முக கவசம் அணிவதை நிறுத்தாதீர்: ஆலோசனை கமிட்டி அறிவுறுத்தல்!| Dinamalar

பெங்களூரு : ‘கொரோனா போய்விட்டதாக கருதி, முக கவசத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். கட்டாயமாக முக கவசம் அணியுங்கள்,’ என கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி வல்லுனர்கள் அறிவுறுத்தினர்.இது தொடர்பாக கொரோனா தொழில்நுட்ப கமிட்டி தலைவர் சுதர்சன் கூறியதாவது: நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மூன்றாவது அலை குறைந்துள்ளதால், முக கவசம் அணிவதை மக்கள் விட்டுள்ளனர். முக கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதிப்பதை நிறுத்த சில மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.கர்நாடகாவில் முக கவசம் அணியும் விதிமுறையை நீக்கும்படி, வல்லுனர் கமிட்டி சிபாரிசு … Read more

ரஷ்யாவின் Sukhoi-SU 35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்! வெளியான புகைப்பட ஆதாரங்கள்

ரஷ்யாவின் பயங்கரமான போர் விமானமான சுகோய்-சு 35 உக்ரைனின் ஐஜியம் நகருக்கு அருகில் உக்ரேனிய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் வெளிவந்துள்ளன. ரஷ்யா-உக்ரைன் போர் 40-வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் உக்ரைன் ராணுவம் வலுப்பெற்றுள்ளது. ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க்கால் அணுகப்பட்ட சமீபத்திய காட்சிகள், ரஷ்யாவின் beast-attacking aircraft என்று அழைக்கப்படும் சுகோய்-சு 35 போர் விமான Izium நகருக்கு அருகில் உக்ரேனிய இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் அணுகப்பட்டன. சுட்டு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,175,764 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,175,764 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 491,562,842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 426,444,828 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 55,711 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விவாதத்தை உருவாக்கியது காங்., அமைச்சர் ஈஸ்வரப்பா பாய்ச்சல்| Dinamalar

உடுப்பி : ”காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை, கவரும் நோக்கில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பா.ஜ., மற்றும் பஜ்ரங்தள் மீது குற்றம்சாட்டுகிறார்,” என கிராம அபிவிருத்தித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.உடுப்பி கார்காலாவில், அவர் நேற்று கூறியதாவது:ஹிஜாப் எனும் முஸ்லிம் பெண்கள் தலை, முகத்தை மறைத்து அணியும் உடை தொடர்பான விவாதத்தை, தேசிய அளவில் கொண்டு சென்றது, காங்கிரஸ் தலைவர்கள்தான்.விவாதத்தை உருவாக்கியதும் இவர்கள்தான். இப்போது எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.பஜ்ரங் தள் தொண்டர் ஹர்ஷாவை கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா; மகிந்த ராஜபக்ச பிரதமராக நீடிப்பு

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக அனைத்து அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கூட்டத்தில் தங்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததாக கல்வி அமைச்சர் கூறினார். இதனிடையே, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. நிலையில், அது பெய்யான தகவல் என்றும், தற்போது அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் தொடர்ந்தும் பிரதமராக … Read more

கங்கோத்ரி கோவில் மே 3ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!

உத்தர்காசி,  கர்வால் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோவிலின் நடை அட்சய திருதியையை முன்னிட்டு மே 3 ஆம் தேதி பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று கோயில் கமிட்டி இன்று தெரிவித்துள்ளது. அட்சய திருதியை அன்று காலை 11.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்கு பக்தர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்ய முடியும் என்று கங்கோத்ரி கோயில் கமிட்டியின் செயலாளர் சுரேஷ் செம்வால் தெரிவித்தார். மேலும் யமுனோத்ரி கோவிலின் நடை திறப்பதற்கான நேரம் ஏப்ரல் 7 … Read more

வெஸ்ட்மெட் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்| Dinamalar

புதுச்சேரி : வெஸ்ட்மெட் மருத்துவமனையில், வலி நிவாரண இலவச மருத்துவ முகாம் நடந்தது.புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை புதுப்பேட்டில் வெஸ்ட்மெட் மருத்துவமனை உள்ளது. இங்கு, வலி நிவாரண இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.வலி நிவாரண சீனியர் டாக்டர் மதன்பாண்டியன் சிகிச்சை அளித்தார். காலை 9:30 மணி முதல் மதியம் 1.௦௦ மணி வரை முகாம் நடந்தது. முகாமில், கழுத்து வலி, முதுகு வலி, குதிகால் வலி, தலைவலி, தோள்பட்டை வலி, மூட்டு வலி, ஒற்றைத் தலைவலி, … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம், கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, கேரளாவில் இன்று புதிதாக  310  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 458  பேர் குணமடைந்துள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 680   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தாக்குதலுக்கு இன்று   உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

பிரபல நாட்டின் ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம்! உளவாளி கைது

கஜகஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டு உளவாளி ஒருவரை கைது செய்துள்ளதாக கஜகஸ்தானின் பாதுகாப்பு சேவைகள் தெரிவித்துள்ளன. கஜகஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் “ஒரு வெளிநாட்டு உளவாளி, கஜகஸ்தான் குடிமகன், மார்ச் 25 அன்று நூர்-சுல்தானில் உள்நாட்டு உளவு சேவைகளால் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது. சந்தேக நபர் “கஜகஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராகவும், சிறப்பு சேவைகள் மற்றும் … Read more

மின் கட்டண உயர்வு; காங்கிரஸ் குற்றச்சாட்டு| Dinamalar

புதுச்சேரி : ‘புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு பா.ஜ.,வின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது’ என காங்., எம்.எல்.ஏ., குற்றம்சாட்டியுள்ளார்.லாஸ்பேட்டை தொகுதி காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கை;புதுச்சேரி மாநிலத்தில் கடந்த காங்., ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தியபோது, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை ரோட்டில் போட்டு உடைத்து பா.ஜ., போராடியது. இன்று அதைவிட பலமடங்கு உயர்ந்துள்ள மின் கட்டணத்திற்கு எதிராக வாய் திறக்காமல் உள்ளது பா.ஜ.,வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.தற்போதைய அறிவிப்பின்படி மின்சாரம் 100 யூனிட் … Read more