“கர்நாடகாவில் பாஜக அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஊழல்” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பெங்களூரு: “கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அனைத்து துறைகளிலும் 40 சதவீத கமிஷன் வாங்கி ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடகாவுக்கு வந்தார். இன்று பிற்பகல் 12 மணிக்கு மைசூரு வந்த அவர், டி.நர்சிபுராவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் சாம்ராஜ்நகரில் நடைபெற்ற … Read more

கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் மஜதவுக்கு சந்திரசேகர் ராவ் கட்சி ஆதரவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி ஆதரவு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத), ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக களமிறங்குகின்றன. இதில் பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மஜத மூத்த தலைவரும் … Read more

கடினமான சூழலிலும் புதுமைகளை உருவாக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது – பிரதமர்

கடினமான சூழலிலும், புதுமைகளை படைக்கும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளதாக செளராஷ்டிரா – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தில் நடைபெற்ற செளராஷ்டிரா – தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி சிறைப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரும் ஒருங்கிணைந்து கலாச்சார மோதல்களை கைவிட்டு, நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார். இந்த சங்கமம் சர்தார் படேலுக்கும், சுப்பிரமணிய பாரதிக்கும் உள்ள சங்கமம் என்றும், நர்மதை – … Read more

“எங்கள் மனதின் குரலை பிரதமர் மோடி கேட்க மாட்டாரா?” – தொடர் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகள்

புதுடெல்லி: எங்கள் மனதின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்று டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வரும் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜக எம்பியாகவும் இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங்-குக்கு எதிராக … Read more

பயங்கரம்.. மாவோயிஸ்ட் நிகழ்த்திய கொடூர தாக்குதல்.. 11 போலீஸார் உடல் சிறதி பலி.. அலறும் சத்தீஸ்கர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளாக அடங்கி இருந்த நக்சல் தீவிரவாதம், மீண்டும் தலைதூக்கி இருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்று மதியம் 3 மணியளவில் வேன் ஒன்றில் 10 போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று … Read more

சில்மிஷம் செய்த Rapido பைக் டிரைவர்… ஓடும் பைக்கில் இருந்து குதித்து தப்பித்த பெண்…!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் Rapido பைக் ஓட்டுநரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளனதாக கூறப்படும் பெண் ஒருவர் ஓடும் பைக்லிருந்து குதித்தார். 

நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீசார் 10 பேர் மரணம்..

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் 10 பேர் மரணமடைந்தனர். பாஸ்டர் மாவட்டம் அரண்பூர் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த மாவட்ட ரிசர்வ் காவலர்கள் 10 பேரும், ஓட்டுநரும் அந்த இடத்திலேயே இறந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல், மாவோயிஸ்ட்களுடனான சண்டை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் தெரிவித்தார். இதனிடையே, சத்தீஸ்கர் முதலமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக நிலவரத்தை கேட்டறிந்த … Read more

பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பஞ்சாபின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரான சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக, கடந்த 16ம் தேதி மொகாலி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை … Read more

"அங்க போயும் திருந்தலையா நீங்க".. அத்துமீறிய ஜாதி பாகுபாடு.. சாட்டையை சுழற்றிய கலிபோர்னியா.. முழு பின்னணி

நியூயார்க்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலி (Silicon Valley) என்றழைக்கப்படும் கலிபோர்னியா மாகாணம் ஜாதி பாகுபாடுக்கு எதிராக மசோதா கொண்டு வந்தது. தற்போது அந்த மசோதாவுக்கு கலிபோர்னியா நீதிக் குழு ஆதரவு தெரிவித்திருப்பதால் இந்த சட்டம் விரைவில் அங்கு அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்த மசோதாவுக்கு அங்குள்ள சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதா இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்றும் அவை கூறி வருகின்றன. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலை … Read more

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்… 10 வீரர்கள் உட்பட 11 பேர் வீர மரணம்..!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் புதன்கிழமை நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 10 ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட 11 பேர் வீரமரணம் அடைந்தனர்.