நவீன மேற்கத்திய இராணுவ ஆயுதங்களை வழங்குவோம்: நோட்டோ தலைவர் அதிரடி!

உக்ரைன் ரஷ்ய போரானது மாதகணக்கில் அல்லது ஆண்டு கணக்கில் கூட இழுக்கலாம் என மேற்கத்திய ராணுவ கூட்டமைபான நோட்டோவின் பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையானது மூன்றாவது மாதத்தில் காலெடுத்து வைத்து இருக்கும் நிலையில், இந்த ராணுவ மோதலானது மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூட நீடிக்க வாய்ப்பு இருப்பதாக நோட்டோ பொதுசெயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களை சந்தித்த நோட்டோ பொதுசெயலாளர் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைனுக்கு தேவைப்பட்டால் வருடக்கணக்கில் … Read more

ஆளுநர் ஆர்.என் ரவி ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈவிகேஎஸ் பேச்சு…

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாட்டில் இருந்து ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது என்றும், தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் பேசிய முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார். தமிழக ஆளுந;u  ஆர்.என.ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் நீட் விலக்கு உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுத்து வருகிறார். இதனால், மாநில அரசு ஆளுநரை புறக்கணித்து … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட் ஜூன் 23ல் ஆரம்பம்: போட்டி அட்டவணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. அவ்வகையில் 6-வது டி.என்.பி.எல். போட்டியை வரும் ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் 6வது டிஎன்பிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. போட்டி ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டி நடைபெறும்.  28 … Read more

அனைவருக்கும் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அனைவருக்கும் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கொளத்தூரில் இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ரம்ஜான் பண்டிகையும் ஒரு திராவிட மாடல்தான், கடந்த 2006ல் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சிதான் திமுக ஆட்சி என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆதார் கார்டு: எந்த மொபைல் நம்பர் இருக்கு.. என்ன மெயில்..எப்படி வெரிபை செய்வது?

இந்தியாவில் உள்ள முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் கார்டு, பல முக்கிய பணிகளுக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக வங்கிக் கணக்கு முதல் கொண்டு வருமான வரி தாக்கல் வரையில் அவசியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய அவசியமான ஆவணமான ஆதார் கார்டில் மொபைல் நம்பர், மெயில் ஐடி என பல விவரங்களும் அவசியம் கொடுக்க வேண்டிய விவரங்களாக உள்ளன. உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தாலே போதும்? எளிதில் அதில் செய்ய வேண்டிய அப்டேட்களை … Read more

தண்டந்தோட்டம் பாரிவேட்டைத் திருவிழா: சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தண்டந்தோட்டம் கிராமம் உள்ளது. பொதுவாக எல்லா ஊர்களிலும் எல்லைச் சாமியான ஐயனார் ஊரின் வெளியே இருந்து காவல் காப்பார். சிவாலயமோ, பெருமாள் கோயிலோ அது ஊரின் மையமாக அமைந்திருக்கும். ஆனால் இவ்வூரில் அகஸ்திய மகரிஷிக்குக் காட்சி தந்த சிவகாமசுந்தரி சமேத நடனபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் ஊரின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது.  முத்துவேலாயுதசுவாமி சந்நிதியும், தர்ம சாஸ்தா சந்நிதியும் அமைந்த ஐயனார் கோயில் ஊரின் பிரதான கோயிலாகத் திகழ்கிறது. மிகவும் சிறப்புவாய்ந்த முத்துவேலாயுதசுவாமி கோயிலில் பல்லாண்டுகளாக, … Read more

உக்ரைன் ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டார்! போரிஸ் மீது முன்னாள் தளபதி பரபரப்பு குற்றச்சாட்டு

 பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலந்து ராணுவத்தின் முன்னாள் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் ஜூனியர் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் Waldemar Skrzypczak இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, உக்ரேனிய பயிற்சி திட்டம் குறித்த விவரங்களை கூறியதன் மூலம், ராணுவ ரகசியத்தை போரிஸ் ஜான்சன் வெளிப்படுத்திவிட்டார். உக்ரைனில் ஆயுதங்களை குவிப்பது ஐரோப்பியாவிற்கு நல்லதல்ல! ரஷ்யா எச்சரிக்கை  பிரிட்டிஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது … Read more

மத்தியபிரதேச காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து முன்னாள் முதல்வர் கமல்நாத் விலகல்…

போபால்: பாஜக ஆட்சி செய்து வரும், மத்தியபிரதேச மாநிலத்தில், சட்டமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் கமல்நாத் இருந்து வருகிறார். இவர் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் கமல்நாத் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் … Read more

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும்- மு.க.ஸ்டாலின்

சென்னை: பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று விளக்கம் அளித்தார். … Read more