30.04.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

தமிழகத்தில் 12 வயது மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.. உடந்தையாக இருந்த தாய்! மரண தண்டனை விதிப்பு

தமிழகத்தின் சென்னையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனையும், கணவருக்கு உடந்தையாக இருந்த தாயிற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு 15 வயது சிறுமி புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த நிறுவனத்தின் உறுப்பினர் சிறுமியின் புகாரை மகளிர் காவல்நிலையத்தில் அளித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குறித்த சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததும், அதற்கு சிறுமியின் தாயாரே உடந்தையாக இருந்ததும் தெரிய … Read more

தமிழ் கலாச்சாரத்தை இழிவுபடுத்துபவர்களை தமிழக அரசு அனுமதிக்கிறதா?- அண்ணாமலை கேள்வி

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற திருமூலரின் திருவாக்கை கொண்டாடும் தமிழினம், ஆதி ஈசனின் அற்புதத் தாண்டவத்தை, பாரதத் திருநாட்டின் பாரம்பரிய தத்துவத்தை பெரிதும் போற்றி மதிக்கிறது. ஆனால் கீழ்த்தரமான சிந்தனைகளால், ஆளும் கட்சியின் ஆதரவுடன், சிலர் தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை சிதைப்பதை, அவமானப்படுத்துவதை, தமிழக அரசு எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறது?  மதகோட்பாடுகள் மற்றும் இறை நம்பிக்கையை அவதூறாக பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே … Read more

பழம்பெரும் நடிகை காலமானார்

சென்னை: எம்.ஜி.ஆர் நடித்த ‘விவசாயி’ படத்தில் அறிமுகமான ரங்கம்மாள் பாட்டி (83), தொடர்ந்து சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய், அஜித் குமார் உள்பட அனைத்து நடிகர்களின் படங்களில் நடித்தார். கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்த அவர், வடிவேலு உள்பட பல காமெடி நடிகர்களுடன் நடித்தார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும்வறுமையால் அவதிப்பட்ட அவர், 2018ல் சென்னை மெரினா கடற்கரையில் கர்ச்சீப் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்று பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக … Read more

“என் மனைவி மரணத்தில் மாஜி அமைச்சருக்குத் தொடர்பிருக்கிறது!" – நடிகை சித்ரா கணவர் போலீஸில் புகார்

கடந்த 2020-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ராவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவரின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். நடிகை சித்ரா இந்த நிலையில், ஹேம்நாத் கடந்த 25-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். … Read more

ரஷ்ய நகரங்களில் ஏற்படும் திடீர் தீவிபத்துக்கள்., உக்ரைன் மீது திரும்பும் சந்தேகம்

ரஷ்யாவில் இஷிம் நகரத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் உட்பட பல இடங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது உக்ரைன் மீதான சந்தேகத்துக்கு வழிவகுத்துள்ளது. ரஷ்யாவில் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் சந்தேகிக்கும் வகையில் தீவிபத்துகள் ஏற்ப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று (ஏப்ரல் 28) ரஷ்யாவில் டியூமென் ஒப்லாஸ்ட் பகுதியில் அமைந்துள்ள இஷிம் நகரத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான தீயைத் தொடர்ந்து அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகள் எரிந்து சாம்பலாயின. இஷிம் ஷாப்பிங் … Read more

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களுக்கு நாளை முதல் 37 நாட்கள் கோடை விடுமுறை…

சென்னை: சென்னை உயர்நீதி மன்றம் மற்றும்  மதுரை உயர்நீதி கிளைக்கும் நாளை (ஏப்ரல் 30ந்தேதி) முதல் ஜூன் 5ந்தேதி வரையிலான  37 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டங்களில் அவசர வழக்குகளை விசாரிக்க 21 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சென்னை  உயர்நீதிமன்றத்துக்கும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படும்.  அந்தவகையில் இந்த ஆண்டு நாளை முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை … Read more

கலெக்டர் மூலம் இ-டெண்டர் விடும் அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு

மதுரை: ஊராட்சி பணிகளுக்கு கலெக்டர் மூலம் இ-டெண்டர் விடும் அரசாணையை ரத்து செய்ய கோரி  சிவகங்கை மாவட்ட அனைத்து ஊராட்சித் தலைவர்கள் நல சங்கத்தலைவர் முனியாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.  இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், அரசாணைக்கு தடை விதிக்க மறுத்து, மனு மீதான விசாரணையை விடுமுறை கால அமர்வுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

குளிரூட்டும் பெட்டியுடன் மிதி வண்டி| Dinamalar

மைசூரு:காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்க, மைசூரு பொறியியல் கல்லுாரி மாணவர்கள், சோலார் பேனல் மூலம் இயங்கும் குளிரூட்டும் பெட்டி கொண்ட மிதி வண்டியை வடிவமைத்துள்ளனர்.காய்கறிகளை விற்பனை செய்பவர்கள், அன்றைய தினமே விற்பனை செய்துவிட வேண்டும். இல்லையெனில், அழுகிவிடும். முதலீடு செய்து வாங்கும் காய்கறிகளில், மாலை வரை விற்பனையாகாமல், பல வியாபாரிகள் கால்நடைகளுக்கு கொடுக்கின்றனர் அல்லது சாலையில் வீசி விட்டு சென்றுவிடுகின்றனர்.இதை தவிர்க்கும் வகையில், மைசூரு வித்யாவர்த்தகா பொறியியல் கல்லுாரி மூன்றாம் ஆண்டு மெக்கானிக் பிரிவு மாணவர்கள் நவீன், … Read more

10 நாள்கள்… ஆயிரக்கணக்கான போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் – அகவிலை உயர்வு கோரிப் போராட்டம்!

சென்ட்ரல் அருகே பல்லவன் இல்லத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல‌ அமைப்பு சார்பாகத் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். போராட்டம் ஓய்வுபெற்ற அரசுப்போக்குவரத்து ஊழியர்களுக்கு 77 மாதங்களாக ஓய்வூதியம் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதேபோல, மற்ற அரசுத் துறை ஓய்வூதியர்கள்போலப் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. மேலும், இறந்த ஓய்வூதியர்கள் குடும்பத்துக்கான நிதியுதவி ரூபாய் 50,000 இவர்களுக்கு … Read more