7th Pay Commission: அடி தூள்… டிஏ ஹைக்கை தொடர்ந்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், கணக்கீடு இதொ!!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி நேற்று வந்தது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை நேற்று மத்திய அமைச்சரவை வெளியிட்டது. அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) அதிகரிப்பு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.  ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் … Read more

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல்!

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் 7 லட்சத்து 100 ரூபாய் வருமானத்துக்கு 25 ஆயிரத்து 10 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இதில் திருத்தம் வெளியிட்ட நிதியமைச்சர், உச்சவரம்பை உயர்த்தியுள்ளார். இத்திருத்தத்தில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 700 ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு … Read more

ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

டெல்லி: ராகுல்காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்துள்ளார். வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும் முறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. உடனடியாக தகுதி நீக்கம் செய்வது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் – மவுனம் காக்கும் பிஹார் முதல்வர் நிதிஷ், ஒடிசா முதல்வர் நவீன்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். எனினும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். மம்தா பானர்ஜி: ராகுல் காந்தி விவகாரத்தில் மேற்குவங்க முதல்வரும் திரிண மூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மவுனம் காத்து இருந்தார். அவர் நேற்று தனது மவுனத்தை கலைத்தார். அவர் … Read more

கனடாவில் மகாத்மா காந்தியின் சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கல சிலைக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். ஹாமில்டனின் சிட்டி ஹால் அருகே வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றியதுடன், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் எழுதியுள்ளனர்.  Source link

ராகுல் காந்தி தகுதிநீக்கம்: விமர்சனத்தைத் தவிர்த்த அமெரிக்கா

வாஷிங்டன்: ராகுல் காந்தி தகுதிநீக்கம் விவகாரத்தில் இப்போதைக்கு தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க முடியாது என்று விலகி நிற்கிறது அமெரிக்கா. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா இந்தியாவை ஒரு வலுவான கூட்டாளியாகக் கருதுகிறது. இதனால், இந்தியா – அமெரிக்கா இடையே சில காலமாக நெருக்கமான நல்லுறவு நீடித்துவருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஜனநாயகத்தை மதிக்கிறோம் தனிப்பட்ட கருத்து இப்போதைக்கு சொல்ல முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை … Read more

பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் 200 ரூபாய் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை இந்த மானியம் பொருந்தும். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அகவிலைப்படி உயர்வால், 47லட்சத்து 58 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சத்து 76 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் … Read more

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு: அமைச்சரவையில் முடிவு

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது குறித்து கூட்டத்திற்குப் பின் … Read more

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு கண்டனம்..!!

2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கியது சூரத் … Read more

“பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளது!!”

பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாகத் திகழும் பாம்பே ஜெயஸ்ரீ முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார். அவர் இசைப் பயிற்சியை தனது தந்தை சுப்ரமணியன், தாய் சீதா சுப்ரமணியனிடம் தொடங்கியவர். பின்னாளில் டி.ஆர்.பாலாமணியிடமும், இசை மேதை … Read more