கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை – உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து… கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) அறிவித்துள்ளது. உண்மையிலேயே பெருந்தொற்று ஓய்ந்துவிட்டதா? கரோனா பெருந்தோற்று முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறமுடியாது. சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை மட்டுமே டபிள்யூ.எச்.ஓ. நீக்கியிருக்கிறது. இதன்படி கரோனா அபாய நிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று மட்டுமே கூறலாம். கரோனா அச்சுறுத்தல் இன்னமும் நீடிக்கிறது என்று … Read more

Karnataka Assembly election 2023 Live Updates in Tamil: கர்நாடக தேர்தல் வாக்குப் பதிவு- தீர்ப்பு வழங்க தயாரான மக்கள்!

Karnataka Assembly election 2023 Live Updates in Tamil: கர்நாடக தேர்தல் வாக்குப் பதிவு- தீர்ப்பு வழங்க தயாரான மக்கள்!

மணிப்பூர் வன்முறையில் அப்பாவி பொதுமக்கள் 60 பேர் பலி..! 1,700 வீடுகள் தீயிட்டு எரிப்பு..

மணிப்பூர் மாநிலத்தின் நிலப்பரப்பின் பெரும்பகுதியைக் கொண்ட மலை மாவட்டங்களில், பழங்குடியின மக்களான நாகாக்கள் மற்றும் குக்கிகள் வாழ்ந்து வருகின்றனர். அதே போன்று, மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 விழுக்காடு மெய்டேய் சமூகத்தினரும் உள்ளனர். இந்த நிலையில், பழங்குடியின பட்டியலில் மெய்டேய் சமூகத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு, பழங்குடியினர் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யும் வகையில், உக்ருல், கங்க்பொக்பி, சந்தேல் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி நடத்தினர். அப்போது பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் … Read more

கர்நாடக தேர்தலில் புதிய நடைமுறை அறிமுகம்..!! “செல்பி எடு.. ஓட்டுப்போடு”..!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்க இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்த சட்டப்பேரவை தேர்தலில், பெங்களூருவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்காளரின் முகத்தை அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது, பெங்களூருவில் அரண்மனை சாலையில் அமைந்துள்ள ராம்நாராயண் செல்லாராம் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் அறை எண் இரண்டடில் மட்டும் இந்த வசதி செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இந்த புதிய … Read more

மத்திய பிரதேசத்தில் பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் பேருந்து கவிழ்ந்து – 25 பேர் உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் பாலத்தில் சென்ற பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். 44 பேர் படுகாயம் அடைந்தனர். மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டம் பெஜாபுரா பகுதியில் இருந்து தனியார் பேருந்து நேற்று காலை 6.30 மணி அளவில் இந்தூருக்கு புறப்பட்டது. இதில் 69 பயணிகள் இருந்தனர். காலை8.30 மணி அளவில் கார்கோன் மாவட்டம் தசங்கா கிராமத்தில் … Read more

கொலை மிரட்டல் குறித்து போலீஸில் கார்கே புகார்

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ அண்மையில் வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இந்நிலையில் ம‌ல்லிகார்ஜூன கார்கே தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோடு மீது பெங்களூருவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே, ‘‘கர்நாடக மண்ணின் மகனான என்னை குடும்பத்தோடு கொல்லப்போவதாக பாஜக வேட்பாளர் பேசி இருக்கிறார். கர்நாடக … Read more

டெல்லி திஹார் சிறையில் கைதி அடித்துக் கொலை – வேடிக்கை பார்த்த 7 தமிழக காவலர்கள் மீது நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லி திஹார் சிறையில் கைதி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக காவலர்கள் வேடிக்கை பார்த்ததாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில நகரங்களின் முக்கிய தாதாவாக இருந்தவர் தில்லு தாஜ்புரியா (33). டெல்லியின் கலன் கிராமத்தை சேர்ந்த இவர், குஸ்தி பயில்வானாக இருந்தார். தனது 20 வயதுக்கு பிறகு வழிமாறிய இவர், டெல்லியின் முக்கிய தாதாவானார். ரோஹினி நீதிமன்றத்தில் நடைபெற்ற கொலை … Read more

ஜம்மு காஷ்மீருக்கு பிறகு, ராஜஸ்தானில் மிக அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு..!

ஜம்மு காஷ்மீருக்கு பிறகு, ராஜஸ்தானில் மிக அதிக அளவிலான லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக ஜம்மு – காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இரு மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானின் நாகௌர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் இருப்பு மூலம் நாட்டின் 80 சதவீத லித்தியம் தேவையை பூர்த்திசெய்ய முடியும் என்றும், இதன் மூலம் லித்தியத்திற்காக சீனாவை இந்தியா சார்ந்திருக்க வேண்டியதில்லை என்கின்றனர் … Read more

மத்தியப் பிரதேசம் | ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து – 15 பேர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

கர்கோன்: கார்கோன்(மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்; 25 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ளது தங்கார்கோன் ஆற்றுப் பாலம். இந்த ஆற்றுப் பாலத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று, பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து பேருந்து கீழே விழுந்ததில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் உயிரிழந்தனர். 25 பேர் … Read more

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்திப்பு..!

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள நவீன் விலாஸ் இல்லத்தில் நேரில் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க இரு தலைவர்களும் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பீகாரில் கடந்த ஆண்டு பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்ட முதலமைச்சர் நிதிஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா … Read more