வழக்குகள் தேங்குவதற்கு நீதித் துறை அமைப்பின் குறைபாடே காரணம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

உதய்ப்பூர்: நீதிமன்றங்களில் வழக்குகள் மிகப் பெரிய எண்ணிக்கையில் தேங்குவதற்கு நீதித் துறை அமைப்பில் உள்ள குறைபாடே காரணம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள சுகாதியா பல்கலைக்கழகத்தில் இந்திய சட்ட ஆணையம் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”இந்திய நீதிமன்றங்களில் 4.90 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த அளவுக்கு வழக்குகள் தேங்குவது எந்த … Read more

இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட போய் சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய நபர்: பீதியில் இரவெல்லாம் தவிப்பு

புலந்த்ஷாஹர்: இரையாக வைக்கப்பட்ட கோழியை திருட சென்றவர், சிறுத்தையின் கூண்டுக்குள் சிக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் பசேந்துவா கிராமத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததால், குறிப்பிட்ட இடத்தில் வனத்துறையினரின் கூண்டு வைத்திருந்தனர். அந்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்க வேண்டும் என்பதற்காக கோழி ஒன்றை கட்டி போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சிறுத்தையின் கூண்டுக்குள் இருந்த கோழியை பிடித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசையில், சிறுத்தையின் கூண்டுக்குள் சென்று கோழியை பிடித்தார். … Read more

பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய டீசல்

திருமலை: மகாராஷ்டிர மாநிலம் குல்பர்காவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று ஆந்திராவுக்கு புறப்பட்டது. தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகூடம் மாவட்டம் தம்மபேட்டா மண்டலம் முஷ்டிபண்டா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தது. அப்போது எதிரே வேகமாக லாரி வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க டேங்கர் லாரியை டிரைவர் திருப்பினார். இதனால் நிலை தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயம் அடைந்தார். விபத்துக்குள்ளான லாரியில் இருந்த டீசல் … Read more

“நிதிஷ் குமாருக்கு பாஜகவின் கதவுகள் இனி எப்போதும் திறக்காது” – அமித் ஷா

பாட்னா: “பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இணைய இனி வாய்ப்பே இல்லை” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரின் லவுரியா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார். இனி பாஜகவின் கதவுகள் அவருக்காக ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது. ஐக்கிய ஜனதா தளம் … Read more

அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு; காங்கிரஸ் மாநாட்டில் அறிவிப்பு.!

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி, தேர்தலில் மேற்கொள்ளப்பட் வேண்டிய உத்திகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் நாடு முழுவதும் உள்ள கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட சுமார் 15 … Read more

உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் உதவ தயார்-பிரதமர் மோடி

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்-க்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய அடிப்படையிலான சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 2 நாடுகளுக்கும் இடையே காற்றாலை, சூரிய ஒளி … Read more

டெல்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தக கண்காட்சி தொடக்கம்

டெல்லி: டெல்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தக கண்காட்சி தொடங்கியது. மார்ச் 5-ம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு கண்காட்சியில் நுழைவு கட்டம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயார்: பிரதமர் மோடி

புதுடெல்லி: “உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயார்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அவரது உரையில் உக்ரைன் போரே முக்கிய இடம் பெற்றிருந்தது. ரஷ்யா – உக்ரைன் மோதல் காரணமாக உலகம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா … Read more

கர்நாடக தேர்தல் 2023: பாஜக கையில் ’யோகி மாடல்’… டெல்லியின் மாஸ்டர் பிளான்!

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை பலவும் வியூகம் வகுத்து வருகின்றன. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக நடப்பாண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் பெறும் வெற்றி 2024 மக்களவை தேர்தலுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடக்கவுள்ள கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் தென்னிந்தியாவில் பாஜக … Read more

கல்லூரி வளாகத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பெண் முதல்வர்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இந்தூரில் இயங்கி வரும் பி.எம். (BM) மருந்தியல் கல்லூரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்த அந்த மாணவனுக்கு கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்தவன், கல்லூரியின் பெண் முதல்வரை கல்லூரி வளாகத்தில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான். 5 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி … Read more