சூரத்தில் பயன்பாட்டில் இல்லாத 85 மீ உயரமான குளிரூட்டும் கோபுரம் 7 நொடிக்குள் தகர்ப்பு..!
குஜராத்தின் சூரத்தில் மின் உற்பத்தி நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத 85 மீட்டர் உயரம் கொண்ட குளிரூட்டும் கோபுரம் 220 கிலோ வெடிமருந்து வைத்து பாதுகாப்புடன் தகர்க்கப்பட்டது. புதிய கோபுரம் அமைக்கப்பட்டதால், சுமார் 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த கோபுரத்தை இடிக்க முடிவெடுத்த மின்சார வாரியம், வெடிமருந்துகளை கோபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தி வெடிக்க வைத்தனர். 72 மீட்டர் விட்டமும், 85 மீட்டர் உயரமும் கொண்ட சிமென்ட் கான்கிரீட் கோபுரம் சுமார் 7 நொடிக்குள் பயங்கரமான சத்தத்துடன் தகர்ந்தது. … Read more