இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஒய்வு..!

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால், 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான ஆண் வாக்காளர்கள் 2.62 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 2.59 கோடி பேர் என மொத்தம் 5 கோடியே 21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக … Read more

நாடு முழுவதும் அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு நடத்த மத்திய சுகாதார துறை முடிவு

சென்னை: நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் தேசிய அளவில் பொதுகலந்தாய்வு நடத்த மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் (NEET-நீட்) தகுதி பெறுபவர்களை … Read more

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல்: குண்டுவெடிப்புத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; 4 பேர் காயம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒரு அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்தனர். அம்மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தின் கண்டி பகுதியிலுள்ள காடுகளில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த மாதம் 20-ம் தேதி, 5 ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமான ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதக் குழுவினர் கண்டி … Read more

இன்று நடைபெறுகிறது இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு..!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெறும் இத்தேர்வை, 20 லட்சத்துக்கும் அதிமான மாணவ – மாணவியர் எழுதவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில், இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்ச மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் தேர்வு மையங்க ளைக் கொண்டிருக்கும் … Read more

‘தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

கொச்சி: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த திரைப்படம் நேற்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது. பாலிவுட் தயாரிப்பாளர் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், கேரள உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தினார். … Read more

சந்திரன், சூரியனுக்கான ஆய்வு -ஜூலை மாதம் அரங்கேற வாய்ப்பு – இஸ்ரோ விஞ்ஞானிகள்

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகிய திட்டங்கள் ஜூலை மாதம் அரங்கேறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவுக்கு சென்று ஆய்வு செய்ய சந்திரயான் 3 திட்டம் மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்படும் முதல் செயற்கைக்கோள் ஆதித்யாவும் குறிப்பிட்ட காலத்தில் விண்ணில் செலுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். சந்திரயான் முதல் செயற்கைக் கோள் வெற்றிகரமாக 2008ம் ஆண்டு நிலவில் உள்வட்டப் பாதையில் தரையிறங்கியது. இரண்டாவது சந்திரயான் 2019ம் ஆண்டு வெற்றிகரமாக … Read more

கோர விபத்து : 9 பேர் பலி..!

மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 30 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று … Read more

ரயிலில் பிராணிகளை கொண்டு செல்ல முன்பதிவு

புதுடெல்லி: ரயில் பயணிகள், தங்கள் செல்லப் பிராணிகளையும் அழைத்துச் செல்வதற்கான நடைமுறையை எளிதாக்க ஐஆர்சிடிசி இணையதளத்தில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ரயிலில் செல்லப் பிராணிகளை கொண்டு செல்வதற்கு, சில நிபந்தனைகளை பயணிகள் பின்பற்ற வேண்டும். 2 அல்லது 4 படுக்கை வசதிகள் கொண்ட முதல் வகுப்பு ஏசி பெட்டியில் மட்டுமே செல்லப் பிராணிகள் அனுமதிக்கப்படும். மற்ற பயணிகள் புகார் தெரிவித்தால், செல்லப் பிராணிகள், ரயில்வே சரக்கு பெட்டிக்கு அனுப்பப்படும். ரயிலின் முதல் சார்ட் தயாரான பின்புதான், … Read more

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன் முதலாக எடுத்துள்ள முக்கிய முடிவு!

ஐஆர்சிடிசி: டிஜிட்டல் இந்தியாவை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைத்துள்ள, ரயில்வே வாரியம் முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது.

போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி முற்றுகை!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை இன்று அதிகாலையில் முற்றுகையிட்டனர். அவர்களை டெல்லியில் நுழைய விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்துத் தடுத்து வருகின்றனர். இன்று மேலும் பல ஆயிரம் பேர் திரள்வார்கள் என்று கூறப்படுகிறது. பாஜக பிரமுகரும் மல்யுத்தக் கழகத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார் தொடுத்துள்ள மல்யுத்த வீராங்கனைகள் அவர் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். … Read more