அமெரிக்க அறிவிப்புக்கு செவி சாய்க்காத தங்கம்.. சென்னை, கோவையில் தங்கம் விலை இதுதான்..!

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் உறுதியாக இருக்கும் காரணத்தாலும், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாகவும் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1930 டாலரில் இருந்து 1915 டாலருக்கு சரிந்துள்ளது. முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க? ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. ஏன் தெரியுமா..? தங்கம் சர்வதேச … Read more

பஞ்சாயத்தை தொடங்கிய பன்னீர்; உஷ்ணமான எடப்பாடி; வெளியேறிய வைத்தி! – அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில், நேற்று (06.04.2022) மாலை கட்சியின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் போன்ற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் இடையே காரசார விவாதம், கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் கூட்டத்தில் என்ன நடந்தது … Read more

ஐபிஎல்! உலகில் நம்பர் 1 பவுலர் ஓவரை துவம்சம் செய்த இளம் வீரர்… ரசிகர்கள் ஆச்சரியம்

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா அசத்தலாக ஆடிய விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை அணி தோற்றது. இருந்த போதிலும் அந்த அணியை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. முக்கியமாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும், டி20ல் அசுரத்தனமான ஃபார்மிலும் இருக்கும் பேட் … Read more

பாண்டிச்சேரி முதல்வரால் தொடங்கப்பட்ட, ‘சூரியனும் சூரியகாந்தியும்’!

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து, டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் இயக்குனர் ஏ.எல்.ராஜா தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், ‘சூரியனும் சூரியகாந்தியும்’. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். இணைத் தயாரிப்பு, டெய்லி குருஜி. அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதை நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில், ரிதி உமையாள் நாயகியாக தோன்றுகிறார். சந்தான பாரதி, செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள் உள்ளிட்டோர் … Read more

தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்த சேவையும் வழங்கப்பட மாட்டாது- கலெக்டர்

கரூர்: கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெட்ரோல்பங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அதிக அளவில் உயிரிழப்புகள் நடக்கும் மாவட்டமாக கரூர் மாவட்டம் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் தலைக்கவசம் … Read more

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ரூ.38,992-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ரூ.38,992-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.4,874-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.71.10-க்கு விற்பனையாகிறது.

இந்தியாவில் ‛எக்ஸ்.இ., வகை கொரோனா இன்னும் இல்லை: மத்திய அரசு விளக்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மிக வேகமாக பரவக்கூடிய, உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான் எக்ஸ் இ’ வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்தியாவில் ‛எக்ஸ் இ’ வகை கொரோனா கண்டறியப்படவில்லை என விளக்கமளித்துள்ளது. நாட்டில், இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக இருந்த கொரோனா வைரஸ் பரவல், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அதிவேகமாக … Read more

டிஜிட்டல் பணத்தை உருவாக்கும் மார்க் ஜூக்கர்பெர்க்.. பெரிய நிறுவனங்களின் ஆட்டம் ஆரம்பம்..!

உலக நாடுகளின் நிதியியல் சந்தை இனி வரும் காலத்தில் கிரிப்டோகரன்சி, பிளாக்செயின், NFT வாயிலாகத் தான் இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக், அந்நாட்டு நாணயங்களை அச்சிடும் ராயல் மின்ட் அமைப்பைக் கோடைக் காலத்திற்குள் NFT உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வர உத்தரவிட்டார். இது உலகம் முழுவதும் பேசப்பட்ட நிலையில் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் இறங்கியுள்ளது. இதில் முக்கியமாகப் பேஸ்புக், இண்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா -வின் … Read more

Suzuki V-Strom SX 250: சூடாக வந்திருக்கும் சுஸூகியின் புது அட்வென்ச்சர் பைக்கில் இவ்வளவு ஸ்பெஷலா!?

சூடாக வந்திருக்கும் சுஸூகியின் புது அட்வென்ச்சர் பைக்கில் இவ்வளவு ஸ்பெஷலா? மற்ற அட்வென்ச்சர் பைக்குகளை விட பல ஸ்பெஷல்கள் இதில் இருக்கின்றன. ஓவர்ஆலாக நல்ல பேக்கேஜாக, பல சூப்பர் அம்சங்களுடன் வந்திருக்கிறது வி–ஸ்ட்ராம் 250 சிசி பைக். சுஸூகியில் ஸ்போர்ட்ஸ் பைக் இருக்கு; க்ரூஸர் பைக் இருக்கு; பிக் பைக்ஸ் இருக்கு; ஸ்கூட்டரும் இருக்கு! அட்வென்ச்சர் மட்டும்தான் இல்லாமல் இருந்தது. இப்போது அந்தக் குறையும் தீர்ந்து விட்டது. அட்வென்ச்சர் பைக் செக்மென்ட்டில் லேட்டஸ்ட்டாக, V – Strom … Read more

உக்ரைனில் சரமாரியாக குண்டுகளை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்! வெளியான வீடியோ ஆதாரம்

 உக்ரைனில் ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை பொழிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது 43வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, புச்சா நகரில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புடினின் இரண்டு மகள்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, ரஷ்ய வங்கி மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. இதனிடையே, உக்ரைன் மீது இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை பொழியும் காட்சி … Read more