பிர்லாசாப்ட் பங்கின் விலை 20% அதிகரிக்கலாம்.. தரகு நிறுவனம் செம கணிப்பு.. வாங்கியிருக்கீங்களா?

கொரோனாவின் தாக்கத்தின் மத்தியிலும் வழக்கம்போல ஒரு துறையானது செயல்பட்டு கொண்டிருந்தது என்றால் அதில் ஐடி துறையும் ஒன்று. ஏனெனில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நிலையில், தங்களுக்கு தேவையான பலவற்றையும் டிஜிட்டல் சேவை மூலமாகவே பெற விரும்பினர். இது ஐடி துறையில் வழக்கத்திற்கு மாறாக தேவையை ஊக்குவித்தது. சொல்லப்போனால் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்தது. தற்போது கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தாலும், கொரோனா போன்ற நெருக்கடியான காலக்கட்டங்களில் அது கைகொடுக்கும் என … Read more

Doctor Vikatan: தினமும் கடுக்காய் பொடி சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

தினமும் இரவில் கடுக்காய்ப் பொடியும் திரிபலா பொடியும் சாப்பிடுவது நல்லதா? இந்த இரண்டும் எடைக்குறைப்புக்கு உதவும் என்பது சரியா? இதை எல்லா வயதினரும் எடுத்துக்கொள்ளலாமா? எவ்வளவு, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்? – ருத்ரா (விகடன் இணையத்திலிருந்து) அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி. “இரவில் தினந்தோறும் கடுக்காய்ப் பொடி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த கடுக்காய்ப் பொடியின் தயாரிப்பு முறை ரொம்பவே முக்கியம். பிஞ்சு … Read more

உக்ரைனில் கொல்லப்பட்ட சிறுமிகள் உடல்களில்"ஸ்வஸ்திகா” முத்திரை! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

உக்ரைனில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமிகள் உடல்களில் ஸ்வஸ்திகா முத்திரையில் தீக்காயங்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளாடிமிர் புடின் உத்தரவின் பேரில் ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனுக்குள் புகுந்து போர் தாக்குதலை தொடங்கியது. இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்தப் போர் சமயத்தில் ரஷ்ய ராணுவம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் … Read more

பெரியகுளம் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4,000 டன் மூலப்பொருட்கள் சேதம்

தேனி: பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையின் தீயை அணைக்கும் பணியை தொடர்ந்து வருகின்றனர். இந்த தீ … Read more

லட்சுமி நரசிம்ம சுவாமி மஹா கும்பாபிஷேகம்| Dinamalar

தங்கவயல் : கோரமண்டல் சுவாமிநாதபுரம் மெயின் ரோட்டில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரதிஷ்டாபனை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நேற்று துவங்கியது. நாளை வரை நடக்கிறது.நேற்று மாலை ஸ்ரீ விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாசனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், அனுக்ஞை, சபா பிரார்த்தனை, கோ பூஜை, த்வஜாரோகனம், ரக் ஷா பந்தனம், வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, திருவாராதனம், சாத்துமறை, தீர்த்த பிரசாத வினியோகம் நடந்தது. இன்று காலை மங்கள வாத்தியம், வேதபாராயணம், பிரபந்த, விஷ்ணு சகஸ்ரநாம … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கடன் நிலுவை எவ்வளவு தெரியுமா..?!

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்த போது அந்நாட்டு மக்கள் அண்டை நாட்டுக்கு ஓடிக்கொண்டு இருந்த நிலையில், பல கனவுகள் உடன் உக்ரைனுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பதுங்கியிருந்தனர். இந்திய அரசு ரஷ்யா, உக்ரைன் உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இந்தியா அழைத்து வரப்பட்ட உக்ரைன் மாணவர்களின் கடன் நிலுவை பற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை … Read more

முதுமையில் மறைந்திருந்து தாக்கும் நோய்களைக் கண்டறிவது எப்படி? | முதுமை எனும் பூங்காற்று

50 வயதைக் கடந்த அனைவரும் வருடத்திற்கு ஒருமுறையாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பார்ப்பது அவசியம். முதுமை நோய்களின் மேய்ச்சல் காடு என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அந்தக் காட்டில் விளையும் நோய்கள் எனும் பயிர்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி? பொதுவாக நோய்கள் என்றாலே சில ஆரம்ப அறிகுறிகள் இருக்கும். ஆகையால் அவற்றை எளிதில் கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இது இளையப் பருவத்தினருக்கு ஓரளவிற்கு பொருந்தும். ஆனால், முதுமையில் இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் … Read more

சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் இடப்பட்டுள்ளது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மறுநாள் 15-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் … Read more

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: அனைத்து கட்சி கூட்டத்துக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா : நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்வதற்கு … Read more

2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்றத்தில் தாக்கல்

சென்னை : சென்னை மாமன்றம் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிற என துசென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2022-2023ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதமும் 9ம் தேதியே நடைபெற்று கூட்ட இறுதியில் ஒப்புதல் தரப்படுகிறது.பட்ஜெட் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.