அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழக்கும் இளைஞர்கள் : ஆந்திராவில் கபடி விளையாடிய போது மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு!!

ஆந்திரா : ஆந்திராவில் கபடி விளையாடி கொண்டு இருந்த கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் அச்சம்பள்ளிதாண்டாவைச் சேர்ந்தவர் 18 வயதான தனுஜ் குமார் நாயக். அனந்தபூரில் உள்ள பிவிகேகே கல்லூரியில் இளங்கலை பார்மசி படித்து வந்த அவர், கடந்த 1ம் தேதி கல்லூரி மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டு இருந்த போது, திடீரென மயங்கி சரிந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள … Read more

மும்பையில் ஹெல்மெட் அணியாத 10,000 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தது போக்குவரத்து போலீஸ்

மும்பை: மும்பையில் ஹெல்மெட் அணியாத 10,000 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸ் அபராதம் விதித்தது. மதுபோதையில் வாகனம் ஓட்டிய 146 பேர் பிடிபட்டதாக மும்பை போக்குவரத்து போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் போக்குவரத்து விதிகளும் மீறப்பட்டு விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது. இதனைதொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தியது. அதன்படி வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதிமீறல்களுக்காக … Read more

பயிற்சி போர் விமானம், கப்பல்கள் வாங்க எச்ஏஎல், எல்andடி நிறுவனங்களுடன் ரூ.9,900 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்

புதுடெல்லி: பாதுகாப்புத் துறைக்கு தேவையான 70 எச்டிடி-40 ரக பயிற்சி போர் விமானங்களை மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து (எச்ஏஎல்) வாங்க மத்திய அமைச்சரவை கடந்த 1-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதன் மதிப்பு ரூ.6,838 கோடி ஆகும். பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சுயசார்பை அடைய வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சிக்கு ஊக்கமளிப்பதாக இது அமைந்துள்ளது. இதுபோல எல்&டி நிறுவனத்திட மிருந்து ரூ.3,100 கோடிக்கு 3 பயிற்சி கப்பல்களை வாங்குவதற்கும் மத்திய அமைச்சரவை … Read more

மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் பொழியட்டும்: பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து

டெல்லி: ஹோலி பண்டிகை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வட மாநிலத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இந்த பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் வண்ணங்கள் எப்போதும் உங்கள் … Read more

ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு – கர்நாடக பாஜக எம்எல்ஏவுக்கு ஜாமீன்

பெங்களூரு: க‌ர்நாடக பாஜக எம்எல்ஏ மாத‌ல் விருபாக் ஷப்பா மைசூர் சாண்டல்சோப் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அந்த நிறுவனத்துக்கு வேதிப்பொருட்கள் விநியோகம் செய்ய ஒப்பந்ததாரரிடம் விருபாக் ஷப்பாவின் மகன் பிரஷாந்த் முதல்கட்டமாக‌ ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் சிக்கினார். அவரது வீட்டில் ரூ.7.72 கோடி ரொக்கப்பணம் சிக்கிய‌து. இந்த வழக்கில் மாதல் விருபாக் ஷப்பா ஜாமீன் வழங்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதைநேற்று விசாரித்த நீதிபதி நடராஜன், மாத‌ல் … Read more

வேகமாக பரவும் H3N2 வைரஸ் தொற்று: அறிகுறிகள் மற்றும் தடுப்பு என்ன?

H3N2 Versus: H3N2 இன்ஃப்ளூயன்ஸா என்பது ஒரு வைரஸ் நோயாகும், இது நபருக்கு நபர் எளிதில் பரவுகிறது. H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் தொற்றுகள் அதிகரித்த வேகத்தைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்குகிறது. கடந்த இரண்டு மாதங்களாக, தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் ராக்கெட் வேகத்தில் இந்த காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, H3N2 தொற்றுகள் அதிகரித்து வருவதைப் பற்றி மக்கள் பயப்படுகிறார்கள், ஏனெனில் … Read more

ஆப்கானிஸ்தானுக்கு 20,000 மெட்ரிக் டன் கோதுமை: உதவிகரம் நீட்டும் இந்தியா

ஈரான் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்ப உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா – மத்திய ஆசிய கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐ.நா பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஐ.நா உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஆப்கானிஸ்தானுக்கு புதிய தவணையாக 20,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. Source link

டெல்லி மதுபான கொள்கை ஊழல்; தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா ஆஜராக அமலாக்க துறை சம்மன்

டெல்லி  : டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (9-ந்தேதி) நேரில் ஆஜராகும்படி அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்க துறை தாக்கல் செய்த காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!!

டெல்லி துணை முதல்வர் கைது நடவடிக்கை நெருக்கடி நிலை காலத்தை நினைவூட்டுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுபான கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 5 தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி … Read more

திஹார் சிறையில் மணிஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத் துறையினர் நீதிமன்ற அனுமதி பெற்றனர். இதையடுத்து சிறை எண் 1-ல் உள்ள சிசோடியாவிடம் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். டெல்லி … Read more