ஜந்தர்மந்தரில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா உண்ணாவிரதம்..!

மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தக்கோரி, டெல்லியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதையேற்று நாளை ஆஜராக இருப்பதாக கவிதா அறிவித்துள்ளார். இந்நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். … Read more

கடப்பா கோதண்டராம சுவாமி கோயிலில் வருகிற 30ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடக்கம்-தலைமை செயல் அதிகாரி தகவல்

திருமலை :  கடப்பா கோதண்டராம சுவாமி கோயிலில் வருகிற 30ம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கப்பட்ட உள்ளதாக தலைமை செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார்.  ஆந்திர மாநிலம், ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில் வருடாந்திர பிரமோற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.  கலெக்டர் விஜயராமராஜூ தலைமை தாங்கினார். எஸ்பி அன்புராஜன்  முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா பங்கேற்று பேசியதாவது: கடந்தாண்டு … Read more

விமானத்தில் புகைப்பிடித்த இளம்பெண் பெங்களூருவில் கைது

பெங்களூரு: கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் புகைப்பிடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 6-ம் தேதி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. அந்த விமானம் தரையிறங்க 30 நிமிடங்கள் இருந்த நிலையில், விமானத்தின் கழிவறையில் இருந்து சிகரெட் புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் கதவை தட்டியபோது, உள்ளே இருந்த பிரியங்கா சக்ரவர்த்தி (24) கதவை திறந்தார். அப்போது குப்பைத் தொட்டியில் எரிந்த நிலையில் … Read more

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு வெகுவாக அதிகரிப்பு – பிரதமர் மோடி

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு தற்போது வெகுவாக அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய காணொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு துறைகளிலும் பெண்களின் ஆட்சி அதிகாரத் திறனும், முடிவெடுக்கும் திறனும் வெளிப்படுவதாகவும், இந்தியாவின் வளர்ச்சியை துரிதபடுத்துவதில் பெண் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளாக பெண் தலைமையிலான வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய … Read more

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தை மார்ச் 13க்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் செல்வம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தை சபாநாயகர் செல்வம் திங்கள்கிழமைக்கு (மார்ச் 13) ஒத்திவைத்தார். நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி மார்ச் 13ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நடுநிலையோடு இருக்க வேண்டும்: காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவரான ஜக்தீப் தன்கர், நடுநிலையோடு இருக்க வேண்டும் என்றும், அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து உற்சாகமளிப்பவராக இருக்க கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் லண்டன் பேச்சினை விமர்சித்திருந்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கான பதிலடியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்துகிறார்” … Read more

CISF Raising Day: CISF உதய தினம் கொண்டாட்டம்… வரலாறும், முக்கியத்துவமும்

CISF Raising Day: CISF என்றழைக்கப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பிரிவின் உதய தினம், இந்தாண்டு ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான புது டெல்லிக்கு வெளியே CISF உதய தினம் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.  இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். CISF உதய தினம் 2023 விழா நடைபெறும் தேதி, கரு, அதன் வரலாறு மற்றும் … Read more

கர்நாடகா, ஹரியானா மாநிலங்களில் H3N2 இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழப்பு!

சண்டிகர்: இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். முதல் மரணம் கர்நாடக மாநிலத்தில் பதிவு, 2வது மரணம் அரியானா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிதாக H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவிவருவதாக கூறப்படுகிறது. இதுவரை 90 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் துணை வகையான H1N1 வைரஸால் 8 பேர் … Read more

பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம் கார்டு விற்பனை…அசாமில் 5 பேர் கைது…!

அசாமில் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கி பாகிஸ்தான் உளவாளிகளுக்கு விற்பதாக ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அசாம் மாநில போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, நாகோன் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாம், உத்தின், ரஹ்மான், ஜமான் மற்றும் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பாருல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மீதமுள்ள 5 பேர் தலைமறைவாகி உள்ளனர். Source link

பெங்களூருவில் வடகிழக்கு மாநில ஓட்டுநர் மீது தாக்குதல்

பெங்களூரு: பெங்களூரு, இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ராபிடோ வாடகை பைக் ஓட்டுநர் ஒருவர் தனது வாடிக்கையாளரை பிக்-அப் செய்யச் சென்றார். அப்போது அவரை வழிமறித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரை சரமாரியாக தாக்கினார். மேலும், “வேறு மாநிலத்தை சேர்ந்த இவர், எப்படி இங்கு வாடகை பைக் ஓட்டலாம்?” என எச்சரித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Source link