்ட பாஜக-வினர்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றாததால், இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்பாட்டக்காரர்கள்  இந்த மாநிலங்களில் இப்போது வாட் வரியைக் குறைக்க கேட்டுக்கொள்கிறேன். நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்ததன் மூலம் குடிமக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க முடிந்தது” என்று பிரதமர் மோடி அன்மையில் பேசியது விவாத … Read more

உணவு பொருள்கள் தீரப்போகிறது: உக்ரைன் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!

உக்ரைனின் மரியுபோல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி இருக்கும் பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் முன்வைத்த கோரிக்கையை ரஷ்ய நிராகரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரில் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற தவறியதை அடுத்து, தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் ரஷ்ய ராணுவம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்தவகையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் தற்போது … Read more

சீன செல்போன் நிறுவனமான சியோமியின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை

பெங்களூரு: சீன நிறுவனமான சியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை  முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சியோமி  நிறுவனம் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ள அமலாக்கத்துறை, அந்நிறுவனத்தின் சொதுக்களை முடக்கி உள்ளது. சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த … Read more

பள்ளியில் நடந்த மோதலில் மாணவர் பலி- 11ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும் 11ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது செல்வ சூர்யாவை எதிர்தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செல்வ சூர்யா, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கோஷ்டி மோதல் … Read more