தமிழ்நாட்டில் பாஜ ஆதரவின்றி அதிமுக செயல்பட முடியாது: சி.டி.ரவி பேட்டி

சிக்கமகளூரு: பாஜ தேசிய பொது செயலாளரும், எம்எல்ஏவுமான சி.டி.ரவி, தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது. தற்போது தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியுள்ளார். அண்ணாமலை சொல்வது சரி. அப்படி சொன்னால் தான் அதிமுகவினர், தாங்களாக எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு முன் வருவார்கள்.  1990ம் ஆண்டு எங்கள் கட்சி இருந்ததுபோல், தற்போதும் இருந்து வருகிறது. ஆனால் பாஜவின் ஆதரவின்றி அதிமுக செயல்பட … Read more

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை | முழு விவரம்

சூரத்: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் … Read more

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது

சுக்மா: சத்தீஸ்கர் மாநில கொத்தலேந்திரா பகுதியில் நக்சலைட்டுகள் தங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கொத்தலேந்திரா அருகேவுள்ள வனப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 5  நக்சல்களை, பாதுகாப்பு படையினர்  துப்பாக்கி முனையில்   5 நக்சல்களை கைது செய்தனர்.

போதையில் விமானத்தில் தகராறு செய்த 2 பேர் கைது

மும்பை: துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில்  குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். துபாயில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று நேற்று முன்தினம்  வந்தது. அதில், 2 பேர், விமானத்தில் மதுபானம் குடித்தனர். இதை பார்த்த விமான பணிபெண்கள், விமானத்தின் உள்ளே மதுபானம் குடிக்க தடை செய்யப்பட்ட விவரங்களை எடுத்து கூறினர்.  ஆனால், குடிபோதையில் இருவரும் ஆத்திரத்தில், இருக்கைகளில் இருந்து எழுந்து உள்ளனர். இதன்பின்னர், விமானத்தில் குடித்தபடியே நடந்து சென்றுள்ளனர். … Read more

இந்தியாவில் 140 நாட்களுக்கு பிறகு 1300 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் 140 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 1,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 1,300 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 140 நாட்களுக்கு பிறகு அதிக பாதிப்பாகும்.  தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,605ஆக உள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 … Read more

பாகிஸ்தான் வாட்ஸ்அப் குழு நாக்பூரில் என்ஐஏ சோதனை

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ‘காஜ்வா-இ-ஹிந்த்’ குழு தொடர்பாக 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.  இந்தியாவை வன்முறை வழிகள் மூலம் இஸ்லாமிய நாடாக மாற்ற, இந்திய இளைஞர்களை தீவிரவாத பாதைக்கு இட்டு செல்ல பாகிஸ்தானியரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழு ‘காஜ்வா-இ-ஹிந்த்’ என்று கூறப்படுகிறது.  இந்த குழுவுடன் தொடர்புடையவர்கள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தங்கியுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு(என்ஐஏ) தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று மத்திய நாக்பூர், வதோடா பகுதிகளில் உள்ள சதரஞ்சிபுரா, கவலிபுரா … Read more

ஜார்க்கண்ட்டில் சோகம் போலீஸ் மிதித்து குழந்தை பலி: 6 பேர் சஸ்பெண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்டின் கிரிதிக் மாவட்டத்தின் கோஷோடிங்கி கிராமத்தை சேர்ந்த பூஷண் பாண்டே மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை 3.20 மணிக்கு அவர் வீட்டிற்கு சோதனையிட சென்ற போலீசார், கதவை உடைத்து கொண்டு அதிரடியாக உள்ளே சென்றனர். இதில், தூங்கி கொண்டிருந்த பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டு உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் … Read more

'ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது..' – புற்றுநோயால் அவதிப்படும் நவ்ஜோத் சித்துவின் மனைவி

பஞ்சாப்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் இருக்கும் தனது கணவர் குறித்து உருக்கமான குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக, “நவ்ஜோத் சிங் சித்து செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் உங்களுக்காகக் காத்திருப்பது உங்களை விட அதிகமாகத் துன்பப்பட வைக்கிறது. வழக்கம் போல் உங்கள் வலியைப் போக்கும் முயற்சியாக இதைப் பகிர்ந்துகொள்கிறேன். இது மோசமானது … Read more

நாடாளுமன்ற துளிகள்….

* 2.78லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு ஒன்றிய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதில்: நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களில் பதிவு அதிகரித்துள்ளது. 2021ம்ஆண்டு 3,29,808 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. 2022ம் ஆண்டில் இது 10,20,679 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 2.78லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. * சிபிஐ அனுமதியை திரும்ப பெற்ற 9 மாநிலங்கள் மாநிலங்களவையில் ஒன்றிய … Read more

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் பேச்சு, அதானி விவகாரத்தால் மக்களவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது