பெட்ரோலிய பொருட்கள் உயர்வு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனத்தை பிரதிபலிக்கும் கார்டூன்…

பெட்ரோலிய பொருட்கள் உயர்வு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனத்தை பிரதிபலிக்கிறது  ஓவியர் பாரியின் கார்டூன். https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-Audio-2022-04-06-at-4.21.12-PM.ogg  

10 மாதங்களில் 8,905 இடங்களில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சட்டசபையில் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன் இன்று சோழவந்தான் பகுதியில் கல்வேலிப்பட்டி, கொண்டையம்பட்டி மற்றும் இடையப்பட்டி ஆகிய இடங்களில் துணைமின் நிலையம் அமைக்க அரசு நடடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசியதாவது:- 10 மாதங்களில் 216 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் உத்தரவின்படி தற்போது 193 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மீதி உள்ள 23 துணை மின் நிலையங்கள் … Read more

ஐபிஎல் 2022: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

புனே: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. புனேவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்க உள்ளது.

கூகுள் மேப்பில் புதிய அப்டேட்| Dinamalar

சென்னை: சுங்கக் கட்டண சாலைகளில் சென்றால் எவ்வளவு செலவாகும், அதனை தவிர்த்துவிட்டு சாதாரண சாலைகளில் பயணித்தால் எவ்வளவு மிச்சம் என்பதை கூகுள் மேப் செயலி தனது புதிய அப்டேட்டில் கொண்டு வந்துள்ளது. சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வைத்திருப்போருக்கு சுங்கக் கட்டணம் என்பது சுமையாக உள்ளது. மேலும் பண்டிகை காலங்கள் போன்ற நாட்களில் சுங்கச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்து செல்வதற்குள் பண்டிகையே முடிந்து விடுகிறது. சில சுங்கச்சாவடிகள் அனுமதிக்கப்பட்ட ஆண்டுகளையும் கடந்து கட்டணம் வசூலிப்பதாக … Read more

4ஜி சேவை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் .. இனி ஜியோ, ஏர்டெல் தேவையில்லையா..?

இந்தியாவில் டெலிகாம் சேவையின் தரமும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் டெலிகாம் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி, 5ஜி எனத் தனது தொழில்நுட்பத்தை வேகமாக மேம்படுத்தி அதிகப்படியான வருமானத்தைப் பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் டெலிகாம் நிறுவனமான 4ஜி சேவை அளிக்காது கவலை அளிக்கும் விஷயமாகவே இருந்தது. இதற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளதாகத் தெரிகிறது. ஏர்டெல், வோடபோனுக்கு மிகப்பெரிய ரிலீப்.. டெலிகாம் துறையின் சூப்பர் முடிவு.. இனி … Read more

கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு; கிராம மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட வடசேரிப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 528 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடிகள் குடியிருப்பு கட்டுவதாக கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் விடப்பட்டது. அதற்கான பணிகள் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின. இந்த நிலையில், இங்கு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுவதற்கு கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்பு … Read more

ரஷ்ய பேரரசு… போர்த்துகல் வரையில் ஆட்சி: விளாடிமிர் புடினின் கனவுத் திட்டம்

ரஷ்யா முதல் போர்த்துகல் வரையான ஒரு பேரரசை நிறுவவே விளாடிமிர் புடின் திட்டமிட்டு வருவதாக ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி Dmitry Medvedev எச்சரித்துள்ளார். தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் பாரிய இராணுவத் தாக்குதலை ரஷ்யா திட்டமிடுகிறது என்ற மேற்கத்திய நாடுகளின் அச்சங்களுக்கு மத்தியில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினின் ஆதரவாளரும் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான Dmitry Medvedev மேலும் குறிப்பிடுகையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டவே ரஷ்யா முயன்று வருவதாகவும், சிறப்பு இராணுவ நடவடிக்கையை மக்கள் … Read more

இந்திய பணக்காரர்களில் முதலிடத்திலும் உலக பட்டியலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி! போர்ப்ஸ் தகவல்…

2022ம் ஆண்டுக்கான உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஆய்வு பத்திரிகையான போர்பஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலகளவில் 10-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின்படி,  முகேஷ் அம்பானியின் சொத்து கடந்த நிதியாண்டு மேலும் 7 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், தற்போது, 9ஆயிரத்து 70 கோடி டாலருடன்  முதலிடத்தை பிடித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தாலும், உலக அளவில் 10வது … Read more

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு – முக்கிய சாட்சியான வழக்கறிஞர் திடீர் தற்கொலை

சென்னை: கடந்த 2017-ம் ஆண்டு முன்னான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டது. அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.   இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க டி.டி.வி.தினகரனிடம் பணம் பெற்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில் டெல்லி போலீசார் கைது … Read more

அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.