ராணுவத்தில் சேர அரிய வாய்ப்பு.. அக்னி வீரர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான ஆட் சேர்ப்பு அறிவிப்பு கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டின் கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்னி வீரர் பொதுப்பணி, தொழில்நுட்பம், க்ளார்க், ஸ்டோர் கீப்பர், ட்ரேட்ஸ்மேன் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுக்கு திருமணம் ஆகாத, 8ம் வகுப்பு மற்றும் 10ம் … Read more

ஜேஎன்யு மாணவர்களுக்கு திமுக எம்பிக்கள் ஆறுதல் – மாணவர் பேரவை அலுவலகத்தில் மீண்டும் பெரியார் படம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தாக்கப்பட்ட மாணவர்களை திமுக எம்.பி.க்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். ஜேஎன்யு மாணவர் பேரவை அலுவலகத்தில் மீண்டும் பெரியார் படம் மாட்டப்பட்டது. டெல்லி ஜேஎன்யுவில் இரண்டு தினங்களுக்கு முன் தமிழர்கள் உள்ளிட்ட 15 மாணவர்கள் மீதுதாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் மாணவர் அமைப்பான அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) நடத்தியதாக புகார் எழுந்தது.‘100 ப்ளவர்ஸ்’ எனும்மாணவர் அமைப்பின் சார்பில்திரையிடப்பட்ட படக்காட்டியின் போது இவர்கள் தாக்குதலை … Read more

ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு; தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!!

டெல்லி: சிவசேனாவின் கட்சி, சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார். சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 40 எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. தனி அணியாக செயல்பட்ட ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் … Read more

தடைகளை தாண்டி ஆம் ஆத்மி வெற்றி! 39 வயதில் டெல்லி மேயரான ஷெல்லி ஓப்ராய் – யார் இவர்?

டெல்லி மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து டிசம்பர் 7-ம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கபட்டன. 250 வார்டுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 104 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடைபெற இருந்தது. … Read more

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உச்ச நீதிமன்ற விசாரணை எழுத்து வடிவில் ஒளிபரப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற விசாரணைகளை எழுத்து வடிவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, மொழிநடைமுறை தொழில்நுட்பம் மூலம் உச்சநீதிமன்ற விசாரணைகளை நேற்று முதல் நேரடியாக எழுத்து வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் தொடங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், விசாரணைகள் எழுத்து வடிவில் நேற்று ஒளிபரப்பப்பட்டன. இதை உச்சநீதிமன்ற இணையளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு முன் வழக்கறிஞர்களிடம் ஆய்வுக்காக அளிக்கப்படும். இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது: … Read more

டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய்; 34 ஓட்டுகளில்… ஆம் ஆத்மிக்கு கிடைத்த பெரிய வெற்றி!

டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேட்சைகள் 3 இடங்களில் வென்றனர். இதன்மூலம் டெல்லி மாநகராட்சியை முதல்முறை ஆம் ஆத்மி கைப்பற்றியது. 15 ஆண்டுகளாக தொடர்ந்து மாநகராட்சியை தன்வசம் வைத்திருந்த பாஜக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. டெல்லி மேயர் தேர்தல் மேயர் நாற்காலி ஆம் ஆத்மிக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவும் போட்டிக்கு வேட்பாளரை நிறுத்தியது. அதுமட்டுமின்றி … Read more

அதிர்ந்த கட்டிடங்கள்..!: இலங்கை, நேபாளத்தில் லேசான நில அதிர்வு.. மக்கள் பீதி..!!

டெல்லி: சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் பேர் உடமைகளையும் வீடுகளையும் இழந்துள்ளனர். அங்கு 20 நாட்களுக்கும் மேலாக மீட்புக்கணி நீடித்தது. இந்நிலையில், துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று காலை முதலே இந்தியாவில் பல பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. அதன்படி உத்தரகாண்ட், டெல்லி, நேபாளம் உள்பட பல இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். … Read more

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி

புதுடெல்லி: நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று (பிப்.22) டெல்லி மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்றார். பாஜகவின் வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் டெல்லி மாநகராட்சியின் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். ஷெல்லி ஓபராய்க்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, “குண்டர்கள் தோற்றனர், … Read more

நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் நிலநடுக்கம்

காத்மாண்டு: நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

“100 மோடிகள், அமித் ஷாக்கள் வந்தாலும் வரட்டும்…” – கார்கே பரபரப்பு பேச்சு

புதுடெல்லி: “வரும் 2024-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். இல்லாவிட்டால், நாட்டில் ஜனநாயகமும் அரசியல் சாசனமும் போய்விடும்” என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டை என்னால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்; எவர் ஒருவரும் என்னைத் தொட முடியாது என்றெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி … Read more