மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.: மாவட்ட ஆட்சியர்

மதுரை: மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் அனீஸ் சேகர் கூறியுள்ளார். 6 முதல் 8 எல்இடி திரைகள் மூலம் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு நேதாஜி சிலை மைசூரு சிற்ப கலைஞர் அசத்தல்| Dinamalar

மைசூரு சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் செதுக்கிய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை, பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கினார். மோடி பாராட்டி மகிழ்ந்தார்.மைசூரு சாம்ராஜ் சாலையில் வசிப்பவர் அருண் யோகிராஜ். சிற்ப கலை குடும்பத்தில் பிறந்த இவரது தாத்தா பசவண்ணா ஆச்சார், மைசூரு உடையார் சமஸ்தான சிற்பியாக விளங்கியவர்.இவரது குடும்பத்தினர், ஜெயசாமராஜேந்திரா உடையார் மன்னருடன் நெருங்கி பழகியவர்கள். அவரது காலத்தில் அரண்மனை வளாகத்தில் உள்ள காயத்ரி மற்றும் புவனேஸ்வரி கோவில்களை இந்த குடும்பத்தினர் கட்டினர்.மேலும், … Read more

தென்னிந்திய திரைத்துறை ஒன்றுகூடும் CII-யின் தக்‌ஷின் 2022 உச்சிமாநாடு!

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry – CII) நடத்தும் இரண்டு நாள் தக்‌ஷின் 2022 உச்சிமாநாடு ஏப்ரல் 9 & 10, 2022 தேதிகளில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவுள்ளது.வருங்கால சந்ததிகளுக்கு தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை சம்பந்தப்பட்ட வழிகாட்டல் நிகழ்ச்சியாக இருப்பதுடன், இத்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி இந்த மாநாட்டில் அறிந்துகொள்ள முடியும் என்று விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாநாட்டின் முக்கிய அம்சமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்படவுள்ளது. … Read more

பெண்களை தீவிரமாக பாதிக்கும் Endometriosis! இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க

 பெண்களை சமீப காலமாக தீவிரமாக பாதிக்கக் கூடிய பல நோய்களுள் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) ஒன்றாகும். எண்டோமெட்ரியோசிஸ் இடப்படும் கருப்பையை பாதிக்கக் கூடிய ஒரு குறைபாடாகும். 1 ல் 10 பெண்கள் எண்டோமெட்ரியோசிஸால் பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்பு குறித்து பொதுவாக பெண்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. அந்தவகையில் இந்தபாதிப்பு ஏன் ஏற்படுகின்றது? இதன் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை இங்கே பார்ப்போம். Endometriosis என்றால் என்ன?  மாதவிடாயின் போது கருப்பையின் உள்ளார்ந்த புறணி உடைந்து துண்டுகளாக இரத்தப்போக்கின் … Read more

சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை இன்று கூடியதும், கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் 100 விதியின்கீழ் தமிழக முதலீடு குறித்த அறிக்கை வாசித்தார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் சொத்து வரி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும் உள்ளாட்சி அமைப்புகள் … Read more

ஜவுளிக்கடை அதிபரிடம் லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி. வீடு, அலுவலகத்தில் ரூ.10 லட்சம் பணம் சிக்கியது

நாகர்கோவில்: நாகர்கோவில் புன்னை நகரைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (வயது 66). இவர் புன்னை நகர் மற்றும் நாகர்கோவில் கோர்ட் ரோடு பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவர் வெள்ளிச்சந்தை அருகே நிலம் வாங்குவதற்காக இரண்டு நபர்களிடம் ரூ.1½ கோடி பணம் கொடுத்தார். பணத்தை வாங்கிய பிறகு அவர்கள் நிலத்தை எழுதிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து சிவகுரு குற்றாலம் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக டி.எஸ்.பி. … Read more

சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு

திருச்சி: சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈபிஎஸ் உள்பட அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபான கடைகளில் சரக்கு தட்டுப்பாடு தொங்குகிறது நோ ஸ்டாக் போர்டுகள்| Dinamalar

பெங்களூரு:புதிய ‘பில்லிங்’ முறை பின்பற்றப்படுவதால், கடைகளுக்கு மதுபானம் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் கர்நாடக மதுபான கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் ‘நோ ஸ்டாக்’ போர்டு மாட்டப்பட்டுள்ளது.கர்நாடகாவில் உள்ள கே.எஸ்.பி.சி.எல்., என்ற கர்நாடக மாநில மதுபான வாரியம், அனைத்து மதுக்கடைகளுக்கும் தினமும் ஒரு முறை மதுபானம் வினியோகம் செய்கிறது.சமீப நாட்களாக கே.எஸ்.பி.சி.எல்., நிறுவனத்தில் சரக்கு வினியோகத்திற்கான பில் போடுவதற்கு, ‘வெப் இன்டென்டிங்’ என்ற புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.ஏற்கனவே இருந்த சாப்ட்வேர் மாதிரி அது இல்லாமல், ஊழியர்களுக்கு அது … Read more

500 புள்ளிகள் சரிவு.. 60000 புள்ளிகள் அளவீட்டை இழந்தது சென்செக்ஸ்..!

உலக நாடுகள் அடுத்தடுத்துப் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வரும் நிலையில், இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் துவங்குகிறது. ஆசிய சந்தையும் இன்று அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தை காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கியது இன்றைய வர்த்தகத்தில் நிதியியல், ஐடி மற்றும் கன்ஸ்யூமர் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது. Apr 6, 2022 12:10 PM 2வது நாளாக … Read more

1 வெள்ளரிப் பிஞ்சு 3 ரூபாய்; அறுவடை பணிகள் தீவிரம், உற்சாகத்தில் வெள்ளரி விவசாயிகள்!

கோடைக்காலத்தில் அதிகம் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் திருக்கடையூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளரிச்  சாகுபடி செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர், சிங்கனோடை, காழியப்பநல்லூர், பத்துகட்டு, மாணிக்கபங்கு போன்ற கிராமங்களில் வெள்ளரிச் சாகுபடிக்கேற்ற நிலங்கள் நிறைய உள்ளன. வெள்ளரித் தோட்டத்தில் விவசாயி ராதாகிருஷ்ணன் வெள்ளரி… 25 சென்ட்… ரூ.43,000 – சிறிய நிலம் பெரிய லாபம்! இந்தாண்டு பருவமழை நன்றாகப்  பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் குளம், குட்டை, வாய்க்கால்களில்  நீர் இருப்பில் உள்ளது. இவற்றிலிருந்து மின்மோட்டார் மற்றும் … Read more