தெலங்கானா: தெரு நாய்கள் கடித்து குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு -பதறவைக்கும் வீடியோ!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தெருநாய்கள் சூழ்ந்துக்கொண்டு கடித்துக் குதறியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தை சேர்ந்த கங்காதர், வேலை நிமித்தமாக ஹைதராபாத் நகரில் பாக் ஆம்பர்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆம்பர்பேட்டையில் உள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வரும் கங்காதர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பணிக்கு சென்றுள்ளார். அதில் அவரது 5 வயது மகன் பிரதீப் அங்கிருந்த ஆட்டோமொபைல்ஸ் கடை … Read more

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு மேல் முறையீடு..!!

தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. தமிழ்நாட்டில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்து, இதர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் … Read more

இணையவழி பண பரிவர்த்தனையான இந்தியாவின் UPI, சிங்கப்பூரின் PayNow இணைப்பு..!

இணையவழி பண பரிவர்த்தனையான இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இணைப்பு நிகழ்ச்சி பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் முன்னிலையில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல் பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, UPI மூலம் அதிகளவில் பணம் செலுத்தப்படுவதால், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் விரைவில் … Read more

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர் இறந்ததால் சோஹியோங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு..!

ஷில்லாங்: மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர் இறந்ததால் சோஹியோங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும் நிலையில், 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரசியல் கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், மேகாலயா மாநிலம் கிழக்கு … Read more

சர்ச்சை பேச்சு! “ஒரு இந்து பெண்ணுக்கு 10 இஸ்லாமிய பெண்கள்”!!

கர்நாடகாவில் லவ் ஜிகாத் தொடர்பாக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக, அதுவும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பேச்சு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் பாஜக எம்.பி., பிரக்யா சிங் தாக்குர், இந்துக்கள் வீடுகளில் ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என பேசியிருந்தார். அவரது பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது லவ் ஜிகாத் தொடர்பாக … Read more

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? – எல்டிடிஇ பதில்!!

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்த நிலையில், அதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் அளித்துள்ள பேட்டியில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் அண்மையில் தடைவிதித்தன. அந்த தடையை நீட்டிப்பதற்கான முன்முயற்சிதான் இந்த பேச்சு என அவர் கூறியுள்ளார். இப்போது பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் பேசுவது, பொதுமக்களை குழப்பும், … Read more

சிவ சேனாவுக்கு உரிமை கோரும் உத்தவ் தாக்கரே – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் … Read more

மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: வேட்பாளர் இறந்ததால் சோகியாங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

மேகாலயா சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர் இறந்ததால் சோகியாங் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. சோகியாங் தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லிங்டோ தேர்தல் பிரச்சாரத்தின் போது உயிரிழந்ததால், மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்..!! கணவரையும், மாமியாரையும் வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த பெண்!!

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நரேங்கி பகுதியைச் சேர்ந்தவர் அமர்ஜோதி டே. இவரது தாயார் சங்கரி டே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தனா கலீடா என்பவருடன் அமர்ஜோதிக்கு திருமணம் நடந்தது. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன் தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி ஆகியோரை காணவில்லை என நூன்மதி காவல் நிலையத்தில் வந்தனா புகார் அளித்துள்ளார். … Read more

மறந்துடாதீங்க… திருப்பதி கோவிலில் இனி கட்டாயம்!!

முறைகேடுகளை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி எனப்படும் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்களில் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்குகின்றனர். அதே போல் தேவஸ்தான ஊழியர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு உதவி செய்கின்றனர். எவ்வளவோ முயற்சித்தும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் இதை தடுக்க முடியவில்லை. எனவே இதனை அதிநவீன தொழில் நுட்ப ரீதியில் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. … Read more