இரசாயன முறையில் ஆண்மை நீக்கம்! குழந்தைகளிடம் தவறு செய்பவர்களுக்கு தண்டனை., பிரபல நாடு அதிரடி

தென் அமெரிக்க நாடான பெருவில், சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு இரசாயன முறையில் ஆண்மையை நீக்கும் (chemical castration) தண்டனையை கூடுதலாகா வழங்க அனுமதிக்கும் மசோதாவை அரசாங்கம் முன்வைக்கும் என்று அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்றும், தண்டனையின் முடிவில் ரசாயன முறையில் காஸ்ட்ரேட் செய்யப்படுவார்கள் என்றும் அரசாங்கம் நம்புகிறது என்று நீதி அமைச்சர் பெலிக்ஸ் செரோ தெரிவித்துள்ளார். 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக … Read more

கேரளாவில் 21வயது இளைஞருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று…

திருவனந்தபுரம்: கேரளாவில் 21வயது எக்ஸ் இ வகை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள மாநில மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், லாக்டவுன் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த உருமாறிய தொற்று ஒரு மாதத்திற்கு முன்பே கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் முதல்வாரத்தில், மும்பையில் எக்ஸ்இ புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவ்வாறு புதிய … Read more

கொடநாடு கொலை வழக்கு: குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்- சசிகலா

கொடநாடு கொலை- கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை விசாரணை நடத்தி, சசிகலா அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் பிற்பகல் 2 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:- கொடநாடு … Read more

நெடுஞ்சாலை துறையில் உள்தனிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் நடப்பாண்டில் இருந்து உள்நிறுவன சொந்த தணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். ஒவ்வொரு வட்டமாக தணிக்கை செய்யப்படும் என்றும் மே 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை தணிக்கை செய்யப்படும் என்றும் தணிக்கை செய்யப்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட விமுறைகளின் படி பதிவேட்டில் உள்ளபடி சாலை போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் … Read more

2050ல் இந்தியாவிலிருந்து வறுமை முற்றிலும் ஒழிந்துவிடும்: சொல்கிறார் அதானி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: 2050ல் இந்திய பொருளாதாரம் சுமார் 25 லட்சம் கோடி டாலர் அளவை எட்டும், அப்போது அனைத்து வடிவிலான வறுமையும் ஒழிந்திருக்கும் என தொழிலதிபர் கெளதம் அதானி தெரிவித்தார். தனியார் நிறுவனம் ஒன்றின் இந்திய பொருளாதார மாநாட்டில் அதானி மேலும் பேசியதாவது: 2050ம் ஆண்டிலிருந்து சுமார் 10 ஆயிரம் நாட்கள் தள்ளி இருக்கிறோம். இந்த காலகட்டத்தில், இந்தியா தனது பொருளாதாரத்தை 25 லட்சம் கோடி டாலராக மாற்றியிருக்கும் என நான் … Read more

அச்சச்சோ.. தங்கம் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்.. இன்று என்ன நிலவரம்?

இந்தியர்களுக்கு மிக பிடித்தமான உணர்வுபூர்வமான உலோகங்களில் ஒன்றான தங்கம் விலையானது, சமீப நாட்களாகவே அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றது. இந்த விலை விகிதமானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் மீடியம் டெர்மில் ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா? குறைந்தால் வாங்கி விடலாமே என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. தங்கம் விலை இன்றும் குறைந்திருக்கா.. தற்போதைய நிலவரம் என்ன.. இனியும் குறையுமா? தேவை அதிகரிக்கலாம் ஆனால் அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் … Read more

“எம்எல்ஏ-க்களுக்கு ஒரு கார் கொடுங்க..!" – சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “உள்ளாட்சி அமைப்புகளை வலுசேர்க்கும் வகையான முதல்வரின் அறிவிப்பை நான் மனதார வரவேற்கிறேன். முதல்வரின் பார்வை ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர், ஊராட்சிமன்றத் தலைவர் வரை வந்திருக்கிறது. அந்த பார்வை சட்டமன்ற உறுப்பினர்கள் வரை வரவில்லை என்ற ஒரு ஆதங்கம் எல்லோரிடத்திலும் இருக்கிறது” என்று சிரித்தபடியே சொன்னார். நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேசியவர், “எனக்குக் கூட … Read more

பிரசவம் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல- தனது பிரசவம் பற்றி மனம் திறந்த காஜல்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் இறுதியில் தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. அதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு, காஜலின் கணவர் கௌதம் காஜல் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். மே மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில்  இரண்டு நாட்களுக்கு முன்பு காஜலுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு நீல் கிட்சிலு என்று பெயரும் சூட்டியிருந்தார்கள். இந்நிலையில் காஜல் தன்னுடைய பிரசவ நேரம் … Read more

மனைவியுடன் தாம்பத்யம் நடத்த ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல் ! ராஜஸ்தான் நீதிமன்றம் சலுகை…

ஜெய்ப்பூர்: மனைவியுடன் தாம்பத்யம் நடத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கி ராஜஸ்தான் நீதிமன்றம் சலுகை அளித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கு காரணமாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்த் லால்  என்பவரை சந்ததி உரிமை (Right Of Progeny) அடிப்படையில் சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி அவரது மனைவி ரேகா என்பவர்,  ராஜஸ்தான் உயர் நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த … Read more

மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கவேண்டிய மின்சாரம் கிடைக்காததால்தான் மின்தடை- அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.  அதில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, காங்கிரசின் செல்வப்-பெருந்தகை ஆகியோர்  பேசினார்கள்.  இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- கடந்த 18-ந் தேதி 317 மில்லியன் யூனிட் நுகர்வு 21-ந் தேதி 343 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து வர வேண்டிய 796 … Read more