கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மருந்தகம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி, இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டின் 7வது பதிப்பு ஏப்ரல் 25 முதல் 27 வரை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற்ற ஊடக மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டில்  பேசிய அவர் கூறியதாவது:- “இன்று, நாம் உலகின் மருந்தகமாக இருக்கிறோம், மேலும் இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாகவும் உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 17 கோடிக்கும் அதிகமான … Read more

“ஒவ்வொரு வாசகரையும் ஆசுவாசப்படுத்தும் 1001 அரேபிய இரவுகளின் கதைகள்!” – சஃபி நேர்காணல்

மனித நாகரிகத்தின் பெரும் செல்வங்களில் ஒன்று ‘1001 அரேபிய இரவுகள்’ கதைத் தொகுதி. சொல்லப்பட்ட காலம்தொட்டு இன்றுவரை வாசிப்பில் புதிய திறப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் இக்கதைகளின் நவீனத் தமிழ் மொழிபெயர்ப்பை, தேனி மருத்துவக் கல்லூரியில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்டாகப் பணிபுரிந்துவரும் முகமது சஃபி கொண்டுவந்துள்ளார். உளப்பகுப்பாய்வில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் சஃபி, அரேபிய இரவுகள் கதைகளில் பல்வேறு அம்சங்கள் குறித்து இங்கு பகிர்ந்துகொள்கிறார். முகமது சஃபி “ ‘1001 அரேபிய இரவுகள்’ கதைகளை நீங்கள் முதன்முறையாகக் கண்டடைந்த தருணம் … Read more

ஆட்டத்தை நிறுத்த சொன்ன ரிஷப் பண்ட்.. வெடித்த சர்ச்சை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தை நிறுத்துமாறு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணித்தலைவர் ரிஷப் பண்ட் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மெக்காய் வீசிய அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளை பாவெல் சிக்ஸருக்கு விளாசினார். 3வது பந்தை மெக்காய் … Read more

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத்தேர்வு 2மணி நேரமாக குறைப்பு 

சென்னை: தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.  11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ளது. … Read more

தமிழகத்தின் 3 அணைகளுக்கு நீர்ப்பாசன கட்டமைப்பு விருது- சர்வதேச ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம், ஒவ்வொரு ஆண்டும், உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு விருதுகள் போன்ற விருதுகளை அறிவிக்கிறது. ஐ.சி.ஐ.டி. சார்பாக, இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மாநிலங்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தகுதியான முன்மொழிவுகளை ஐசிஐடி அமைப்பிற்குப் பரிந்துரைக்கிறது. இதன்படி ஜுலை 2021-ல் தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதி: எஸ்.பி அறிவிப்பு

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என  சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்தார். நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.கோடை விடுமுறை காலம் என்பதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளனர். இந்நிலையில், வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், வார இறுதியில் பக்தர்களின் கூட்டம், 70 ஆயிரத்தை தொடுகிறது.முன்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேவஸ்தானம் டிக்கெட் … Read more

டெல்லி: பைக் மீது கார் மோதிய விபத்தில் அந்தரத்தில் பறந்த நபர் !

புதுடெல்லி, டெல்லி அருகே காசியாபாத் வேவ் சிட்டியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பைக்கின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டார். அவர் காரில் மோதி சுழன்றபடி தூக்கிவீசப்பட்டார். அதே நேரத்தில் அவரது பைக் காரால், சில மீட்டர்கள் இழுத்துச்செல்லப்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் … Read more

`இயற்கைதான் விவசாயம் செய்யுது; நான் அதை பார்த்துக்கிட்டிருக்கேன்!' – பரிசு பெற்ற இயற்கை விவசாயி

செங்கல்பட்டு மாவட்டத்தின் ‘முன்னோடி விவசாயி’ விருது பெற்றிருக்கிறார் இறையழகன் என்கிற தெய்வசிகாமணி. இவருடைய பண்ணை செங்கல்பட்டு மாவட்டத்தின் ‘சிறந்த பண்ணை’க்கான முதல் பரிசைப் பெற்றிருக்கிறது. இவருடைய உணவுக்காடுப்பற்றி ஏற்கெனவே பசுமை விகடனில் எழுதியிருக்கிறோம் என்பதால், தெய்வசிகாமணி வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ‘முன்னோடி விவசாயி’ விருதாளருக்குப் பசுமை விகடனின் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, விருதுபெற்ற அனுபவத்தைப் பகிரக் கேட்டோம். தெய்வசிகாமணி ”செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பக்கத்துல குழிப்பான் தண்டலம் ஊராட்சியில இருக்கிற புதிய இடையூர் கிராமம்தான் எங்க சொந்த ஊர். … Read more