திருப்பதியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில்,10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, திருப்பதி மலையில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், … Read more

காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக டெல்லியிலுள்ள ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சோனியா காந்தி வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார். ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ். ராணா கூறுகையில், “காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு, மூத்த மருத்துவர் அருப் பாசு மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார் இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

மருத்துவமனையில் சோனியா காந்தி! மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் காங்கிரஸ் தலைவர்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக, ஜனவரி மாதம், வைரஸ் சுவாச நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் “காய்ச்சல் காரணமாக” மார்பு மருத்துவத் துறையின் மூத்த ஆலோசகர் அருப் பாசு மற்றும் அவரது … Read more

தேர்தல் முடிவுக்கு பின் வன்முறை; மேகாலயாவில் சில இடங்களில் ஊரடங்கு: ஆட்சி அமைக்கப் போவது யார்?

ஷில்லாங்: தேர்தல் முடிவுக்கு பின்னர் மேகாலயாவில் நடந்த சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் தேசிய மக்கள் கட்சி  மொத்தமுள்ள 59 இடங்களில் 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருந்தும் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை என்பதால், புதிய அரசை அமைப்பதற்காக பாஜகவின் (2 இடங்களில் வெற்றி) ஆதரவை மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா … Read more

“இது இந்தியாவை அவமதிக்கும் காங்கிரஸ் மனநிலை…” – ராகுல் பேச்சுக்கு அனுராக் தாக்கூர் கண்டிப்பு

புதுடெல்லி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசிய பெகாசஸ் குறித்த பேச்சு “பொய் மற்றும் அவதூறு பரப்பும் காங்கிரஸின் மனநிலை” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் ‘21-ம் நூற்றாண்டில் கேட்பதற்காக கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது என்றும், பெகாஸஸ் செயலி மூலமாக தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். ராகுலின் இந்தப் பேச்சு சர்ச்சையை … Read more

ஆந்திராவின் அடுத்த CM பவன் கல்யாண்? ட்விட்டரில் ட்ரண்ட் ஆகும் ஆந்திர பிரதேஷ்!

சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தும் நடிகர்கள் : சினிமாவில் வந்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்தற்கு பிறகு மக்கள் ஆதரவும், அன்பும் சற்று அதிகமாகவே இருக்கும். அதன் பிறகு சினிமாவில் கிடைத்த இந்த அன்பையும், ஆதரவையும் அரசியலுக்கு பயன்படுத்தும் கதாநாயகர்கள் தென்னிந்தியாவை பொறுத்தவரை அதிக நபர்கள் இருக்கின்றனர். எம்.ஜி.ஆர் தொடங்கி தற்போது அரியணை ஏற காத்துவரும் விஜய் வரை இந்த டெம்ளேட் பொறுந்தும் இது தமிழ்நாடு மட்டும்மல்லாமல் ஆந்திராவிலும் என்.டி.ஆர் முதல் சிரஞ்சீவி வரை சினிமா புகழை அரசியலுக்கு கருவி … Read more

சுற்றுலா துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல நீண்ட காலத் திட்டம் தேவை -பிரதமர் மோடி

இந்தியாவில் சுற்றுலா துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல நீண்ட காலத் திட்டம் தேவைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான Developing Tourism Mission நிகழ்ச்சியில் காணொலி மூலம் இன்று உரையாற்றிய அவர், சுற்றுலா என்றதும் பேன்சி வார்த்தையாகவும், பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும்  சிலர் நினைப்பதாகவும், ஆனால் பண்டைய காலந்தொட்டே இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக சுற்றுலா உள்ளது என்றும், ஆதலால் நமது நாட்டில் சுற்றுலா துறையில் … Read more

பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் சந்திப்பு

டெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். ஒன்றிய வெளியுறவுத்துறை சார்பில் டெல்லியில் நடத்தப்படும் ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் ‘இந்தியாவில் இருப்பதில் எப்பொழுதும் மிகுந்த உற்சாகம். உலகிலேயே சிறந்த விருந்தோம்பல் கொண்ட நாடு. உலகிலேயே எனக்குப் பிடித்த நகரங்களில் ஒன்றான டெல்லியில் சில நாட்கள் கழித்தேன்’ … Read more

மேகாலயாவில் ஆட்சி அமைக்க கான்ராட் சங்மாவுக்கு ஆதரவு அளிக்கிறது பாஜக

ஷில்லாங்: மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 தொகுதிகள் உள்ளன. இதில் சோகியோங் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் லிங்டாக் கடந்த 20-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதன்காரணமாக அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதர 59 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி … Read more

ட்ரோன் மூலம் தகர்க்கப் போவதாக வாரணாசி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வாரணாசி: ட்ரோன் மூலம் வாரணாசி விமான நிலையத்தை தகர்க்கப் போவதாக வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அடுத்த பாபத்பூரில் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி சக்தி திரிபாதிக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், ‘வாரணாசி விமான நிலையத்தை ட்ரோன் மூலம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் … Read more