சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான முன்பதிவு துவக்கம்| Dinamalar

சபரிமலை : சபரிமலையில் பிப்., மாத பூஜைக்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு நேற்று துவங்கியது. மாசி மாத பூஜைகளுக்காக, பிப்., 12 மாலை சபரிமலை நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 13 முதல் 17 வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கான முன்பதிவு, www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று தொடங்கியது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நேற்று மாலையே, பிப்., 13க்கான நான்கு ‘சிலாட்’ முன்பதிவு முடிந்து விட்டது.முன்பதிவு செய்த கூப்பனுடன், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் … Read more

ஹிஜாப் விவகாரம்; கர்நாடகா மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் … Read more

அதானி குழும பங்கினால் செம லாபம்.. முதல் நாளே அள்ளிக் கொடுத்த அதானி வில்மர்..!

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி, முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது. இந்த குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பங்கு வெளியீட்டினை செய்தது. இந்த நிலையில் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. சமீப காலமாக பட்டியலிப்பட்ட சில பங்குகளில் சோமேட்டோ, தவிர மற்ற பங்குகள் பிரீமிய விலையில் பட்டியலிடப்பட்டது. 3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! இந்த நிலையில் … Read more

ஆழ்துளைக் கிணற்றால் 2 பிஞ்சு குழந்தைகள் பலியான சோகம்

இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றின் சேற்றில் சிக்கி 2 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரம்பையில் சேறு நிறைந்த குழியில் விழுந்து சகோதரிகளான இரண்டு சிறுவர்கள் நேற்று (பிப்ரவரி 8) உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுவர்கள், பெரம்பை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமு என்கிற சுரேஷ் மற்றும் இனித்தா ஆகியோரின் குழந்தைகள் லெவின் (5), ரோஹித் (3) என அடையாளம் காணப்பட்டனர். ராமுவின் வீட்டிற்கு … Read more

“அ.. ஆ…” : அரசியல்வாதிகளை செமையாக கிண்டலடிக்கும் ‘பப்ளிக்’ பட டீசர்!

கே.கே.ஆர். சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில், சமுத்திரகனி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் படம், பப்ளிக். ஏற்கெனவே படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. அதில் பல தலைவர்கள் படங்கள் இருக்க, சிலர் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் அரசியல்வாதியான ‘அழகன்’ தமிழ் மணி ஒரு அழகியுடன் (கோமல் சர்மா) அமர்ந்திருக்கிறார். அவர், “நம்ம கட்சி பேர சொல்றேன்.. திருப்பிச் சொல்லு பார்க்கலாம்..” என்று சொல்லி, … Read more

உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு

லக்னோ : நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதிவரை  7 கட்டங்களாக  தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளாக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்பதில் நான்குமுனை போட்டி நிலவிகிறது.  இதில்  ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் நீயா, நானா? என்கிற … Read more

ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்பருத்திகுன்றம், கீழ்கதிர்பூர் ஆகிய ஊராட்சிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆர்த்தி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.அப்போது அவர், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்களை பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை தரமானதாகவும், சரியான அளவிலும் விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கென்யா மாஜி பிரதமர் மகளுக்கு பார்வை தந்த ஆயுர்வேத சிகிச்சை| Dinamalar

கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், மகளின் மேல் சிகிச்சைக்காகவும் குடும்பத்துடன் அவர் கேரளா வந்துள்ளார்.கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு, 2017ல் 39 வயதில், திடீரென மூளை ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை … Read more

அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இடாநகர்,  அருணாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில்  நடைபெற்றன.  இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ  வீரர்கள் … Read more

NPS திட்டம்.. வரியை மிச்சப்படுத்தி சேமிக்க சிறந்த வழி.. யாரெல்லாம் இணையலாம்..!

எந்தவொரு முதலீட்டு திட்டமாக இருந்தாலும் நன்மை தீமை உண்டு. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டம் முழுமையாக ஓய்வுகாலத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மற்ற திட்டங்களை காட்டிலும் இந்த திட்டத்தில் குறைந்த செலவினைக் கொண்டுள்ளது. இது ஒரு நெகிழ்வுதன்மையை கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வரிச்சலுகையும் உண்டு. 3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! வரிச்சலுகையுடன் இந்த திட்டத்தில் இருந்து வாங்குவதற்கும், வெளியேறுவதற்கும் குறைந்த செலவை வழங்குகிறது. இது 80சிசிடி (1 பி)ன் படி 50,000 … Read more