இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3177 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,776 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,55,119ஆக பதிவாகியுள்ளது.நாடு முழுவதும் இதுவரை 220,64,34,000 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,349 டோஸ் … Read more

தமிழ்நாட்டில் 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி: மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை

புதுடெல்லி: ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், கடலூர், கன்னியாகுமரி பகுதிகளில் மதிக்கும் கப்பல் இறங்கு தளங்கள் அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டின் சமூகப் பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை மேற்கொண்டுள்ளது. பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு … Read more

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக திகார் சிறையிலேயே மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி அரசுக்கு பாஜக அமைச்சர்களால் அவப்பெயர்; ஆணவத்தின் உச்சத்தில் அண்ணாமலை இருக்கிறார்: அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் சாடல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு பாஜக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைவதால் அதிமுக – பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை ‘அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம், அந்த சமுத்திரம் மீது கல்லெறிய கூடாது. அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் தானாக வந்து பிற கட்சியினர் சேர்கின்றனர். யாரையும் நாங்கள் … Read more

மத்திய ஊழியர்கள் மீது பண மழை! இந்த சலுகையை மோடி அரசு வழங்கும்

7வது சம்பள கமிஷன் சமீபத்திய செய்திகள்: இந்த முறை மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) அரசால் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஹோலி பண்டிகையையொட்டி, மத்திய பணியாளர்கள் அனைவருக்கும் மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பண்டிகை முன்பணம் (Special Festival Advance Scheme) வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மத்திய ஊழியருக்கும் அரசிடமிருந்து 10,000 ரூபாய் கிடைக்கும். அதாவது, பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள் சார்பில் ரூ.10,000 முன்பணமாக … Read more

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர்.. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடக்கம்..!

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்  துணைநிலை ஆளுநர் உரையுடன் புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடக்கம் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடக்கம் வரும் 13-ஆம் தேதி 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சட்டமன்றத்திற்கு வந்த துணைநிலை ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை Source link

சர்வதேச பெண்கள் தினம் பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: ‘’பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து உழைக்கும்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “ சர்வதேச பெண்கள் தினத்தில், சாதனை படைத்த பெண்களுக்கு மரியாதை. நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு தொடர்ந்து உழைக்கும் என்று `புதிய இந்தியாவுக்கான பெண்களின் அதிகாரம்’ என்ற ஹேஷ்டேக்கில் கூறியுள்ளார்.  மேலும், ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் இடம் பெற்ற சாதனை … Read more

ஆபாச வீடியோ தொல்லை கொடுத்த வாலிபர் ஒரு வருடம் பிறகு சிக்கினார்..!!

மும்பையில் அந்தேரி பகுதியில் பேஷன் டிசைனராக இருந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுந்தகவல் வந்திருக்கிறது. இதில் அதிர்ந்து போன அந்த பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார் . இந்த பெண் அளித்த புகாரில் போலீசார் அந்த செல்போன் நம்பரை பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தியதில் , பேஷன் டிசைன் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் – தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா கைதாகிறார்?

ஹைதராபாத்: டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ரூ. 100 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் அமித் … Read more

லீனா மணிமேகலை சொன்னதுல்லாம் ரீலாம்..! சென்னை போலீஸ் அறிக்கை

இயக்குனர் சுசிகணேசனால் உயிருக்கு ஆபத்து என்று முகநூல் மற்றும் டுவிட்டரில் பதிவிட்டு எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிவிட்டது தெரியவந்துள்ளதாக போலீசார் விசாரணை அறிக்கை அளித்துள்ளனர். லீனா மணிமேகலை …..மீ டூ புகழ் எழுத்தாளரான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ந்தேதி கனடா செல்ல விமான நிலையம் சென்றிருந்த நிலையில், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக கூறி கனடா செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. … Read more