கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை.

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ரேசன் கடைகளில் ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  அரிசி கடத்தல், ரேஷன் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறியவர், இது தொடர்பான புகார் … Read more

ஐபிஎல் கிரிக்கெட்- 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி … Read more

2022 ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

மும்பை: பெங்களூரு அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து … Read more

மாஜி மல்யுத்த வீரர்கள்| Dinamalar

பெங்களூரு, : ”முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை, 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது,” என இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாராயண கவுடா தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:முதல்வர் பசவராஜ் பொம்மை, 2022 – -23 பட்ஜெட்டில், 50 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் மல்யுத்த வீரர்களின் உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, மாநில அளவில் 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும்; தேசிய அளவில் 3,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும்; சர்வதேச அளவில் 4,000 ரூபாயிலிருந்து … Read more

குபேரப்பட்டினத்தில் பரம ஏழையையும் குபேரனாக்கும் ஸ்ரீமஹாராஜ குபேர ஹோமம் – நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஈசனும் குபேரரும் ஒருசேர அருள்பாலிக்கும் இந்த தலத்தில் வரும் 14-4-2022 அன்று சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான சம்பத்துக்களைப் பெற்று வாழ வேண்டுகிறோம். காமதேனு போன்றவை ஹோமங்கள், மனிதன் விரும்புவதை அக்னி பகவான் வழியே குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அறிவித்து நலம் அடையச் செய்பவை ஹோமங்கள். மனிதனைப் படைத்தபோதே நான்முகன் அவர்களுக்கு ஹோமங்கள் செய்யப்படும் விதங்களை ரிஷிகளின் வழியே அளித்ததை பகவத் கீதை ஸ்லோகம் ஒன்று கூறுகிறது என ஆன்மிகப் … Read more

நமது கண்முன்னே அப்பாவி உயிர்களின் படுகொலை… ஐநாவில் பிரபல ஐரோப்பிய நாடு வருத்தம்!

உக்ரைனில் நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் அயர்லாந்து தூதர் ஜெரால்டின் பைர்ன் நாசன் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 41வது நாளாக போர்த்தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷ்ய ராணுவம் பல மனித உரிமை மீறல்களையும் போர் விதிமீறல்களையும் புரிந்து இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அந்தவகையில், உக்ரைனின் புச்சா நகரின் தெருக்களில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகள் வெளியாகி உலகநாடுகள் மத்தியில் பெரும் … Read more

சென்னையில் நாளை (06/04/2022) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் விவரம்

சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை மாகரின் முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனவும் பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மின்வாரியம் வெளியிட்டுள்ள தகவலில்,  நாளை முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இதன் காரணமாக … Read more

காதலிக்க மறுக்கும் பெண்களின் மீதான தாக்குதல் சம்பவம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது: சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வேதனை

சென்னை: காதலிக்க மறுக்கும் பெண்களின் மீதான தாக்குதல் சம்பவம் பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண்கள் மீதான தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

“என் கணவரோட சாவுக்கு காவல்துறைதான் காரணம்!" – தீக்குளித்து உயிரிழந்தவரின் மனைவி கதறல்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் சுதா. இவர் கணவர் சுதாகர். மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் இவர், தன் கணவரின் இருதய சிகிச்சை செலவுகளுக்காக , தன் சகோதரரான பிரசாந்திடம் கடன் வாங்கியிருக்கிறார். அதில் பெரும்பகுதி தொகையைச் சுதா திருப்பிக் கொடுத்துவிட்ட நிலையில், மீதி தொகையைத் தரத் தாமதமாகியிருக்கிறது. டீக்கடை நடத்தி வந்த இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்திருக்கிறார்கள். இதன் காரணமாக, தாங்கள் வாங்கியிருந்த கடனை … Read more

வெளிநாடுகளில் உள்ள சில இலங்கை தூதரங்கள் மூடல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சில தற்காலிகமாக மூடப்படுகின்றன. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   Source link