தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை! பள்ளிக்கல்வி துறை

சென்னை:  தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 16ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருந்த நிலையில், அன்றைய தினமும்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும் 15 ஆம் தேதி புனித வெள்ளி … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – வீழ்ச்சி அடையும் உள்நாட்டு உற்பத்தி

12.4.2022 00.20: ரஷியா உடனான போர் உக்ரைனின் பொருளாதார உற்பத்தியை இந்த ஆண்டு 45 சதவீதம் வீழ்ச்சி அடையச் செய்யும் என உலக வங்கி கணித்துள்ளது. போரால் உக்ரைனின் வணிகங்களில் பாதிக்கும் மேல் மூடப்பட்டது. இதேபோல், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 11.2 சதவீதம் சுருங்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

நாடு முழுதும் 18 – 59 வயதினருக்கு முதல் நாளில் 9,700 பூஸ்டர் டோஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-நாட்டில், 18 – 59 வயதுடையோருக்கு, முதல் நாளில், 9,674 முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும், ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுதும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின், ‘கோவாக்சின்’ தடுப்பூசியும், ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனத்தின், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல, 12 – 14 வயதுள்ள சிறாருக்கு, ‘பயாலஜிக்கல் – இ’ … Read more

“அரசுக்கு எதிரானப் போராட்டத்தை நிறுத்துங்கள்..!" – மன்றாடும் மகிந்த ராஜபக்சே

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதற்குப் பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டுமென, பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர். விலைவாசி உயர்வால் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவித்துவரும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். இலங்கை மக்கள் போராட்டம் இந்த நிலையில், இன்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டு மக்களுக்கு உறையாற்றினார். அப்போது பேசிய … Read more

புடினுடனான பேச்சுவார்த்தை கடினமாக இருந்தது! வெளிப்படையாக கூறிய ஆஸ்திரிய அதிபர்

  ரஷ்ய அதிபர் புடினுடனான பேச்சுவார்த்தை மிகவும் நேரடியாக, வெளிப்படையாக மற்றும் கடினமானக இருந்தது என ஆஸ்திரிய அதிபர் Karl Nehammer தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆஸ்திரியாவின் அதிபர் Karl Nehammer இன்று ரஷ்யா சென்று புடினைச் சந்தித்தார். பிப்ரவரி 24 அன்று உக்ரைனன் மீது படையெடுக்கும் படி தனது துருப்புக்களுக்கு உத்தரவிட்ட பிறகு, புடினை சந்திக்கும் முதல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Karl Nehammer ஆவார். புடினுடனான பேச்சுவார்த்தை முடிந்ததை தொடரந்து, … Read more

“இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” : கர்நாடகாவில் வகுப்புவாத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர எடியூரப்பா அழைப்பு

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்துத்துவா அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பழ வண்டிகளை சேதப்படுத்தியது தொடர்பாக ஸ்ரீ ராம சேனா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், எடியூரப்பா இவ்வாறு கூறியுள்ளார். ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள இந்து கோயில்களில் இஸ்லாமியர்கள் கடை வைக்க அனுமதிக்கக் கூடாது, முஸ்லீம் ஓட்டுனர்களின் டாக்ஸி ஆட்டோக்களில் ஏறக்கூடாது, ஹலால் இறைச்சியைப் … Read more

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐதராபாத் அணி

மும்பை: நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 168 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நடை மேம்பாலத்தை நிர்வகிப்பதில் பெங்களூரு மாநகராட்சி அலட்சியம்| Dinamalar

பெங்களூரு : பாதசாரிகள் ஆபத்தின்றி சாலையை கடக்கும் நோக்கில் கட்டப்பட்ட நடை மேம்பாலத்தை நிர்வகிப்பதில், பெங்களூரு மாநகராட்சி அலட்சியம் காண்பிக்கிறது.பெங்களூரின் மைசூரு சாலையில், பேட்ராயனபுரா அருகில் காளி ஆஞ்சனேயர் சுவாமி கோவில் அருகில், மக்கள் சாலையை கடக்க நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஆஞ்சனேயர் கோவிலில், திருவிழா நடந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நடை மேம்பாலத்தின் ‘லிப்ட்’ பழுதடைந்துள்ளது. இதை சரி செய்யாமல், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காண்பிக்கின்றனர்.மாலையில் ரத உற்சவம், திருவிழா நடக்கும் போது மட்டும் … Read more

சீரிஸ் 2 :பங்கு வெளியீடு என்றால் என்ன.. செகண்டரி சந்தை என்ன செய்கிறது.. இது லாபகரமானதா?!

பங்கு சந்தை என்றால் என்ன? அது எப்படி செயல்படுகின்றது என்பதை சீரிஸ் 1ல் பார்த்தோம். இன்று பங்கு சந்தைக்குள் எப்படி ஒரு நிறுவனம் நுழைகிறது. ஐபிஓ என்றால் என்ன? இரண்டாம் நிலை சந்தை அல்லது செகண்டரி சந்தை என்றால் என்ன? இதிலும் லாபம் பார்க்க முடியுமா? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். வார சந்தைபோல் தான் பங்கு சந்தையும் என்பதை பார்த்தோம். அந்த வார சந்தையில் யார் வேண்டுமானாலும் கடை போட முடியுமா … Read more

அரிசி கொள்முதல் விவகாரம்: மத்திய அரசுக்கு 24 மணி நேரம் காலக்கெடு விதித்த தெலங்கானா முதல்வர்!

தெலங்கானா மாநிலத்திலிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்யக்கோரி அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மத்திய அரசை எதிர்த்து தலைநகர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார். நடப்பு பருவத்தில் தங்கள் புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என்ற தெலங்கானா அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. அதைத் தொடர்ந்து தெலங்கானா அரசு தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு … Read more