3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!

இந்திய பங்கு சந்தையானது சமீபத்திய நாட்களாக மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பல முன்னணி நிறுவன பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. இந்த ஏற்றம் சிறு முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய சரியான நேரமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? கொரோனா பெருந்தொற்று முடிந்து தற்போது இயல்பு நிலையானது திரும்பிக் கொண்டுள்ளது. எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயானது பிரச்சனையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கிடையில் பணவீக்கம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் … Read more

சாம்பியன்ஸ் லீக்: அத்லெடிகோ மாட்ரிட் அரணை உடைத்த டி புருய்னா, ஃபோடன் கூட்டணி!

சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் முதல் லெக் போட்டிகளை வென்றிருக்கின்றன. பென்ஃபிகா அணியுடன் மோதிய லிவர்பூல் 3-1 என வெற்றி பெற்றது. அத்லெடிகோ மாட்ரிட்டை 1-0 என வீழ்த்தியது பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி. போர்ச்சுகலின் எஸ்டாடியோ டு லாஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் எதிர்பார்த்ததைப் போலவே லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தியது. தொடக்க நிமிடங்களில் பென்ஃபிகா வீரர்களுக்குப் பெரும் தலைவலியாக விளங்கினார் லிவர்பூல் அட்டாக்கர் சாடியோ மனே. தொடர் அட்டாக்குகளின் … Read more

அஸ்வின் வீசிய Free hit பந்தில் இமாலய சிக்சரை பறக்கவிட்ட தினேஷ் கார்த்திக்! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ப்ரீ ஹிட் பந்தை தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு விளாசிய வீடியோ வைரலாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிய நிலையில் பெங்களூர் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது தினேஷ் கார்த்திக் தான். அவர் 23 பந்துகளில் அதிரடியாக 44 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் பெங்களூர் அணியை வெற்றி பாதைக்கு … Read more

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது! உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர். 3 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், வோளண்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் முடிவடைந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, … Read more

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 14-ந்தேதி குருப்பெயர்ச்சி விழா

தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு வருடம் தோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குருபகவான் வரும் 14-ந்தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன் பெற வேண்டி லட்ச்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது. கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற … Read more

பாஜக 42வது ஆண்டு விழா: கொடியை தலைகீழாக ஏற்றிய தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ

சென்னை: பாஜக 42வது ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ கொடியை தலைகீழாக ஏற்றியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பாஜகவின் தொடக்க நாள் என்பதால் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது. டெல்லியில் காணொலி மூலம் பிரதமர் மற்றும் தேசிய பாஜக தலைவர் நட்டா பேசி வருகிறார்.

சற்றே அதிகரித்த கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.,5) 795 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் சற்று அதிகரித்து 1,086 ஆக பதிவானது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,30,925 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,198 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,97,567 … Read more

எலான் மஸ்க் வாக்குறுதி.. டிவிட்டர் நிர்வாகக் குழு நம்மதி பெருமூச்சுவிட்டனர்..!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் முன்பே, டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவான பராக் அகர்வாலிடம் நட்பு ரீதியாகப் பேசி தான் டிவிட்டர் பங்குகளை வாங்கும் திட்டம் குறித்துப் பேசி இருதரப்புக்கும் ஒப்புதல் பெற்ற பின்னரே 9.2 சதவீத பங்குகளை வாங்கினார் எலான் மஸ்க். இந்நிலையில் செவ்வாய்கிழமை எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேவேளையில் எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகத்திற்கு மிக முக்கியமான … Read more

`சொல்லவே முடியாத வேதனையை எழுதுகிறேன்'- பாப் பாடகியின் சுயசரிதை; ரூ.112 கோடிக்கு ஒப்பந்தம்?!

பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 90-களில் ஆரம்பித்து தனது குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரது ஆல்பங்கள் விற்பனைகளில் பல சாதனைகளை முறியடித்திருக்கின்றன. உயரம் செல்ல செல்ல இவரைச் சுற்றி இருந்தவர்களே ப்ரிட்னியின் மீது ஆதிக்கம் செய்ய தொடங்க அவரது அனுமதி இல்லாமலே சுய வாழ்விலும் இசை பணியிலும் தலையிட ஆரம்பித்தனர். இதனால் மனநிலை சீராக இல்லாத ப்ரிட்னிக்கு காப்பாளர் தேவை என அவர் தந்தை 2008-ல் நீதிமன்றத்தில் முறையிடவும் அவர் காப்பாளர் நிலைப்பாட்டுக்குள் வருகிறார். 13 … Read more

எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவில் டிஎஸ்பி! அதிரடி கைது…

நாகர்கோவில்: எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவல் டிஎஸ்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், பெண்கள் மீதான வன்கொடுமைகள், போதைப்பொருள் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கை களை தீவிரப்படுத்தி உள்ளதாக உள்ள காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருந்தாலும், காவல்துறையிலேயே லஞ்ச லாவணம் தலைவிரித்தாடுவது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் ஜவுளிக்கடைகள் நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடம் நிலப்பிரச்சினை காரணமாக ரூ.5 லட்சம் லஞ்சம் லஞ்சப்பணத்தை … Read more