போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த வங்கி ஊழியர்கள்..!

தெலுங்கானாவில் போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். மெட்சல் மாவட்டம் ஜி.டி மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் நேற்று மாலை உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு புகுந்த நபர், 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், மறுத்தால் வெடிகுண்டை வெடிக்கச் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சாமர்த்தியமாக செயல்பட்ட வங்கி ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசில் … Read more

5 வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றம்? – மாநிலத்தின் நிதிநிலை குறித்து விளக்கம் கொடுத்த கர்நாடக முதல்வர்

பெங்களூரு: தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவது குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசியுள்ளார் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா. கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், கர்நாடக துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி ஏற்றார். இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த ஐந்து வாக்குறுதிகள் இரண்டு மணிநேரத்தில் … Read more

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்… டிகே சிவக்குமார் துணை முதலமைச்சர் ஆனார்!

கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். 75 வயதாகும் இவர், அம்மாநிலத்தில் இரண்டாவது முறை முதலமைச்சர் ஆகியிருக்கிறார். முன்னதாக 2013 – 2018 காலகட்டத்தில் முதல்முறை 5 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில் 2023ஆம் ஆண்டு இரண்டாவது முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவே தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று சித்தராமையா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இவருக்கு கர்நாடகா மாநில ஆளுநர் தவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பெங்களூருவில் பதவியேற்பு … Read more

9 ஆண்டு கால மோடி ஆட்சி: மே 30 தொடங்கி ஒரு மாதம் கொண்டாட பாஜக முடிவு

புதுடெல்லி: இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று வரும் மே 30 ஆம் தேதியுடன் 9 வருடங்கள் முடிவடைகின்றன. இதில் அரசியல் ஆதாயம் தேட, ஜூன் 30 வரை ஒரு மாத காலம் கொண்டாட்டங்களை முன்னெடுக்க பாஜக முடிவு செய்துள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் பாஜக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. இதன் பலனாக 2014 இல் முதன்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி அப்பதவியை … Read more

மனைவிகளை மாற்றி உல்லாசம்.. புகார் தந்த பெண் கொடூர கொலை.. என்ன நடக்கிறது கேரளாவில்?

திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்து வந்த கும்பல் குறித்து போலீஸில் புகார் அளித்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கணவரே இந்தக் கொலையை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. கையில் கொஞ்சம் பணம் புரள ஆரம்பித்துவிட்டாலே, நாகரீகம் என்ற பெயரில் கேடுகெட்ட விஷயங்களை நோக்கி சிலர் செல்ல தொடங்கி விடுகின்றனர். ஓரினச்சேர்க்கை, லிவ் இன் உறவு முறை என ஏதோ தங்களை வெளிநாட்டுக்காரர்களாக பாவித்துக் கொண்டு சிலர் செய்யும் செயல்கள் அத்துமீறி செல்கின்றன. அதுபோன்ற ஒரு … Read more

MiG-21 விமானத்தை பயன்படுத்த தடை… விமான படை எடுத்துள்ள முக்கிய முடிவு!

இந்திய விமானப்படையில் 1960 களில் MiG-21 சேர்க்கப்பட்டதிலிருந்து தொடர் விபத்துகளின் வரலாற்றின் காரணமாக இந்த விமானம்  “பறக்கும் சவப்பெட்டி” என்ற துரதிர்ஷ்டவசமான பெயரை பெற்றுள்ளது. 

100 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவன்… மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 9 வயது சிறுவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பள்ளி விடுமுறைக்காக போஜ்புரா கிராமத்தில் உள்ள மாமா வீட்டிற்கு சென்ற அந்த சிறுவன், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். கிராம மக்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவனை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். … Read more

“சர்ச்சையில் சிக்காமல் இருப்பதன் காரணம் இதுதான்…” – ஆளுநர் இல.கணேசன் சிறப்புப் பேட்டி

பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்… தமிழகத்தில் இருந்து வட கிழக்கில் உள்ள மணிப்பூருக்கு ஆளுநராகச் சென்றீர்கள். தற்போது நாகாலாந்து ஆளுநராக இருக்கிறீர்கள். வட கிழக்கு வாழ்க்கை எப்படி இருக்கிறது? “ஆளுநராக நான் மணிப்பூருக்குச் செல்வதற்கு முன், வட கிழக்கு மாநிலங்கள் குறித்த எனது கண்ணோட்டம் வேறு. அங்கு சென்ற பிறகு அது முற்றிலுமாக மாறிவிட்டது. மணிப்பூரைப் பொறுத்தவரை, அங்குள்ள பள்ளத்தாக்கில் வாழக்கூடிய மக்களில் … Read more

ராகுல் காந்தி: அந்த முத்தான 5 வாக்குறுதிகளும் இன்றே நிறைவேற்றப்படும்.. கர்நாடகா ஹேப்பி அண்ணாச்சி.!

கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 5 வாக்குறுதிகளும் இன்றே நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 135 தொகுதிகளை வென்று அறுதி பெரும்பான்மை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர். மேலும் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த பதவி ஏற்பு விழாவில் நாடு … Read more

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா… துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரும் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர்

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி, ஃபரூக் அப்துல்லா, சரத்பவார், மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும், அமைச்சர்களாக பரமேஸ்வரா, பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 … Read more