விமான பணியாளர்களிடம் சண்டையிட்ட பயணி! புறப்பட்ட உடனேயே தரையிங்கிய விமானம்!

டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பரபரப்பு ஏற்படுத்திய பயணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ராஜஸ்தான் அரசியல் | காங்கிரஸின் எதிர்ப்பை மீறி சச்சின் பைலைட் உண்ணாவிரதம்

ஜெய்பூர்: ஊழக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், தனது சொந்த கட்சி அரசாங்கத்திற்கு எதிராக இன்று (ஏப்.11) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அவரது இந்த செயல் கட்சி விரோத நடவடிக்கையாக பார்க்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. ராஜஸ்தானில் 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. அதற்கு பக்கபலமாக இருந்தது சச்சின் பைலட் என்பதால் அவருக்கு முதல்வர் … Read more

"பசு கோமியம் மனிதர்களுக்கு உகந்தது அல்ல".. அய்யோ இவ்வளவு கெடுதலா.. அப்போ ஜட்ஜு சொன்னது..? போச்சா..

பரேலி: பசு கோமியம் (சிறுநீர்) மனிதர்கள் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமே (ICAR) தெரிவித்துள்ளது. உகந்தது அல்ல என்பதோடு மட்டுமல்லாமல் இதை அருந்தினால் மனிதர்களுக்கு பல மோசமான நோய்களும் ஏற்படும் எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. சுமார் 6 மாதங்களாக 70-க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரை கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. சர்வரோக நிவாரணியா..? பசுக்களின் கோமியம் எனப்படும் சிறுநீரை குடித்தால் மனிதர்களுக்கு மிகவும் நல்லது என்ற ஒருவித … Read more

கர்நாடகா தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்

BJP candidates for Karnataka Assembly Elections: கர்நாடகா தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில், பல எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், இன்று இரவுக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

71,000 பேருக்கு அரசு வேலை – ஏப்.13-ல் பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: புதிதாக அரசு பணிகளில் சேர உள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி வழங்க உள்ளார். படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அரசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 71 … Read more

தாக்கியது கேன்சர்.. மரணிக்கும் முன் மனைவிக்காக மருத்துவர் செய்த காரியம்.. இப்படியும் ஒரு மனிதரா..?

ஹைதராபாத்: தனது மரணம் நெருங்கிவிட்டது எனத் தெரிந்து கொண்ட தெலங்கனாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனது மனைவியின் எதிர்காலத்துக்காக செய்த காரியம்தான் அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. மனைவியின் தேவையை மட்டுமல்லாமல், தான் இறந்ததற்கு பிறகு யாருக்கும் எந்தவிதத்திலும் சிரமம் கொடுக்காமல் அவர் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்த விஷயங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. உயிருடன் இருக்கும் போதே மனைவிக்கும், குழந்தைக்கும் ஒன்றும் செய்யாமல் அவர்களை துன்புறுத்தும் மனிதர்களுக்கு மத்தியில், இந்த மனிதரை என்னவென்று சொல்வது..? என்ன … Read more

TMC, NCP, CPI கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணையம்

பல அரசியல் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை மாலை நீக்கியது. இதில் TMC, NCP, CPI போன்ற கட்சிகளும் அடங்கும். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை உள்ளடக்கிய சில அரசியல் கட்சிகளுக்கு  தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

பொது விடுமுறை அறிவிப்பு!!

ஏப்ரல் 14ஆம் தேதியை மத்திய அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் வேலை நாள் என பலரும் எண்ணினர். சிலர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு … Read more

தென்மேற்குப் பருவமழை 96% வரை பெய்யும்: மத்திய புவி அறிவியல் துறை தகவல்

இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும் என்றும், குறைந்த மழைப்பொழிவு குறித்து விவசாயிகள் கவலையடையத் தேவையில்லை என்றும் மத்திய புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறியுள்ளார். 2023-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும். குறைந்த மழைப்பொழிவு குறித்து விவசாயிகள் கவலையடையத் … Read more

சிபிஐ அந்தஸ்து காலி… கம்யூனிஸ்ட்கள் ஏன் வீழ்ந்தார்கள்? 75ல் கிடைச்ச சூப்பர் சான்ஸ்!

இந்தியாவிலேயே மிகவும் பழமையான கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெருமையை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இது 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமையுடன் விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒருகாலத்தில் மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தது. உலகிலேயே தேர்தல் மூலம் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெருமையை கேரள மாநிலத்தில் நம்பூதிரிபாட் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படைத்தது. கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் அப்போது மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 60 இடங்களை கைப்பற்றி கேரளாவில் ஆட்சி … Read more