குடிபோதையில் தாயிடம் தகராறு – அண்ணன் கழுத்தை அறுத்து கொலை செய்த தம்பிகள் கைது!

குடித்துவிட்டு தாயிடம் ரகளை: பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான கணேசன். இவர் பெயிண்டராக வேலைப்பார்த்தது வருகிறார். தீவிர குடிப்பழக்கம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பாக கணேசனின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தாய், தம்பிகள் மணி (35), குமார் (30) ஆகியோருடன் கணேசன் வசித்து வந்திருக்கிறார். கொலை கணேசன் தினமும் மது குடித்திவிட்டு வந்து தன் தாயுடன் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். … Read more

7 தமிழர்கள் விடுதலை! ஆவணங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்… முக்கிய தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இந்த முக்கிய தகவலை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது. ஆனால் ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல் … Read more

Mr. லோக்கல் விவகாரம் : சம்பளபாக்கி குறித்து மூன்றாண்டுகள் கழித்து வழக்கு தொடுத்தது ஏன் ? சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

2019 ம் ஆண்டு எம். ராஜேஷ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரித்து வெளியான படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ரூ. 11 கோடி மட்டுமே சம்பளம் வழங்கிய நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதற்கான டி.டி.எஸ். தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவில்லை என்று கூறி சிவகார்த்திகேயன் தரப்பில் ஏற்கனவே வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு வரவேண்டிய மீதம் 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி … Read more

இலங்கை வருவாயை அதிகரிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே செய்த தவறான கொள்கை முடிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமாக வாங்கப்பட்ட கடன்கள் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டன. பெரும்பாலான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். விரைவில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் என்ற நிலை நிலவுகிறது. இந்நிலையில், இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்கும் கூடுதல் வரி மசோதா பாராளுமன்றத்தில் … Read more

நெருக்கடி குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம்!: அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்பு..பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்..!!

கொழும்பு: நெருக்கடி குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யப்பட்டது. கூட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்றார். சில நிமிடங்களிலேயே வெளியேறியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். கோத்தபய பதவி விலக மாட்டார் என அரசு கொறடா மீண்டும் உறுதியளித்தது.

இந்தியாவில் மேலும் 1,033 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,033 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,033 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,31,958 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,222 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,98,789 ஆனது. தற்போது 11,639 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக … Read more

அமெரிக்க அறிவிப்புக்கு செவி சாய்க்காத தங்கம்.. சென்னை, கோவையில் தங்கம் விலை இதுதான்..!

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் உறுதியாக இருக்கும் காரணத்தாலும், சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாகவும் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1930 டாலரில் இருந்து 1915 டாலருக்கு சரிந்துள்ளது. முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான 4 சீக்ரெட்.. என்னன்னு தெரிஞ்சுக்கணுமா.. இதை படியுங்க? ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. ஏன் தெரியுமா..? தங்கம் சர்வதேச … Read more

பஞ்சாயத்தை தொடங்கிய பன்னீர்; உஷ்ணமான எடப்பாடி; வெளியேறிய வைத்தி! – அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில், நேற்று (06.04.2022) மாலை கட்சியின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் போன்ற மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வைத்திலிங்கம், சி.வி.சண்முகம் இடையே காரசார விவாதம், கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் கூட்டத்தில் என்ன நடந்தது … Read more

ஐபிஎல்! உலகில் நம்பர் 1 பவுலர் ஓவரை துவம்சம் செய்த இளம் வீரர்… ரசிகர்கள் ஆச்சரியம்

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா அசத்தலாக ஆடிய விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி புனே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை அணி தோற்றது. இருந்த போதிலும் அந்த அணியை சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. முக்கியமாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும், டி20ல் அசுரத்தனமான ஃபார்மிலும் இருக்கும் பேட் … Read more

பாண்டிச்சேரி முதல்வரால் தொடங்கப்பட்ட, ‘சூரியனும் சூரியகாந்தியும்’!

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து, டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் இயக்குனர் ஏ.எல்.ராஜா தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், ‘சூரியனும் சூரியகாந்தியும்’. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். இணைத் தயாரிப்பு, டெய்லி குருஜி. அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதை நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில், ரிதி உமையாள் நாயகியாக தோன்றுகிறார். சந்தான பாரதி, செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள் உள்ளிட்டோர் … Read more