இந்தியா-பாக். எல்லையான குஜராத் ஹராமி நல்லாவில் புதைசேற்றிலும் ரோந்துப்பணி

இந்தியா – பாகிஸ்தான் எல்லையான, குஜராத்தில் உள்ள ஹராமி நல்லாவில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், புதைச் சேற்றில் சிக்காமல் இருக்க இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவருக்கொருவர் கயிறு கட்டி ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..  குஜராத் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியான கட்சு மாவட்டம் சர் க்ரிக் நீர்நிலைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. 1968-ல் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் இந்தியா தனது … Read more

திருப்பதி கோயில் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே பெண் ஒருவர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றும் வழக்கம்போல் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. இந்நிலையில் கோயில் அருகே உள்ள வராக சுவாமி பக்தர்கள் ஓய்வறை எதிரே உள்ள பொதுக்கழிவறையில் இருந்து திடீரென தீப்பற்றிய நிலையில் நேற்றிரவு பெண் ஒருவர் அலறி துடிக்கும் சத்தம் கேட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு … Read more

JNU-வில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்! கடும் கண்டனத்தை பதிவுசெய்த அரசியல் தலைவர்கள்

டெல்லி ஜே.என்.யூவில் மாணவ அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு மாணவர் மீது ஏ.பி.வி.பி யினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளர். மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு, இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் சென்றவர்கள், `ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை … Read more

சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்துள்ளது: சஞ்சய் ராவத் புகாருக்கு ஷிண்டே தரப்பு மறுப்பு

மும்பை: சிவசேனா கட்சிப் பெயர் மற்றும் அதன் சின்னத்தைப் பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். இதை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இந்நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினர். இதனால் … Read more

135 பேர் பலியான மோர்பி பாலம் சம்பவம்: 49 கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்திருந்தது.! குஜராத் எஸ்ஐடி அறிக்கையில் பகீர்

மோர்பி: குஜராத் மோர்பி பாலத்தின் 49 இணைப்பு கம்பிகளில் 22 கம்பிகள் துருப்பிடித்து இருந்ததாக அம்மாநில சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி பாலம் கடந்தாண்டு அக்.30ம் தேதி அறுந்து விழுந்த விபத்தில் 135 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்து வந்த அஜந்தா உற்பத்தி லிமிடெட் (ஓரேவா குழுமம்) நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் பெனிவால் … Read more

”எல்லாவற்றையும் செய்துவிட்டு திசைதிருப்புகிறது ABVP அமைப்பு”-காயமடைந்த தமிழக மாணவர் பேட்டி

”டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலுக்கு ஏ.பி.வி.பி. அமைப்பினரே காரணம்” என தாக்குதலுக்குள்ளான மாணவர் நாசர் தெரிவித்துள்ளார். டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்ரவரி 19), `ஐஐடி வளாகங்களில் பட்டியலின, இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவதன் பின்னணியில் உள்ள சாதி, மத ஒடுக்குமுறை’ என்பது குறித்த ஆவணப்படமொன்று, அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிடப்பட்டது. அதில் இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் மற்றும் … Read more

“காங். செயற்குழு உறுப்பினர்களில் பாதி பேரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்” – ப.சிதம்பரம் யோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு (Congress Working Committee) உறுப்பினர்களில் பாதி பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படுவது குறித்து இந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்படலாம் என காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செய்தி … Read more

இந்தியா மனிதநேயத்தை முதன்மையாக கொண்ட நாடு; உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக கருதுகிறோம்: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியா மனிதநேயத்தை முதன்மையாக கொண்ட நாடு; உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக கருதுகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு கஷ்டம் இருந்தால் அதற்கு உதவுவது இந்தியாவின் கடமை என்றும் துருக்கியில் ஆபரேஷன் தோஸ்தில் ஈடுபட்டுள்ள NDRF மற்றும் பிற அமைப்புகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

”அதானி குழுமத்துக்கு மேலும் கடன் வழங்க தயார்”- பேங்க் ஆஃப் பரோடா அறிவிப்பின் பின்னணி என்ன?

அதானி பற்றிய செய்திகள் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் ஊடகங்களில் தவறாமல் இடம்பிடித்து வருகின்றன. அந்த வகையில், இன்று அதானி குழுமத்துக்கு கூடுதலாக கடன்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதானியின் இன்றைய நிகர மதிப்பு ஹிண்டன்பர்க் (அமெரிக்க புலனாய்வு நிறுவனம்) வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் தொடர்ந்து பொருளாதாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்றுவரை, அதன் பங்குகள் வீழ்ச்சியிலேயே உள்ளன. அதன்படி, … Read more

நடுரோட்டில் சிறுமியின் முடியைப் பிடித்து இழுத்துச் சென்ற நபர்!! VIDEO

ஊதியம் பிரச்னையில் சிறுமி ஒருவரை கடையின் உரிமையாளர் கத்தியால் தாக்கி முடியைப் பிடித்து நடுரோட்டில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே ஹுடியரி என்ற பகுதியில் ஓம்கார் திவாரி (47) என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் 16 வயது சிறுமி ஒருவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சிறுமியிடம் ஓம்கார் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிக்கும், ஓம்காருக்கும் இடையே சம்பள பண பிரச்னை ஏற்பட்டது. இதனால் … Read more