தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி- காற்றழுத்த தாழ்வு பகுதி 9ந் தேதி உருவாகிறது

சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். நாளை 7-ந் தேதி தென் கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, டெல்டா மாவட்டங்களில் லேசான மழையும், 8, 9-ந் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more

சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின்போது எஸ்ஐ மீது ஆட்டோவை வைத்து மோதிய நபர் கைது

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின்போது எஸ்.ஐ. மீது ஆட்டோவை வைத்து மோதிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர் சுதர்சனம்(65) கைது செய்யப்பட்டார்.

பொய் செய்திகளை பரப்பிய சமூக ஊடகங்கள் முடக்கம்| Dinamalar

புதுடில்லி:நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, சட்டம் – ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை வெளியிட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த நான்கு ‘யுடியூப் சேனல்’ உட்பட, 22 சேனல்கள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, பொய் செய்திகள், வன்முறையைத் துாண்டும் வகையிலான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, மத்திய … Read more

இந்த முறை டார்கெட் மிஸ் ஆகாது.. மத்திய அரசு உறுதி..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நிதியாண்டில் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட முடியாமல் போனது. மார்ச் மாத இறுதிக்குள் எப்படியாவது வெளியிட வேண்டும் நடப்பு கணக்கு பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தது. ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் சர்வதேச சந்தையில் ஏற்படுத்திய தாக்கம் மத்திய அரசின் கனவு திட்டமான எல்ஐசி ஐபிஓ ஒத்தி வைக்கப்பட்டது. இது மத்திய அரசுக்கு மட்டும் அல்லாமல் பல லட்சம் ரீடைல் … Read more

5 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை; பொதுமக்களின் எதிர்ப்பால் மீண்டும் மூடல்!

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும், 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. அந்த டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதாகவும், குடும்பங்கள் சீரழிவதாகவும் பொதுமக்கள் புகார் எழுப்பினர். அதையடுத்து, அந்த டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், மக்கள் ஒன்று திரண்டு 2017, மே.20-ம் தேதி மாதர் சம்மேளன மாவட்டத் தலைவர் இந்திராணி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் … Read more

கொல்லப்பட்ட உக்ரைன் மேயர் ரஷ்யா தொடர்பில் கூறிய கடைசி வார்த்தை

உக்ரைன் பெண் மேயர் ஒருவர் ரஷ்ய துருப்புகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் முன்னர் தமது கிராம மக்களுக்கு அளித்த செய்தி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உக்ரைன் நகர மேயரான Olga Sukhenko ரஷ்ய துருப்புகளால் கடத்தப்பட்டு, அவரது சடலமானது கணவர் மற்றும் மகன் உடல்களுடன் பள்ளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. Olga Sukhenko வசித்துவந்த குடியிருப்பில் இருந்தே குடும்பத்துடன் ரஷ்ய துருப்புகளால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, படுகொலை செய்து வனப்பகுதியில் ஒரு பள்ளத்தில் சடலத்தை வீசிச் சென்றுள்ளனர். ரஷ்ய துருப்புகளுக்கு … Read more

இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இரண்டு முறை அவரது இந்திய பயணம் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா-இங்கிலாந்து இடையேயான  வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ … Read more

தமிழகத்தில் 2023-ம் ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110-வது விதியின்கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் தொழில் துறையை மீட்டெடுப்போம்”, “தொழில் வளர்ச்சியை பரவலாக்க கொள்கைகள் வகுக்கப்படும்”, “தொழில் தொடங்க முன்வருவோரை ஊக்குவிக்கக்கூடிய வகையில் ஒற்றைச் சாளர முறை மூலமாகத் தொழில் வளத்தைப் பெருக்குவோம்” என்று தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அந்த வாக்குறுதிகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இந்த அரசு … Read more

கும்மிடிப்பூண்டியில் ரூ.13,000 லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளர் கைது

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் ரூ.13,000 லஞ்சம் பெற்ற மின் வணிக ஆய்வாளர் ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய மின் இணைப்பு தர இந்திரஜித் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கடற்கரை திருவிழா| Dinamalar

புதுச்சேரி : ‘புதுச்சேரியில் வரும் 13ம் தேதி முதல், 16ம் தேதி வரை கடற்கரை திருவிழா நடைபெற உள்ளது’ என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி மாறியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர். இதனால் பல்வேறு சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் கடந்த ஆண்டு களில் ஏற்படுத்தப் பட்டது. வம்பா கீரப்பாளையம் பாண்டி … Read more