பாட புத்தகத்தில் வரதட்சணைக்கு ஆதரவு சமூக வலைதளத்தில் வலுக்கும் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-‘செவிலியர் படிப்புக்கான பாடப் புத்தகத்தில், வரதட்சணையால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை நீக்க வேண்டும்’ என, சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது.

latest tamil news

செவிலியர் படிப்புக்காக டி.கே.இந்திராணி எழுதிய சமூகவியல் பாடத்தில், ‘வரதட்சணையின் நன்மைகள்’ என்ற தலைப்பில் ஆதரவு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்தப் பாடத்தில், ‘வரதட்சணை பணம் திருமணத்திற்கு பின் புதிய மரச்சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க உதவியாக இருக்கும்; வரதட்சணையால் அழகு குறைவான பெண்ணுக்கும் திருமணம் நடக்கும்’ என, அதற்கு ஆதரவாக பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

latest tamil news

இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த புத்தகத்தின் பக்கங்களை, சிவசேனா ராஜ்யசபா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘நம் பாடத் திட்டத்தில் இது போன்ற பிற்போக்கு கருத்துக்கள் இருப்பது மிகப் பெரிய அவமானம்’ என குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, ‘வரதட்சணைக்கு ஆதரவான கருத்துக்களை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.