ராகுல் காந்திக்கு முன் உள்ள சட்ட வாய்ப்புகள் என்னென்ன?

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது நீதிமன்ற தீர்ப்பின் தாக்கம் என்பதால் அந்த தீர்ப்பை எதிர்த்து தடை பெறுவதுதான் சரியானதாக இருக்கும் என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது சூரத் நகரில் உள்ள சீஃப் ஜூடிசியல் (CJM)  மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம். ஆகவே இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் உள்ள செஷன்ன்ஸ் நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு … Read more

கலப்பு திருமணம் செய்தால் ரூ.10 லட்சம்!!

கலப்பு திருமணம் செய்து கொண்டால் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டில் கலப்பு திருணம் குறித்த நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, கலப்பு மணம் செய்பவர்களுக்கு நிதியுதவி 5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சமூக … Read more

பிஹார் உட்பட 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் – தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டன. திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. அதேபோல் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், கர்நாடகா உட்பட மற்ற மாநில தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னர் கட்சியை மேலும் பலப்படுத்த பாஜக மேலிடம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு … Read more

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுகிறது.

ராகுல் காந்தி எம்.பி. பதவியைத் திரும்பப் பெறுவது சுலபமா… கடினமா? ஓர் அலசல்

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டாலும், ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவது சுலபமல்ல எனவும், அதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் எனவும் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். முதல்கட்டமாக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, தான் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு மற்றும் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இரண்டு வருட சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் தடை பெற வேண்டும். அப்போது, எதிர்தரப்பு ராகுல் காந்தியின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதற்கும், மேலும் தீர்ப்பு அவருக்குச் … Read more

16.8 கோடி பேரின் தகவல்களை திருடி விற்க முயற்சி: ஹைதராபாத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கைது

ஹைதராபாத்: நாடு முழுவதுமுள்ள 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை திருடி விற்பதற்கு முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் நகரில் உள்ள 3 போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அடையாளம் தெரியாத சிலர் சமூகவலைதளங்கள் மூலம் திருடுவதாக நூற்றுக்கணக்கான புகார்கள் பதிவாயின. இந்த புகார்கள் குறித்து சைபராபாத் போலீஸ் ஆணையர் ஸ்டீபன் ரவீந்திரா உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு … Read more

உலகின் பல நாடுகளில் தொடர் அச்சுறுத்தல்: 30 நாளில் 10 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்.! அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தகவல்

புதுடெல்லி: உலகம் முழுவதும் கடந்த 30 நாட்களில் 10 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். அன்றைய தினம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. இரு நாடுகளிலும் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில் அமெரிக்க நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட … Read more

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் – அடுத்தது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியை இழந்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதி என்னென்ன காரணங்களுக்காக பதவி இழப்பை சந்திப்பார்கள் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்னாள் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் அந்தந்த தொகுதிகளுக்கான இடங்கள் என்பது … Read more

“அவர்கள் இப்போதும் அப்படித்தானே சொல்வர்கள்…” – கார்கேவிடம் ராகுல் காந்தி வேதனை

புதுடெல்லி: “இப்போதும் நான் உங்கள் முதுகில் எனது அழுக்கைத் துடைத்ததாகத்தானே சொல்வார்கள்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது சூரத் நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவர், நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் நடந்த … Read more

எடியூரப்பா ஷாக்; விஜயேந்திரா பக்கம் திரும்பிய அமித் ஷா… கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. வரும் ஏப்ரல் – மே மாதத்தில் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. எனவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில் வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக லிங்காயத் வாக்குகளை பெறுவதற்கு எடியூரப்பா இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைப்பாடு இருக்கிறது. மீண்டும் எடியூரப்பா எனவே அவரை ஓரங்கட்ட விரும்பாத டெல்லி, தேர்தல் … Read more