டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா திஹார் சிறையில் அடைப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 26-ம் தேதி, 8 மணி நேர … Read more

திரிபுரா முதல்வராக மாணிக் சகா மீண்டும் தேர்வு

அகர்தலா: திரிபுரா முதல்வராக மாணிக் சகா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவி ஏற்க உள்ளார். 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 32 இடங்களை பிடித்து பா.ஜ மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் முதல்வர் தேர்வில் இழுபறி ஏற்பட்டது. பெரும்பாலான பா.ஜ எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தற்போதைய முதல்வராக உள்ள மாணிக் சகா மாற்றப்படுவார் … Read more

மக்கள் அதிர்ச்சி..!!உத்தரகண்டில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்..!!

உத்தரகாசி மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரோர் வனப்பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 2.5 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடர்ந்து மூன்றாவது நிலநடுக்கம் காலை 10.00 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக இருந்தது. இதன் காரணமாக, வீடுகளில் கதவு, ஜன்னல்கள் அதிர்ந்தன. பாத்திரங்களும் கீழே விழுந்ததால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், பதறியடித்து எழுந்து, வெளியே ஓடிவந்தனர். பீதி காரணமாக மீண்டும் வீடுகளுக்குள் … Read more

பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனை

லக்னோ: பசுவை, பாதுகாக்கப்பட்ட தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்தபிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் பசுக்களின் பராமரிப்புக்காக ரூ.750 கோடிஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம் உத்தர பிரதேசம் முழுவதும் பல பகுதிகளில் கோசாலை அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பசுவதையை தடுக்க … Read more

மேலும் 65 காலாவதியான சட்டங்களை நீக்க மசோதா: ஒன்றிய சட்ட அமைச்சர் ரிஜிஜூ தகவல்

பனாஜி: கோவாவில் நடந்த 23வது காமன்வெல்த் சட்ட மாநாட்டில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்று பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4.98 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. காகிதம் இல்லா நீதித்துறையை உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம் இவற்றை முடித்து வைப்பதே அரசின் நோக்கமாகும். மக்களுக்காகவே சட்டங்கள் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அந்த சட்டங்கள் தடையாக, சுமையாகும் பட்சத்தில் அவை நீக்கப்பட வேண்டும். கடந்த 8 ½ ஆண்டுகளில் 1,486 வழக்கொழிந்த, தேவையற்ற … Read more

சிசோடியாவுக்கு மேலும் 14 நாள் நீதிமன்ற காவல்..!!

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, கடந்த 27-ம் தேதி டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 9 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க … Read more

பூமியின் வளிமண்டல பகுதிக்கு செயலிழந்த செயற்கைகோளை திரும்ப கொண்டு வரும் இஸ்ரோ: சிக்கலான பணி இன்று நடக்கிறது

பெங்களூரு: இஸ்ரோ , பிரான்ஸ் விண்வெளி நிறுவனம் இணைந்து  2011ம் ஆண்டு அக்டோபர் 21ல் மேகா டிரோபிகியூஸ்-1 (எம்டி-1) செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பின. பூமியின் வானிலை மற்றும் காலநிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். தற்போது, செயலிழந்து விட்ட இந்த செயற்கைகோளை விண்வெளியில் இருந்து அகற்றி அதனை பூமியின் வளிமண்டல பகுதிக்கு திரும்ப கொண்டு வரும் பணியை இஸ்ரோ இன்று மேற்கொள்ள உள்ளது. இந்த செயற்கைகோள் 1000 கிலோ எடை கொண்டது. … Read more

நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் பிரபலங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: பிரபலங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாத எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பொருளையும் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் விளம்பரப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், தொலைக்காட்சி ஆகியவற்றில் பிரபலங்கள் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர். இது வழக்கமான ஒன்றாக உள்ளது. இருப்பினும் அந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருட்களின் தரங்கள் சரியாக இருக்கிறதா என்றால் அது பல … Read more

கோடை வெப்பம் சமாளிப்பது எப்படி?..பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்த ஆண்டு கோடையில் வெப்பமான வானிலையை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.  இந்த ஆண்டும் கோடையில் அதிகமான வெப்பம் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கோடையில் அதிகப்படியான வெப்ப வானிலையை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு … Read more

இந்தியாவில் எம்பியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.? – ராகுல் காந்தி பேச்சு.!

இந்தியாவில் எம்பியாக இருப்பது கடினமான காரியம், பாஜகவை தோற்கடிக்க முடியாது என்பது கட்டுகதை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் துடிப்பான தலைவர் ராகுல் காந்தி ஒரு வார கால பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு உலகப் புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அவர் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் எதிர்கட்சிகள் உளவு பார்க்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அதேபோல் சீனா இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர்களை ஆக்கிரமித்துள்ளது, … Read more