டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்- விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் சசிகலா அணியினரும் முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணியினருக்கு ஒதுக்க தேர்தல் … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ள போதிலும் தவறாமல் மாஸ்க் அணியுங்கள்.: சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ள போதிலும் தவறாமல் மாஸ்க் அணியுங்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா ஒருநாள் பாதிப்பு 20-ஆக குறைந்தபோதிலும் தற்போது ஆங்காங்கே லேசாக உயர்ந்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய உள்விவகாரத்தில் தலையிடும் அல்கொய்தா; கர்நாடக ஹிஜாப் பெண்ணுக்கு பாராட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: கர்நாடக ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவியையும் அவர் பாராட்டியுள்ளார். கர்நாடகாவில் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தின்போது அங்குள்ள தனியார் கல்லூரியில் முஸ்கான் என்னும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தபோது, சில மாணவர்கள் சூழ்ந்து ‛ஜெய்ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். இதையடுத்து அந்த மாணவி பதிலுக்கு, … Read more

போர்ப்ஸ் பட்டியலில் 10வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி.. அப்போ கௌதம் அதானி..?!

உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கையாக விளங்கும் போர்ப்ஸ் 36 வது முறையாக உலகப் பணக்காரர்கள் பட்டியை வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டுப் பில்லியனர்கள் பட்டியலில் எப்போதும் இல்லாமல் பில்லியனர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு 87 பேர் குறைந்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் 1000 பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டுமே உயர்ந்துள்ளது, பிற பில்லியனர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இதேவேளையில் இந்திய பில்லியனர்களின் பலரின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தட்டி தூக்கிய டிசிஎஸ்.. … Read more

தத்தெடுத்த சிறுமி வன்கொடுமை; பருவமடைந்த பிறகு கொடூர முகத்தைக் காட்டிய குடும்பம் – 4 பேர் கைது

சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் குடியிருந்து வருகிறார். இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரின் சகோதரி, ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் ஒன்றைத் தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக மாணவியின் வீட்டுக்குச் சென்றனர். மாணவியிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களையும் போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். பாலியல் வன்கொடுமை இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரின் வளர்ப்பு தந்தை ஷெரீப் (64), … Read more

நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்த நபர்! பரபரப்பு காணொளி

கஜகஸ்தானில் நபர் ஒருவர் நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் அத்துமீறி நழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கஜகஸ்தானின் அல்மாட்டி விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. இணையத்தில் வெளியான வீடியோவில், நபர் ஒருவர் நிர்வாணமாக, அத்துமீறி விமான நிலையத்தின் இரும்பு தடுப்பு வேலி மீது ஏறி உள்ளே குதிக்கிறார். பின், விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக ஓடியுள்ளார். அந்த நபர் மது போதையில் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய … Read more

தமிழ்நாட்டில் 70ஆயிரம் ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றம்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 70ஆயிரத்து 116 ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழகஅரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் சீமை கருவேல மரங்கள்,  தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்ற அடிப்படையில் இந்த மரங்களை கடந்த 1950- 60களில் வெளிநாட்டிலிருந்து,  விதைகளாக கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் தூவப்பட்டது. இந்த விதைகள்தான் தற்போது மரமாக வளர்ந்து, தமிழக விவசாயிகளின் வாழ்தாரத்தை சிதைத்து வருகிறது. தமிழ்நாடு … Read more

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி- காற்றழுத்த தாழ்வு பகுதி 9ந் தேதி உருவாகிறது

சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். நாளை 7-ந் தேதி தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, டெல்டா மாவட்டங்களில் லேசான மழையும், 8, 9-ந் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more

சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின்போது எஸ்ஐ மீது ஆட்டோவை வைத்து மோதிய நபர் கைது

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின்போது எஸ்.ஐ. மீது ஆட்டோவை வைத்து மோதிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் சுதர்சனம்(65) கைது செய்யப்பட்டார்.

பொய் செய்திகளை பரப்பிய சமூக ஊடகங்கள் முடக்கம்| Dinamalar

புதுடில்லி:நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, சட்டம் – ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை வெளியிட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு ‘யுடியூப் சேனல்’ உட்பட, 22 சேனல்கள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பொய் செய்திகள், வன்முறையைத் துாண்டும் வகையிலான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, மத்திய … Read more